tngea

Pages

Friday, May 14, 2010

ஜா‌‌தி வாரியாக கணக்கெடுப்பு நடத்த உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம் உத்தரவு


ஜா‌‌தி வாரியாக கணக்கெடுப்பு
ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை ஆணையருக்கு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி எ‌ன்பவ‌ர் உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்த பொதுநல மனு‌வி‌ல், தற்போது 2011-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த கணக்கெடுப்பின்போது ஜாதி வாரியாகவும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், ஏராளமான அமைப்புகளை சேர்ந்தவர்களும், ச‌ட்டம‌ன்ற, நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், மத்திய அரசு இதனை கருத்தில்கொள்ளவில்லை. பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் முன்னாள் தலைவர் காகா கலேக்கர், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தார். அதுபோலவே மண்டல கமிஷனும் 1979-ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி வாரியாகவும் கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் அது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 340க்கு முரணானதாக இருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை கண்டறிவதற்கு ஜாதி வாரியான கணக்கெடுப்பு அவசியம். எனவே, நாடு முழுவதும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த புதுடெல்லியில் உள்ள இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனுவில் கூறியிருந்தார். இ‌ந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) தர்மாராவ், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் ‌விசா‌ரி‌த்து ‌பிற‌ப்‌பி‌த்த உ‌த்தர‌வி‌ல், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்து 2009-ஆம் ஆண்டு முத‌ன்மை அம‌ர்வு ஒரு உத்தரவு பிறப்பித்தது. 1931ஆம் ஆண்டுக்கு பிறகு ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கு பிறகு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிரிவினரின் மக்கள் தொகை பன்மடங்கு பெருகியுள்ளது. இதற்கேற்ப இடஒதுக்கீடு வழங்குவதற்கும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடவேண்டியது அவசியம். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை ஆணையருக்கு அப்போது உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு இந்த வழக்கிற்கும் பொருந்தும். மனுதாரரின் மனு ஏற்கப்படுகிறது எ‌ன்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment