tngea

Pages

Friday, May 14, 2010

`பெண்கள் வேலைக்கு செல்வது சட்ட விரோதம்’


`பெண்கள் வேலைக்கு செல்வதும் குடும்பத்தைக் காப்பாற்றுவதும் சட்ட விரோதம்’

லக்னோ, மே 12-பெண்கள் பொது இடங்களில் வேலைக்குச் செல்வதும், பெண்ணின் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துவதும், ஷரியத் சட்டப்படி சட்ட விரோதமானது என்று டாருல் உலூம் தேவ் பாண்ட் அமைப்பு மதக்கட்டளையை வெளியிட்டுள்ளது. பொது மற்றும் தனியார் துறைகளில் முஸ்லிம் பெண்கள் வேலை பார்ப்பது ஷரியத் சட்டப்படி சட்டவிரோதமாகும். இவ்விடங்களில் ஆணும் பெண்ணும் இணைந்து வேலை பார்க்கிறார்கள். ஆண்களுடன் பெண்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். முகத்திரை அணிவதில்லை என்று மூன்று மதகுருக்கள் கொண்ட குழு அறிவித்துள்ளது. இந்திய முஸ்லிம்களின் ஆன்மீகக் காவலன் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் தேவ் பாண்ட் முஸ்லிம் பெண்களை மீண்டும் கற்காலத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. பழமைவாதம் மிகுந்த இஸ்லாமிய நாடுகளில் கூட பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை இல்லை. தாலிபான்கள் உச்சத்தில் இருந்த வேளையிலும், பெண் மருத்துவர்கள் ஆண்களுக்கும், ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடாது என்று தடை விதித்தனர். பெண்கள் வேலைக்கு செல்வதை தடுக்கவில்லை. இந்த மதக்கட்டளையை பல மதகுருக்கள் எதிர்த்துள்ளனர். “ஷரியத் சட்டப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு. ஷரியத்தைப் பின்பற்றும் ஆண் வேலைக்குச் செல்லலாம் என்றால் பெண் ஏன் வேலைக்குச் செல்லக்கூடாது’’ என்று லக்னோவின் முக்கிய மசூதியான ஈத்க்க மசூதி இமாம் ரஷீத் கேள்வி எழுப்பியுள்ளார். வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் ஷரியத்துக்கு எதிராகச் செயல் படுகிறார்கள் என்று கருத வேண்டிய அவசியம் இல்லை என்று லக்னோ கல்லூரி விரிவுரையாளரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரிய உறுப்பினருமான ருக்ஷணா கூறியுள்ளார். சவுதி ஏர்லைன்ஸில் பணிபுரியும் விமானப் பணிப்பெண்கள் பர்தா அணிவதில்லை என்று ஒரு கணினி தொழில்புரியும் முஸ்லிம் பெண் கேள்வி எழுப்புகிறார்.

No comments:

Post a Comment