tngea

Pages

Sunday, May 23, 2010

நன்றி தினமணி சென்னை 23-05-10

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம், சலுகையால் தமிழக பொருளாதாரம் உயரும்: முதல்வர்


சென்னை, மே 22:அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகளால் தமிழகத்தின் பொருளாதாரம் மேலும் உயரும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 57-வது மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்து. இதில் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு முதல்வர் பேசியதாவது:

அன்றாடம் உழைத்து,குடும்​பத்தையும் காப்​பாற்​றிக் கொண்டு, பொதுவாழ்வில் உள்ள பல்வேறு சங்கடங்களை எல்​லாம் சந்தித்து வாழும் பெரிய சமுதாயமாக அரசு அலு​வ​லர்​கள் உள்​ள​னர். அவர்​களும் சமுதாயத்தின் ஓர் அங்கம் தான். சமுதாயத்துடன் நெருங்​கிய தொடர்பு அவர்களுக்கு உள்ளது.

அரசு அலு​வ​லர்​க​ளின் வாக்கு,ஒரு தேர்தல் முடிவை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு உள்ளது.

முத​லில் அஞ்​சல் வாக்​கு​களை எண்ணி முடித்​தால்,​​ அதுவே மொத்த வாக்​கு​க​ளுக்​கான குறிப்பை உணர்த்​தக் கூடி​ய​தாக உள்​ளது.​​ இத்​த​கைய ​ ஜன​நா​யக ஏற்​பா​டு​க​ளுக்கு அடிப்​ப​டை​யாக அமைந்​தி​ருப்​பது அரசு ஊழி​யர்​கள் தான்.​ ​

நீங்​கள் உணர்ச்​சி​வ​சப்​ப​டக் கூடி​ய​வர்​கள் அல்ல.​ நம்மை ஆளு​கின்ற வர்க்​கம் எது,​​ என்று சிந்​தித்து அதற்​கேற்ப முடி​வு​களை எடுக்​கக் கூடி​ய​வர்​கள்.​ அத​னால் தான் நானும்,​​ நீங்​க​ளும் இந்த விழா​வில் பங்​கேற்​கக் கூடிய சூழ்​நிலை உரு​வா​கி​யுள்​ளது.​

நமது எதிர்​கா​லத்தை நிர்​ண​யிக்​கக்​கூ​டிய, நிகழ் காலத்தை நடத்​தக் கூடிய,நமது சந்​த​தியை வாழ வைக்​கக் கூடிய ​இயக்​கம் கட்​சி​யின் பெய​ரால் உரு​வா​னது அல்ல.​ உங்​க​ளது உள்​ளம் மற்​றும் உழைப்​பின் அடிப்​ப​டை​யில் உரு​வா​னது இந்த இயக்​கம்.​ நீங்​கள்,உங்​க​ளின் ஒரு சில கோரிக்​கை​களை நிறை​வேற்​றி​ய​தற்​காக மட்​டுமே,​​ என் மீது நீங்​கள் அன்பு காட்​ட​வில்லை. நான் வருங்​கா​லத்​தி​லும் உங்​கள் கோரிக்​கை​களை நிறை​வேற்​று​வேன் என்ற நம்​பிக்கை தான் அன்​புக்​குக் கார​ணம்.​ அர​சுக்கு நன்றி பாராட்​டும் வகை​யில் இந்த மாநாடு நடை​பெ​று​கி​றது.​ இந்த மாநாட்டை மிகுந்த பூரிப்புடன் ஏற்​கி​றேன்.

​ பல்​வேறு முனை​க​ளில் பாடு​ப​டும் நீங்​கள் தமி​ழ​கத்​தின் பொரு​ளா​தா​ரத்தை மேலும்,மேலும் உயர்த்த வேண்டும். அரசு அலுவலர்​க​ளின் ஊதியத்துக்காகவும்,செலவுகளுக்காகவும் தான் அரசு வருவாயில் 97 சத​வீதம் செலவாகி​றது என்று முந்தைய ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது.அரசு அலு​வலர்களுக்கான சம்பள உயர்வு, சலுகைகள் என்​பது, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றப் பாடுபடும் அவர்களின் உழைப்புக்குத் தருவதாகும். அது திட்டச் செலவுடன் கூடியதே தவிர, தனிச் செலவு அல்ல.

முத்தனோ அல்லது முனியனோ அவர்களின் வியர்வை சிந்திய உழைப்பால் தான், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் தான் இந்த நாட்டினுடய முன்னேற்றம் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதை வீண் செலவாகவோ அல்லது பொருளாதாரத்தை சீர​ழிப்பதாகவோ நாங்கள் கருதவில்லை. அப்படி கருதுகின்றவர்களுக்கு பொரு​ளாதா​ரம் தெரியவில்லை என்று கூற மாட்டேன். பொருளாதா​ரத்தை முறையாகப் படிக்க வேண்டியவர்கள் என்​பதை மட்டும் அவர்களுக்குச் சொல்லுவேன்.

அரசு ஊழி​யர்​க​ளாக இருக்கலாம்.​ ஆனால், அவர​க​ளும் தொழி​லா​ளர்​கள் தான்.​ நான் முதல்​வ​ராக இருக்​க​லாம்.​ ஆனால்,நானும் ஒரு தொழி​லாளி தான். அமைச்சர்கள் உள்​ளிட்​டோ​ரும் தொழி​லா​ளர்​கள் தான்.​ சமு​தா​யம் மேம்​பட எங்களுடைய உழைப்பை உவந்து வழங்​கு​கி​றோம்.​ அதே போல நீங்​க​ளும் உங்​க​ளின் உழைப்பை அளிக்​கி​றீர்​கள்.​ எனவே நீங்​கள் வேறு,​​ நாங்​கள் வேறு அல்ல.​

​மக்​க​ளுக்​கான சேவை​யில் உங்​க​ளுக்​கும் பங்​குண்டு. அர​சின் நிறை,குறைகளில் எல்​லாம் உங்​க​ளுக்​கும் பொறுப்பு உண்டு.​ எனக்​கும் பொறுப்பு உண்டு.​ உங்​க​ளுக்கு இன்​னல் வந்த போதெல்​லாம் நான் உங்​கள் பக்​கமே இருந்​தேன்.​ இப்​போ​தும் இருக்​கின்​றேன்.​ இனி எப்​போ​தும் இருப்​பேன் என்​றார் முதல்​வர் கரு​ணா​நிதி.​

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்​கள் துரை​மு​ரு​கன்,பொன்​முடி,தமிழ்​நாடு அரசு அலு​வ​லர் ஒன்றியத்தின் மாநில தலை​வர் கோ. சூரியமூர்த்தி,மாநில பொதுச் செயலர் இரா.சண்​முகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment