tngea

Pages

Thursday, May 27, 2010

ஏர் இந்தியா வேலை நிறுத்தம்

ஏர் இந்தியாவை முடிவிட சதி: தொழிற்சங்கம் குற்றச்சாற்று
வியாழன், 27 மே 2010( 17:25 IST )

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தொழிலாளர்களை தனது தவறான நடவடிக்கைகளினால் தூண்டிவிட்டு, அதன் மூலம் வேலை நிறுத்தத்தை உருவாக்கி, அதையே காரணமாக்கி நிறுவனத்தை மூடிவிட சதி நடக்கிறது என்று விமான ஊழியர் சங்கம் குற்றம் சாற்றியுள்ளது.தொழிற்சங்க நிர்வாகிகள் ஊடகங்களிடையே பேசக்கூடாது என்று தடை விதித்ததைக் கண்டித்து ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. நீதிமன்றம் வேலை நிறுத்தம் சட்ட்ப்படியானது அல்ல என்று கூறியது. இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 58 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 24 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இரண்டு தொழிற்சங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துப் பேசிய ஏர் கார்ப்பரேஷ்ன் எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச் செயலர் ஜே.பி. கடியன், தொழிலாளர்களை தூண்டிவிட்டு, அதன் மூலம் வேலை நிறுத்தத்தை உண்டாக்கி, பிறகு அதையே காரணமாக்கி ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவையை முடக்கிவிட நிர்வாகம் சதி செய்கிறது என்று குற்றம் சாற்றியுள்ளார்.“ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அர்விந்த் ஜாதவ் சர்வாதிகாரமாக செயல்படுகிறார். ஏர் இந்தியா நிறுவனத்தை ஒழித்துவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளார். பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்ய தூண்டிவிட்டு,பிறகு அதையே காரணம் காட்டி நிறுவனத்தை மூடிவிடும் சதித்திட்டத்துடன் செயல்படுகிறார்” என்று கடியன் கூறியுள்ளார். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12ஆம் தேதி முதல் மீண்டும் வேலை நிறுத்தம் செய்ய அறிவிக்கை செய்துள்ளதாகவும் கடியன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment