tngea

Pages

Wednesday, May 26, 2010

ருச்சிகாவிற்கு நியாயம் கிடைத்ததா

ருச்சிகாவிற்கு நியாயம் கிடைத்ததா ?
1990-ல் பள்ளி மாணவியாகவும், டென்னிஸ் விளையாட்டு வீராங்கானையாகவும், திகழ்ந்த ருச்சிகாவை அப்போது ஹரியானா மாநில காவல் தலைமை ஆய்வாளராக இருந்த எஸ்.பி.எஸ். ரத்தோர் மானபங்கம் செய்தது நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு - 19 ஆண்டுகளுக்குப் பிறகு - 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும்விதிக்கப்பட்டுள்ளது.
மானபங்கப்படுத்தப்பட்ட ருச்சிகா 1993ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தள்ளியது அவளுடைய சகோதரனான தன்னை ரத்தோர் சித்ரவதை செய்ததுதான் என்று அஷு கிர்ஹோத்ரா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ரத்தோருக்கு எதிராக ருச்சிகாவின் அண்ணன் அளித்த புகாரின் பேரில் புதிதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்ச்குலாவில் உள்ள வீட்டில் ருச்சிகா தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினரின் துன்புறுத்தலை தாங்காமலும், தனது அண்ணனுக்கு எதிராக பொய் வழக்குகள் தொடரப்பட்டதை எதிர்கொள்ள முடியாத நிலையிலும் ருச்சிகா தற்கொலை செய்து கொண்டார் அவருடைய புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நிரூபனமானால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306-ன் படி (தற்கொலைக்குத் தூண்டுதல்) ரத்தோருக்கு அதிகபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரத்தோருக்கு நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத்தண்டனை மிகக் குறைவானது என்று மத்திய புலனாய்வுக் கழகம் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் அவருக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ருச்சிகா தற்கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு> மத்திய புலனாய்வுக் கழகம் மற்றும் இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.. 14 வயதான ருச்சிகாவை கடந்த 1990ஆம் ஆண்டு ரத்தோர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு, மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

25-05-10 அன்று இந்த வழக்கில் சண்டிகர் அமர்வு நீதிமன்றம் விசாரணை நீதி மன்றம் அளித்த தண்டனை அதிகரித்து 18 மாத சிறை தண்டனையாக மாற்றி தீர்ப்பு வழங்கியது .

26-05-10 அன்று ருச்சிகா கிர்ஹோத்ரா மான பங்க வழக்கில் அமர்வு நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து பஞ்சாப் - ஹிரியானா உயர் நீதிமன்றத்தில் முன்னாள் காவல் அதிகாரி ரத்தோர் மேல் முறையீடு செய்துள்ளார். விசாரணை நீதிமன்றம் தனக்கு விதித்த 6 மாத கடுங்காவல் சிறைத் தண்டனையை 18 மாதங்களாக அதிகரித்த சண்டிகார் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரியும், தன்னை பிணையில் விடுவிக்குமாறும் கோரி ரத்தோர் இந்த மேல் முறையீட்டைச் செய்துள்ளார். தனக்கு விதிக்கபட்ட தண்டனையை அமர்வு நீதிமன்றம் அதிகரித்தது ஊடகங்களின் அழுத்தம் காரணமாகத்தான் என்று கூறியுள்ள ரத்தோரின் மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
கடந்த 20 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் குற்றவாளி செய்துகொண்ட மேல்முறையீடு மனுவின் மீது உடனடி விசாரணையும் ருச்சிகாவிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment