tngea

Pages

Tuesday, June 29, 2010

போபால் மறுக்கப்பட்ட நீதி

குற்றத்துக்குரிய தண்டனையில்லை
-வி.ஆர்.கிருஷ்ணய்யர்

போபால் விஷவாயு வழக்கு முடிந்து, எட்டு அதிகாரிகளுக்கு மட்டும் தலா இரண்டு வருடங் கள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.26 வருடங்களுக்கு முன் நடந்த போபால் விஷவாயுக் கசிவு கோரவிபத்தில் 25 ஆயி ரம் பேர் பலியாயினர். இன்றும் கூட, அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு நோய் களுக்கு இரையாகி வருகின் றனர். மேலும் அங்கே 350 டன் எடையுள்ள ரசாயனக் கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு விட்டது. குற்றத்தின் பரிமாணம் மிகமிகப் பயங்கரமானது ஆகும். ஆனால் தண்டனையோ மிக மிக லேசானதாகிப் போயிற்று. இன்றும் மேற்படி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மேலா ளரான வாரன் ஆண்டர்சன் தனது தாய்நாடான அமெரிக்கா வில் சர்வ சுதந்திரத்துடன் உலவி வருகிறார். அவர் போபால் சம்பவம் நடந்த ஒருசில மணித் துளிகளிலேயே இந்திய நாட் டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை அவ்வாறு தப்பிச்செல்ல விட்டவர்கள் யார்? மாநில நிர் வாகிகளா, மத்திய அமைச்சர் களா என்றெல்லாம் தற்போது பட்டிமன்றம் நடந்து வருகிறது. நீதிமன்ற வளாகத்தில் எவருமே வாரன் ஆண்டர்சன் பற்றிப் பேசவேயில்லை. சர்வதேச சட்டங்களை மதிக்காத அமெரிக்கா அமெரிக்க அரசைப் பொறுத்தமட்டில் அது எந்த ஒரு சர்வதேச சட்டத்தையும் மதிப் பதே கிடையாது. அதேபோன்று உலக அரங்கில் பகாசுர பன் னாட்டு நிறுவனங்கள் புரிகின்ற குற்றச்செயல்கள் யாவும் மிக மிக அலட்சியப்படுத்தப்படுகின்றன.இந்திய மக்களைப் பொறுத்த வரை நம் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கு உரிமை உள்ளது. போபாலில் நடந்தது மிகப்பெரிய தோர் வரலாற்றுக் கொடுமை யாகும். அந்தச் சம்பவத்தைப் பற்றி அமெரிக்கர்கள் மிகவும் துச்சமாகக் கருதுகிறார்கள். அவர்கள் இந்தியாவைத் தங் களுடைய காலனி நாடாகக் கருதி இறுமாப்புடன் நடந்து வருகிறார்கள். நீண்ட நெடிய தாமதம்போபால் சம்பவமானது 1984ம் வருடம் நடைபெற்றது. இந்திய நீதித்துறையானது அது பற்றி விசாரித்துத் தீர்ப்பளிப்ப தற்கு 26 வருடங்கள் தேவைப் பட்டன. இது வெட்கப்படவேண் டியதோர் சங்கதியாகும். விஷவாயுக் கசிவினால் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மேற்படி தொழிற்சாலை அதி காரிகள் எட்டுப்பேர்களுக்கு வெறும் 2 வருடத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தொழிற் சாலையின் பிரதம நிர்வாகியைத் தப்பவிட்டுவிட்டார்களே! மேற்படி நிர்வாகிக்குத் தெரியா மல் அத்தகைய விபத்து ஏற்பட் டிருக்கவே முடியாது. தலைமை நிர்வாகி என்ற வகையில் அவர் தான் நடந்த வெங்கொடுமைக் குப் பொறுப்பேற்றிட வேண்டும்.நிர்வாகமே பொறுப்புகார்பைடு தொழிற்சாலை நிர்வாகமும், அதனுடைய தலை வராயிருந்த வாரன் ஆண்டர் சனும் நடந்தவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் அவரை எந்த ஒரு நீதிமன்றமும், விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இந்திய அரசாங்கமானது ஆண்டர் சனை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரு வதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மேற்படி பிரச் சனையில் இந்தியப் பிரஜைகளு டைய உயிர்கள் அவ்வளவு மலி வானவையாகக் கருதப்படுவது ஏன்? ஆண்டர்சன் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 304வது பிரிவின்படி தண்டிக்கப்பட வேண்டியதோர் குற்றவாளியா வார். ஆனால் அவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுநாள் வரை பதிவு செய்யப்படவில் லை. ஆண்டர்சனைப் போன்ற பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய குற்றங்களுக்கு தண் டனை கிடையாதா? அப்படியா னால் நம்முடைய குற்றவியல் சட்டங்கள் யாவும் வெறும் கேலிப்பொருட்கள்தானா? விபத்துகள் பற்றிகதிர்வீச்சுகள், எரிவாயுக் குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றால் பல் வேறு விதிமுறைகள் மீறப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக எண்ணிலடங்கா மனித உயிர் கள் பலியாகின்றன. அதைத் தடுத்திடுவதற்கு எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை! இது மிகவும் பரிதாபத்துக்குரியதோர் அம்சமாகும்.1984ம் வருடம் போபாலில் அத்தகையதோர் பேரழிவுதான் நடந்தேறியது. விஷவாயுக் கசிவி னால் 25 ஆயிரம் பேர் கொல்லப் பட்டனர். யூனியன் கார்பைடு நிர் வாகத்தையும், ஆண்டர்சனை யும் கூண்டிலேற்றியே தீரவேண் டும் என்று சகல இடதுசாரி களும் பொதுமக்களும் திரண் டெழுந்து மத்திய அரசை நிர்ப் பந்தித்திட வேண்டும். சட்டத் திற்கும், நீதித்துறைக்கும் மன சாட்சி இருந்தாக வேண்டும்.
நன்றி: இந்து - தமிழில்: கே.அறம்

இந்தப் பிரச்சனை பற்றி அன்றைக்கே பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-‘இனி வருங்காலத்தில் மனித சமூகமானது இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்லப்படும். மனித சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளைத் தந்து கொண்டுள்ள அறிவியல் சாதனங்களால் சிலசில சந்தர்ப்பங்களில் பேரழிவுகளும் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. எச்சரிக்கை’

No comments:

Post a Comment