tngea

Pages

Sunday, May 23, 2010

அரசு அலுவலர் ஒன்றிய மாநாட்டில் முதல்வர் பேச்சு

அரசு ஊழியர்கள் நன்றி மறக்கக் கூடாது : முதல்வர் கருணாநிதி பேச்சு
- நன்றி - தினமலர் - சென்னை - 23-05-10 -

""நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளை அரசு ஊழியர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்,'' என, அரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாட்டில், முதல்வர் கருணாநிதி பேசினார்.


தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய 57வது மாநில மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடாக இது நடத்தப்பட்டது. விழாவில், மாநாட்டு மலரை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளுக்கேற்ப சூரியமூர்த்தி இந்த நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்துகிறார். நன்றல்ல அன்றே மறப்பது நன்று என்பதற்கேற்ப நான், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளேன். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் செலவினமாக கருதவேண்டியதில்லை. அரசு ஊழியர்கள் அரசின் திட்டங்களை, பணிகளை செய்து முடிப்பவர்கள். அவர்கள் இல்லையென்றால் அரசு இயந்திரம் இயங்காது. அரசு ஊழியர்களுக்கு தரப்படும் ஊதியம் மூலதனமே என, நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அரசு ஊழியர்கள் தான் அரசின் பணிகளை செய்து முடிக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஓட்டுக்காக சலுகைகள் தரப்படுகின்றன என, கருதுவது தேவையற்றது.


அரசு ஊழியர்களும் சமுதாயத்தில் ஓர் அங்கம்தான். அவர்களை சமுதாயத்திலிருந்து தனியாக பிரித்து பார்க்க முடியாது. அரசு ஊழியர்களின் முடிவு தான், அரசுகளை முடிவு செய்கின்றன. தேர்தல்களில் முதலில் அரசு ஊழியர்களின் ஓட்டுகள் எண்ணப்படும் போது, எந்த அணி அதிக ஓட்டுகளை பெறுகிறதோ அது தான் வெற்றி பெறும் என்ற முடிவுக்கு வந்துவிட முடியும். அந்தளவுக்கு அரசு ஊழியர்களின் வலிமை அமைந்துள்ளது. அரசு ஊழியர்களும் தொழிலாளர்கள் தான். நாங்களும் தொழிலாளர்கள் தான். தொழிலாளர்களிடம் பாகுபாடு பார்க்க முடியாது. தொழிலாளர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவது அரசின் கடமை. அரசை அமைக்கவும்; அகற்றவும் சக்தி படைத்தவர்கள் நீங்கள். கடந்த காலத்தை நினைத்து பார்க்காமல், நிகழ்காலத்தில் எதிர்காலத்தையும் வருங்கால சந்ததியினரையும் மனதில் கொண்டு, பணியாற்ற வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று என்பதை மனதில் கொள்ளுங்கள். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

மாநாட்டிற்கு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சூரியமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச் செயலர் சண்முகராஜன் வரவேற்றார். மாநாட்டு நினைவு கல்வெட்டை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பேசினார். மாநாட்டு மலரை அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டு பேசினார். சங்க பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள், ஆளும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழகம் முழுவதிலுமிருந்து, ஏராளமான வாகனங்களில் அரசு ஊழியர்கள் வந்திருந்தனர். மாநாடு நடந்ததால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக மாநாட்டை ஒட்டி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளர் அரசுப் பணியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. லயோலா கல்லூரியில் இருந்து துவங்கிய இந்த பேரணி வள்ளுவர் கோட்டத்தில் முடிந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.


2 comments:

  1. nandri arivippu maanadu nandriyodu mudindhuvittathey- arasu oozhiyargalukku nandri arivippu maanattal enna payan kidaithathu? Maanattai nadathiyavar thaan pathil solla vendum- MURUGADOSS, Dharapuram

    ReplyDelete
  2. Thangal nadathiyadu Nantri Arivippu Manaduthan athanal korikkai ethanaiyum vaikkavillai. Enave arasu korikkai edaiyum arivikkavillai entru sonnavargal etharga 12.6.10 antru Tiruppuril Manattu vilakka koottam nadathinargal? Ontrum puriyavillai.Oruvelai eppadi nantri sonnargal enpathai vilakkiyiruppargalo. RAJAGOPALAN,TIRUPPUR.

    ReplyDelete