tngea

Pages

Tuesday, May 18, 2010

தலைமைச் செயலாளருடன் சந்திப்பு

தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள இன்று (18-05-10 )தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அவர்களை சந்தித்து ஒரு நபர் குழு அறிக்கை தொடர்பாக அரசுஊழியர் சங்கம் மற்றும் துறைவாரியான சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர் . தலைமைச் செயலாளர் இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்


பல்வேறு துறைகளில் பல ஆண்டு காலமாக பணி வரன் முறை செய்யப்படாமல் உள்ள, கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள், சென்சசில் பணியாற்றி தற்போது பல்வேறு துறைகளில் பணியில் உள்ளவர்கள் , தொகுப்பூதியத்தில் இருந்து முறையான ஊதியத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஊழியர்கள் ஆகியோரின் பணியினை பணி நியமன தடை ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியான 29-11-2001 -லிருந்து ஒரு பொதுவான விதி தளர்வு அளித்து வரன் முறை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.


ஆயிரக்கணக்கான அரசுஊழியர்கள் மீது பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என் வலியுறுத்தி முறையீடு அளிக்கப்பட்டது.

அலுவலகங்களில் பணியாற்றும் மகளிர் மீதான் பாலியல் வன்முறைகளை விசாரித்திட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் கமிட்டிகள் அமைக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொது மாறுதல் மேற்கொள்ள தடை நீடிக்கும்போது ஊழியர்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசிலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

அரசுஊழியர் சங்கத்தின் 8-வது மற்றும் 9-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவதித்திட நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

புள்ளியல்துறையில் நேரடி நியமனத்தை தவிர்த்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரசு அங்கிகாரம் வழங்குவதாக அறிவித்த்வாறு வழங்கி அரசு ஆணை வெளியிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

தலைமைச் செயலாளர் அவர்கள் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளோடு விவாதித்தார். இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். .
தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்

No comments:

Post a Comment