சட்ட மேலவையில் 78 உறுப்பினர்கள்: நரேஷ் குப்தா
சென்னை, வெள்ளி, 21 மே 2010( 16:10 IST )
தமிழக சட்ட மேலவை 78 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும் என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்.தமிழகத்தி்ல் சட்ட மேலவை அமைப்பதற்காகத் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சட்ட மேலவை அமைக்கும் பணி முறைப்படித் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக சட்ட மேலவை 78 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும் என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார். அதில், 26 உறுப்பினர்களை சட்டமன்ற உறுப்பினர்களும், 26 உறுப்பினர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், 7 பேரை பட்டதாரிகளும், 7 பேரை ஆசிரியர்களும் தேர்ந்தெடுப்பார்கள். மீதி 12 பேர் பலதுறைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என நரேஷ்குப்தா மேலும் தெரிவித்தார்.சட்ட மேலவை அமைக்கும் விஷயத்தில் ஆந்திரத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் நரேஷ்குப்தா தெரிவித்திருக்கிறார்.
Khaja Mydeen from coimbatore 7 uruppinargalai pattatharigal thernthedukka enna valimurai seyyavendum. Ithil pangerkka enna valimurai
ReplyDelete