tngea

Pages

Monday, February 28, 2011

சாலைப் பணியாளர்களுக்கு யார் வேலை கொடுத்தது

அண்டப் புளுகும்! ஆகாசப் புளுகும்!
-க.ராஜ்குமார்

நன்றி தீக்கதிர்
ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல் வதின் மூலமாக அதை உண்மையென நம்ப வைத்துவிடலாம் என்பது சர்வாதிகார மனப் போக்கு ஆகும். இதைத்தான் முதல்வரின் செயலாளர்களும் திரும்பத் திரும்ப செய்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் பணி தரப்பட்டு அவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருப்ப தாக உண்மைக்கு புறம்பான தகவலை முதல் வர் முரசொலியில் (27-02-11) தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் சாலைப் பணியாளர் கள் வேலை இழந்தது 2001-ல் இல்லை 5-09-2002-ல் (அரசு ஆணை 160 நெடுஞ் சாலைத் துறை, நாள் 5-09-2002 ) தான் அவர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் தொடர்ச் சியான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலொடு நடத் திக் கொண்டே, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் வந்தனர். அன்றைய அண்ணாதிமுக அரசு, அரசு ஆணை (நிலை) எண். 22நெ.(எச்.எம்.2) துறை, நாள் 10-02-06 ல் மீண்டும் பணியில் அவர்களை அமர்த்தி ஆணையிட்டது. ஆனால் முதல்வர் தனது கடிதத்தில், திமுக ஆட்சியில் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள் ளார். இது ஏதோ தவறுதலாக சொல்லப்பட்டது என கருத வாய்ப்பில்லை. ஏனெனில் தமிழ் நாடு அரசுஊழியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு சென்னையில் 19-08-2007-ல் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் அந்த மேடையிலும் இதே தவறான தகவலை தெரிவித்தார். அதற்கு சாலைப் பணியாளர் சங்கத்தின் அன்றைய மாநிலத் தலைவர் சண்முகராஜாவும், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்துவும் மறுத்து அறிக்கை விட்டனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இன் னொரு தவறான தகவல் கடந்த 25-02-11 அன்று முதல்வரின் கோபாலபுர இல்லத்தில் சாலைப் பணியாளர்களின் பிரதிநிதிகளாக தான் ஐந்தாறு பேரை சந்தித்ததாக குறிப்பிட் டுள்ளார். இந்த ஐந்தாறு பேர் யார் யார் என்பது கூட முதல்வர் அறியவில்லை போலும். கலைஞர் முதல்வராக இருந்தாலும் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் தங்கள் மாநாட்டிற்கு தவறாமல் இதுவரை அழைத்து வருகின்ற சங்கமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன், மாநிலப் பொருளார் என்.இளங்கோ, மாநிலச் செயலாளர் மு.அன்பரசு மற்றும் மாநில துணைத்தலைவர் ப.ரவி ஆகியோர் முதல் வரை சந்தித்துள்ளனர் என்பது கூட முதல் வர் அறிந்திருக்கவில்லை என்பது வினோத மாக உள்ளது. அல்லது அரசு ஊழியர் சங் கத்தை அறியாதவராக தன்னை காட்டிக் கொள்ள முதல்வர் முயற்சிக்கிறாரா?

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றப்படும் என வாக்குறுதி தந்த திமுக அரசு, கடந்த 5 ஆண்டுகாலத்தில் அதை செய்ய தவறியதை கண்டித்துத்தான் சாலைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டபோது ஒன்றுபட்டு போராடி மீண்டும் பணிபெற்ற சாலைப் பணியாளர் சங்கத்தை பிளவுபடுத் தியது திமுக ஆட்சியாளர்கள்தான் என்பதை சாலைப் பணியாளர்கள் நன்கு உணர்வர்.

கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ள மற்றொரு தவறான தகவல், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் அளித்த தோடு ஓய்வூதியம் தரவும் ஒப்புக் கொண்டி ருப்பதாக குறிப்பிட்டிருப்பதுதான். கடந்த 25 ஆண்டுகாலமாக காலமுறை ஊதியம் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் சத்து ணவு ஊழியர்களுக்கு கலைஞர் தந்திருப்பது சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்படாத ஊதி யம்தான் என்பதை மறைக்க முதல்வர் முயல் கிறார். 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை ஏற்று தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊதிய மாற்ற ஆணையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.4800 மற்றும் தரஊதியம் ரூ.1300 (ரூ.5100) ஆகும். ஆனால் சத்துணவு ஊழியர் களுக்கு கலைஞர் கொடுத்திருக்கும் சிறப்பு காலமுறை ஊதியமோ ரூ. 2500 மற்றும் தர ஊதியம் ரூ.500 (ரூ.3000) ஆகும். கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் இது காலமுறை ஊதியம் அல்ல, கலைஞரின் அதிகாரிகளின் அண்டா மூளைகளால் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு (!) காலமுறை ஊதியம்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தை பொறுத்தவரை, புதிய ஓய்வூதிய திட் டமும் இல்லாமல் பழைய ஓய்வூதிய திட்ட மும் இல்லாமல் புதிதாக ஒரு சிறப்பு(!) ஓய் வூதிய திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.700,600,500 என கருணைத் தொகை வழங்க ஆணையிட்டுவிட்டு ஓய்வ+தியம் வழங்க ஒப்புக்கொண்டிருப்பதாக தவறான தக வலை தனது கடிதத்தில் தந்துள்ளார். ஒப் புக்கு கலைஞர் சத்துணவு ஊழியர்களுக்கு கொடுத்துள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியம் என்றே எடுத்துக்கொண் டாலும் அதில் 50 விழுக்காடு மாத ஓய்வூதி யமும், பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கியிருப் பதைப் போல் கருணை கொடையும் வழங்கி யிருக்க வேண்டும். அதுவும் கூட வழங்கப் படவில்லை என்பதுதான் உண்மை.

கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ள மற்றொரு தவறான தகவல் 1-1-2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் ஆறாவது ஊதியக்குழுவின் பரிந் துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதாகும். தமிழக அரசு ஆணையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 1-1-2006 முதல் கருத்தியலாகவும் 1-1-2007 முதல் தான் நிதிப்பயனும் தரக்கூடிய வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது என்பது முதல்வ ருக்கு தெரியாதா? இன்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மத்திய அரசு தனது ஊழியர் களுக்கு தந்திருப்பது போல் 1-1-2006 முதல் நிதிப்பயன் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடி வருவதை அதிகாரிகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வில்லையா?

செய்யாததை எல்லாம் செய்ததாக, அதி காரிகள் எழுதி தந்ததையெல்லாம் சாதனை யாக அறிக்கையாக வெளியிடுவது முதல்வ ருக்கு இது ஒன்றும் முதல் தடவை அல்ல. இந்த 5 ஆண்டுகாலத்தில் திரும்பத் திரும்ப பணி நியமனத் தடை ஆணை திமுக ஆட்சி யில் அகற்றப்பட்டது என அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வரப்படுகிறது. கடந்த ஆட்சியில் பணி நியமனத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டதும், அதே ஆட்சி யின் இறுதியில் விலக்கிக்கொள்ளப்பட்டதும் (அரசு ஆணை எண்.14 ப.ம.நி.சீ.தி.து நாள் 7-2-2006 ) அனைவரும் அறிந்ததே. திமுக ஆட்சி அமைந்தவுடன் பணி நியமனங்க ளுக்கு மறைமுகமான தடை (நிபந்தனைகள்) விதித்து அரசு ஆணை எண்.91 ப.ம.நி.சீ.தி.து. நாள் 7-6-2006) பிறப்பித்தது என்பதுதான் உண்மையாகும். தமிழக அரசு 4 லட்சம் பணி யிடங்களுக்கு மேல் நிரப்பியதாக திரும்பத் திரும்ப அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து கொடுத்துவிட்டு, இந்த ஆட்சி யில் அவர்கள் புதிதாக நியமனம் செய்யப் பட்டவர்களைப் போல் ஒரு தோற்றத்தை தமிழக மக்களிடையே உருவாக்குவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. ஏமாறப் போவது மக்கள் அல்ல; ஆட்சியாளர்களே!

கடந்த 25-02-11 அன்று முதல்வர் தனது இல்லத்தில் சந்தித்த தலைவர்கள் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள். இவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் முதல்வருக்கு எப்படி ஏற்பட்டது. ஊதியக்குழு ஆணையில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தலைமையில் கடந்த 23-02-11 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அரசு ஊழியர் சங்கம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தை கலைஞரின் அரசு கண்டும் காணாமல் விட்டதின் விளைவாக சங்கத் தின் பொதுச் செயலாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் திரண்டு புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை நோக்கி முதல்வரை சந்தித்து மனு கொடுக்க ஊர் வலமாக புறப்பட்டனர். அவர்களைத்தான் காவல் துறை முன்னே போகவிட்டு பின்னே தாக்கியுள்ளது. ஊர்வலத்தின் பின்பகுதியில் வந்த ஊழியர்கள் காவல் துறையால் கடுமை யாக தாக்கப்பட்டு, 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள னர். இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவி அன்றைய தினம் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளி யேறி ஆர்ப்பாட்டம் நடத்திய தகவல் கிடைத் தவுடன்தான் அரசு முழித்துக்கொண்டு, முதல்வரின் காதுக்கு செய்தி சென்று முதல் அரசுஊழியர் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசியுள்ளார்.

கலைஞரின் பொறுப்பில் உள்ள காவல் துறை கடந்த 5 ஆண்டு காலத்தில், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய தையும், சட்டக்கல்லூரி மாணவர்களின் தாக்குதலை கண்டுகளித்ததையும் கண்டு தமிழக மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகள், தங்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப் பட்டுவிட்டது என நீதிமன்றங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறை மக்க ளின் ஏளனத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகி யுள்ள நிலையில் இன்று அரசுஊழியர்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய கலைஞரின் காவல் துறை அரசு ஊழி யர்களை கண்மூடித்தனமாக தாக்கி காயப் படுத்தியுள்ளது. காவல் துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி களும் கண்டித்துள்ள நிலையில் ஒன்றும் நடைபெறாதது போல் கலைஞர் காட்டிக் கொள்ள முயல்வார் என்றால், அவருக்கு தக்க பாடத்தை அரசு ஊழியர்கள் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

Sunday, February 27, 2011

அரசு ஊழியர் மீது தடியடி

அரசு ஊழியர் மீதான தடியடி: தேமுதிக கடும் கண்டனம்
சென்னை, பிப். 26-
நன்றி தீக்கதிர் 27-02-11
கோட்டைக்கு நேரில் மனு கொடுக்க வந்த அரசு ஊழியர்கள் மீது தடியடி நடத்தியிருப்பது இந்த அரசின் ஆணவப் போக்கை கட்டுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஜனநாயகத்தில் எந்தத் தரப்பினரும் அரசின் முன் கோரிக்கைகளை வைத்து அதற்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடு வது இயற்கை. அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கை களை அரசிடம் சொல்லா மல் வேறு எங்கு போய் சொல்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகவே அவர்கள் கோரிக் கைகளை முன்வைத்து கடந்த 23ஆம் தேதி முதல் உண்ணா விரதப் போராட்டம் மேற் கொண்டுள்ள நிலையில் அவர்களை அரசு அழைத் துப் பேசி பிரச்சனையை தீர்ப்பதுதான் முறை . அதை யும் விட்டுவிட்டு அவர்கள் வேறு வழியின்றி கோட் டைக்கு நேரில் வந்து தி.மு.க. அரசை சந்தித்து மனு கொடுக்க வந்தபோது அவர் களை காவல்துறையின ரைக் கொண்டு கண்டபடி தாக்கியிருப்பது இந்த அர சின் ஆணவப் போக்கையே காட்டுகிறது. தி.மு.க. அர சின் இந்த அணுகுமுறையை வன்மையாகக் கண்டித் துள்ளார்.

படித்தவர்கள் தலைமை செயலகத்தை நோக்கி ஊர் வலமாக வந்தார்கள் என் றும், அவர்களை போலீ ஸார் தடுத்து நிறுத்தி அனுப் பினார்கள் என்றும் முதல மைச்சர் கலைஞர் பேசி யிருப்பது முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைப்ப தாகும். இது போதாதென்று மேலும் படித்தால் மட்டும் போதாது என்றும், பகுத்தறி வோடு சிந்திக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கலை ஞர் பேசியிருப்பது அவர் கள் போராட்டத்தை கொச் சைப்படுத்துவது மட்டு மல்ல, அவர்களது படிப் பையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. இதிலிருந்து அவர் எத்தகைய ஏமாற்றுப் பேர் வழி என்பதும், வாய்ச்சவடால் காரர் என்பதும், சர்வாதி கார மனோபாவம் கொண் டவர் என்பதையும் நன்கு அறியலாம். இத்தகைய சர் வாதிகாரத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிலைநாட் டும் வகையில் மக்கள் தகுந்த பாடத்தை இந்த ஆட்சி யாளர்களுக்கு வரும் தேர்த லில் புகட்டுவார்கள் என் பது உறுதி என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Saturday, February 26, 2011

ஆதரவு கரம் இதுதான்

திமுக அரசின் காட்டுமிராண்டித் தாக்குதல் மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு கண்டனம்
சென்னை, பிப். 25-
நன்றி தீக்கதிர் 26-02-11
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஊதிய முரண்பாடுகளை களைவது, புதிய ஓய் வூதியத் திட்டத்தை கைவிடுவது, அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்துவது, அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச் செல்வி தலைமையில் கடந்த இரண்டு தினங்களாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள னர். சாலைப்பணியாளர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உண் ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகி றார்கள். போராடும் ஊழியர்கள் சங்கங் களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண் பதற்குப் பதிலாக தமிழக அரசு அவர்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டு காட்டு மிராண்டித்தனமாக தடியடித் தாக்கு தலை நடத்தியுள்ளது. சங்க நிர்வாகிகள் உள்ளிட்டு பலர் கைது செய்யப்பட்டுள் ளனர். படுகாயமடைந்த நிலையில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு நடத்திய தடியடித் தாக்குதலையும், ஜனநாயக விரோத அணுகுமுறையையும், காவல் துறையின் காட்டுமிராண்டித் தாக்குத லையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அரசு ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி களை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளின் நியாயத்தை கருத் தில் கொண்டு சுமூகத் தீர்வு காண வேண்டுமென்றும், காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்த னையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

சிஐடியு

தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஜனநாயக ரீதியில் நடத்தும் போராட்டங் களை ஒடுக்குவதையே தமிழக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது என சாடியுள்ள சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், அரசு ஊழி யர்கள் மீது தாக்குதல் தொடுத்த காவல் துறை துணை ஆணையர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அரசின் உண்மை முகம் இதுதான்

பாய்ந்தது இரும்புக் கரம்: அரசு ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்
சென்னை, பிப்.25-
நன்றி தீக்கதிர் 2602-11

“இரும்புக்கரம் கொண்டு தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்கும்” மனநிலை திமுக அரசுக்கு மாறவில்லை என்பதன் வெளிப்பாடாக, வெள்ளியன்று ஊர்வல மாகச் சென்ற தலைவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீது காவல்துறையினர் அரஜாக கொடூரத் தாக்குதல் தொடுத்தனர். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட் டத்தையொட்டி முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கைகளை எடுத்துரைக்க அவர்கள் புறப்பட்டபோது, அவர்கள் மீது காவல்துறை யினர் தடியடி நடத்தியதில் நூற்றுக்கணக் கானோர் படுகாயமடைந்தனர். அவர்களில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர்.

காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை சேப்பாக்கத்தில் எழிலக வளா கத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இரா. தமிழ்செல்வி தலை மையில் தொடங்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளியன்று 3வது நாளை எட்டியது.

இதேபோல், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினரும் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நாளா கிய வெள்ளியன்று அவர்கள் கறுப்புச் சட் டை, வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், சங்கங்களின் தலைவர்களு டன் பேச்சு நடத்த அரசுத்தரப்பில் முன்வர வில்லை. இதனால், அரசு ஊழியர்களும், சாலைப்பணியாளர்களும் தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரை சந்தித்து நேரில் தெரிவித்து பேச்சுவார்த் தை நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை உழைப்பாளர் சிலை அருகே காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து நிறுத்தினர். தடுப்பு வேலிகளைத் தாண்டி முன்னேறிச் சென்றவர்களை வாலாஜா சாலையில் காவல்துறையினர் மீண்டும் தடுத்தனர். இதனால், அரசு ஊழியர்களும், சாலைப்பணியாளர்களும் புதிய தலை மைச் செயலக வாயில் முன்பாக அமர்ந்து முற்றுகையிட்டனர்.

தலைமைச்செயலகம் உள்ள இடத் திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக் கள், உண்ணாவிரதங்கள் கூட அனுமதிக் கப்படுவதில்லை என்ற நிலையில் இந்தத் துணிச்சலான முற்றுகைப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீரென, எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாதபோதும், காவல்துறை இணை ஆணையர் மு.சி. சாரங்கன் தடியடி நடத்த ஆணையிட, காவலர்கள் கண்மூடித்தன மாகத் தாக்கத்தொடங்கினர். இந்த தாக்கு தலில் பல ஊழியர்களின் காது பிய்ந்தது, வாயிலும் அடிபட்ட ரத்தம் கசிந்தது. சில ருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட் டியது. காவல்துறையினரின் தாக்குதலால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சி யளித்தது. தாக்குதலைத் தொடர்ந்து காவல் துறையினர் நூற்றுக்கும்மேற்பட்ட ஊழியர் களையும் தலைவர்களையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு தரதரவென்று இழுத்துச் சென்றனர். ஊழியர்கள் இந்தத் தாக்குதலுக்கும் அரசின் அணுகுமுறைக் கும் கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப் பிய வண்ணம் இருந்தனர்.

பின்னர் தலைவர்களுடன் காவல் துறை அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த் தை நடத்தியதைத் தொடர்ந்து, கைது செய் யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட் டனர். ஊழியர்களும் சாலைப்பணியாளர் களும் தங்களது உண்ணாவிரதப் போராட் டத்தை உறுதியுடன் தொடர்ந்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பதாகத் தகவல் வந்ததை அடுத்து, தலைவர்களை அதி காரிகள் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச்சென்றனர்.

முதல்வருடன் பேச்சுவார்த்தை

முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை யில் அரசு ஊழியர் சங்கத்தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சீனிவாசன், இளங்கோ, அன்பரசு, ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் சாலைப்பணியாளர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை கள் குறித்தும் முதல்வரிடம் எடுத்துரைக் கப்பட்டது. நிதி நிர்வாக அதிகாரிகளுடன் உரிய ஆலோசனைகள் நடத்தி கோரிக் கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும், இதற் கான உரிய ஆணைகள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்ததாகவும் பேச்சுவார்த்தைக்குப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அரசு ஊழியர் மற்றும் சாலைப்பணியாளர் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. உண்ணாவிரதத்தை அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலா ளர் இரா.முத்துசுந்தரம், பொருளாளர் க.ராஜ் குமார் ஆகியோர் முடித்து வைத்தனர்.

Thursday, February 3, 2011

கருவூல துறை ஊழியர்களின் பிரச்சனைகள்

வஞ்சிக்கப்படும் கருவூல கணக்குத்துறை அலுவலர்கள்

பா.அமாவாசை-
நன்றி தீக்கதிர் 29-01-11
தமிழ்நாடு கருவூலகணக்குத்துறை அலுவலர் சங்கத்தின் 7வது மாநில மாநாடு 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இந்த 20 ஆண்டுகளில் எண்ணற்ற மாற்றங் கள், புதிய சூழலில் தற்போது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் கடந்த காலங்களில் வீரம் செறிந்த போராட் டங்களை நடத்தியுள்ளனர். பழிவாங்குதல் களையும் எதிர்கொண்டுள்ளனர். துயரங் களையும், இன்னல்களையும் ஏற்றுக் கொண்ட கருவூல ஊழியர்கள் மீண்டும் துடிப்புடன் உயர்ந்து நிற்கின்றனர். காலில் குத்திய நெறிஞ்சி முள்ளை பிடுங்கி எறிந்தால் விழும் இடத்தில் ஆயிரம் நெறிஞ்சி முள் உருவாகுவது போல பீனிக்ஸ் பறவை களாக தோன்றலாயினர். இனி கருவூலத் துறையில் சங்கம் என்பது இல்லை என்ற நிலைமை உருவாக்க அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டது.

1972ல் உள்ளீடு எனப்படும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. கையில் எழுதி வந்த உள்ளீடு 1990க்கு பிறகு கணினிமய மாக்கப்பட்டது. பணம் எடுக்கும் அலுவலர் கள் கொடுக்கும் வினாடியிலேயே அனைத் தையும் எடுத்து கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து இசிஎஸ் மூலம் பணம் பட்டுவாடா கொண்டு வரப்பட்டது. பட்டியல் கொடுத்த அன்றோ அல்லது மறு நாளோ பணம்பெற வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு வாரம் காலம் ஆனாலும் பணம் கிடைத்தப்பாடில்லை. ரிசர்வ் வங்கி பணம் பட்டுவாடாவிற்கு தேதியை நிர்ணயம் செய்கிறது. பணம் பட்டுவாடா செய்ய ஒரு வாரத்திற்கு மேலாகிறது. கருவூல ஊழியர் களுக்கு 17பி குற்றக் குறிப்பாணை வழங்கப் படுகிறது. அடுத்து எபிபிஎஸ் திட்டம் கரூரிலும், தேனியிலும் தோல்வி அடைந்த திட்டம். அடுத்த மாவட்டத்திற்கு அமல் படுத்தப்பட்டத்தை சங்கம் ஆட்சேபித்தது. அறிக்கை தயார் செய்து குறைகளை சுட்டிக் காட்டியது. இருப் பினும் மீண்டும் ஏட்டிபிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்த அரசு உத்தர விட்டுள்ளது. இதை அடுத்த ஐடிஎம்எஸ் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அரசு பச்சை கொடியை காட்ட வில்லை.

இ-பென்சன் என்ற பெயரில் நடை முறைக்கு ஒவ்வாத காலக்கெடு கொடுத்து ஆயஒவநச னுநவந செய்ய கெடுபிடி செய்கிறது. தற்போது கருவூலத்துறை புள்ளிவிவரம் தரும் துறையாக மாறி வருகிறது. கடந்த 10,15 ஆண்டு காலமாக காலிபணியிடங்கள் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரு கிறது. மூன்று பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் மட்டுமே செய்து வருகின் றனர். நாளுக்கு நாள் வேலை பளு கூடி வரு கிறது. நடைமுறையில் காலதாமதம் ஏற்படு கிறது. 1997ல் 2 நாளில் பட்டியல்களை பாஸ் செய்ய வேண்டும் என நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. 1997க்கு பிறகு பில் பாஸ் செய் வதில், நடைமுறையில் ஏராளமான மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன. இவை எதையும் கணக் கில் கொள்ளாமல் நீண்ட நாள் பணியிடங் களை காலியாக வைத்து இருப்பதும் ஒரு வகையாக ஆட்குறைப்பு நடவடிக்கையே என்பதை அரசும், நிர்வாகமும் உணர மறுக் கிறது. கணினியை குறித்த விஷயத்தில் நேர்ந்த சில துறை ஊழியர்கள் செய்யும் முறை கேடுகளுக்கு ஓய்வுபெறும் நாளில் கருவூலத் துறை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யும் போக்கும் உருவாகியுள்ளது.

பிற துறையினர் மேலதிகாரிகளாக கருவூ லத்துறைக்கு வருவதால் தினமும் சந்திக்கும் பிரச் சனைகள் ஏராளம். பிரச்சனைகளை அன்றா டம் சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற ஒரு அவலம் வேறு எந்த துறையிலும் இல்லை. இத்துறையில் இளநிலை பதவியானது, கூடு தல் இயக்குநர் வரை பதவி உயர்வு பெற வேண் டும். 2008ல் 777 கணக்கர் பணியிடங்கள் தேர்வு ஆணையமும் தேர்வு செய்யப்பட்டது. அதிலும் முழுமையாக நிவாரணம் இல்லை. மீண்டும் ஒருமுறை நேரடி கணக்கர் நியமனம் செய்யும் என எதிர்பார்த்தோம். 30.12..10 அறிக்கையில் கருவூலத்துறை இடம்பெற வில்லை. அதிலும் ஏமாற்றமே. 1.6.2009க்குள் சூடிவந ஐடீசூசூ வெளிவந்து, தேர்வு எழுதி, நிர்வாக காரணங்களால் 1.6.2009க்கு பிறகோ அல்லது முன்போ பணியில் சேர்ந்த இள நிலை ஊழியர் மற்றும் ஏஏஒ க்கு 1,86 படி ஊதியம் நிர்ணயம் செய்யலாம் என அரசாணை 340 சொல்கிறது. இந்த நியதி ஏன் நேரடி கணக்கர்களுக்கு பொருந்தாது? 2008ம் வருடத்தில் வெளிவந்த முந்தைய ஊதியம், கணக்கர் நிலையில் 4000 என குறிப் பிடப்பட்ட தொகை பணியில் சேர்ந்த பிறகு கொடுக்க வேண்டும், அப்படி கொடுக்க வில்லை எனில் அது சட்டத்திற்கு புறம் பானது. எனவே இத்துறையில் மிகவும் பாதிக் கப்பட்டது ஒரு பகுதி கணக்கர்கள்தான். புதியதாக பணியில் சேர்ந்தவர்கள் பணி வரன்முறை, தகுதிக்கான பருவம் முடித்தல், ஆணை வெளியிடுதல், மேல்முறைகள் குற்ற குறிப்பாணைகள் மீது தீர்வு காணுதல் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆணை வெளியிடுதல் பணியில் இளையவர்கள் கூடுதல் ஊதியம் பெறும் மனு, ஆகியவை பல ஆண்டுகள் வரை நிலுவையில் இருப்பதும், 3 நாட்கள் பட்டி யல்கள் பாஸ் செய்யாத காரணத்திற்காக 17 பி குற்ற குறிப்பாணைகள் வழங்கப்படுவதையும் ஒப்பிட்டு பார்க்கும் ஊழியர்கள் உள்ளக் குமுறலோடு பணியாற்றி வருகின்றனர்.

இதன் பின்னணியில் சங்கத்தின் 7வது மாநில மாநாடு சென்னையில் 2011 ஜனவரி 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அக்னி குஞ்சுகளாக புறப்பட்டு விட்ட கருவூல ஊழியர்கள் ஊழியர்கள் மக்கள் பிரச்சனை களுக்கும், தங்களுடைய பிரச்சனைகளுக் கும் தீர்வு காண்பது சர்வ நிச்சயமே.



(கட்டுரையாளர், சங்கத்தின் மாநில தலைவர்)

Tuesday, February 1, 2011

அச்சுறுத்தப்படும் அரசு ஊழியர்கள்
-இரா.தமிழ்ச்செல்வி -
நன்றி - தீக்கதிர் - 31-01-2011
செய்தித்தாள்களில் இந்த வாரம் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருப்பது மராட்டிய மாநிலத்தில் ஒரு கூடுதல் ஆட்சியர் சமூகவிரோதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள் ளார் என்பதே ஆகும். இந்த கொடு மையை கண்டித்து கவலையுடன் தமிழ கத்தில் சில செய்தித்தாள்கள் செய்தி வெளிட்டுள்ளன. நாடு முழுவதும் இத்த கைய கொடிய சம்பவங்கள் நடை பெறுவதும் அது குறித்து ஓரிரு நாட்கள் பரபரப்பாக செய்திகள் வருவதும், பின்னர் இச்சம்பவங்கள் குறித்த வழக்குகளின் கதி என்னவாயிற்று என்பதும் கூட அறியமுடியாத நிலைதான் உள்ளது..

இத்தகைய ஒரு சம்பவத்தில் தொட ரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் சமீ பத்தில் அளித்த தீர்ப்பு விந்தையானது. 1999-ம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த, ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்பவரும் அவரது இரு சின்னஞ் சிறு குழந்தைகளும் சில சமூக விரோதிகளால் எரித்து கொலை செய் யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங் என்பவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அவன் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து கொண்டதன்பேரில் அவனு டைய தண்டனை ஆயுள் தண்டனை யாக மாற்றப்பட்டது. இதையும் எதிர்த்து அவன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். இந்த வழக்கில் ஆஜரான சிபிஐ வழக்கறிஞர், அவனுக்கு விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப் பட்ட மரண தண்டனையை உறுதிசெய்ய வேண்டும் என வாதாடினார். ஆனால் உச்சநீதிமன்றமோ, பட்டப்பகலில் சின் னஞ்சிறு குழந்தைகளையும், அவர்களது தந்தையையும் எரித்துக்கொன்ற நிகழ்வு மரண தண்டனை வழங்கும் அளவிற்கு பெரிய குற்றம் ஒன்றுமில்லை என தீர்ப்பு வழங்கி, இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து இந்திய செய் தித்தாள்கள் எந்த அளவிற்கு முக் கியத்துவம் அளித்து செய்திகள் வெளி யிட்டன என்பது கேள்விக்குறியே!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகா லத்தில் தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள் தாக்கப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.

* விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் வெட்டப்பட்டதும்.

* சிவகாசியில் கள்ளத்தனமாக வெடி களை தயாரிக்கும் கிட்டங்கிகளை தணிக் கையிடச் சென்ற வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்ததும், இறந்து ஊழியர்களின் குடும் பங்களுக்கு நாளதுவரை வாரிசுகளுக்கு வேலை மற்றும் உரிய நிவாரணம் அரசால் வழங்கப்படாமல் இழுத்தடித்துக் கொண் டிருப்பதும்.

* முகவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் ஒரு பெண் அரசு ஊழியர் அதிகாரிகளால் மன உளைச்ச லுக்கு ஆளாக்கப்பட்டு, ஓடும் இரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்துகொண் டதும்.

* குமரி மாவட்டத்தில் அமைச்சர் முன்னிலையிலேயே ஒரு துணை ஆட்சி யர் தாக்கப்பட்டதும், அதே மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற நெடுஞ்சா லைத்துறையினர் மீது வாகனத்தை ஓட்டி கொலை செய்ய முயற்சித்ததும்

* பெரம்பலூர் மாவட்டத்தில் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை என ஒரு துணை ஆட்சியரை ஆளும் கட் சியின் சட்டமன்ற உறுப்பினர் தலைமை யில் சமூகவிரோதிகள் ஒன்று கூடி சிறைவைத்ததும்.

* திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறை களுக்கு மாறாக கலர் டி.வி.வழங்க வேண் டும் என்று சட்டமன்ற உறுப்பினரின் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்த வரு வாய் ஆய்வாளர் இழிவு படுத்தப்பட்டதும்.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட் டச் செயலாளரான ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த வட்டாட்சியர் ஒருவரை இழிவுபடுத்தி பேசியதும், அதன் விளை வாக அந்த வட்டாட்சியர் மனம் உடைந்து இறந்துபோனது குறித்தும், அதே மாவட் டத்தில் ஆளுங்கட்சியின் ஒன்றிய செய லாளர்கள் மணல் கடத்தலை தடுத்த பெண் வருவாய் ஆய்வாளர் ஒருவரை மிரட்டியதும் இத்தகையச் சம்பவங்களில் அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் மீதுள்ள வழக்குகளில் காவல் துறை மெத்தனமாக நடந்துகொண்டிருப்பதும்.

* ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கிராம உதவியாளரை தாக்கியதும்.

* திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளரை அரசியல் பிரமு கர்கள் தாக்கியதும்

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கொலை செய் யப்பட்டதும்.

* நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த வட்டாட்சியர் தாக்கப்பட்டு தனது காலை இழந்ததும்,

* கோவை மாவட்டத்தில் பொள்ளாச் சியில் தனது கூட்டத்திற்கு ஆள் சேர்க்க வில்லை என்பதற்காக அமைச்சர் ஒரு வர், வருவாய் ஆய்வாளரை தரக்குறை வாக பேசி, பின்னர் வருத்தம் தெரிவித்ததும்.

* திருவாரூர் மாவட்டத்தில் திருத் துறைப் பூண்டி உள்ளாட்சி அமைப்பு தேர் தலில் ஆளுங்கட்சி குறைந்த ஓட்டில் தோற்றுப்போவதை பொறுத்துக்கொள் ளாத அக்கட்சியின் பிரமுகர்கள், தேர்தல் அதிகாரியாக இருந்த மாவட்ட வருவாய் அலுவலரை முடிவுகளை அறிவிக்க விடா மல் குளியலறையில் சிறை வைத்ததும்

* மணல் கடத்தலை தடுத்த குட வாசல் வட்டாட்சியர் அலுவலகம் தாக் கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதும், அது குறித்த வழக்கு மூன்று ஆண்டுகளாகியும் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதும்,

இவ்வாறு அடுக்கடுக்காக, அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தாக்கப் படுகின்றனர். இவைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் மாவட் டங்களில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தி யும் வேலை நிறுத்தங்கள் செய்தும் போராடி வருகிறது. காவல் துறையே இத்தகையச் சம்பவங்களில் உரிய பிரிவுகளில் வழக்கு களை பதிவு செய்யாமல் ஆட்சியாளர் களை திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இச்சம்பவங்கள் குறித்து தமிழக நாளேடுகள் எந்த அளவிற்கு செய்திகள் வெளியிட்டன என்பது கேள்விக் குறியே! இவ்வளவு ஏன்? மதுரையில் தினகரன் நாளேடு அலுவலகம் தாக்கப்பட்டு, அங்கு பணி யாற்றிக் கொண்டிருந்த மூவர் கொலை செய்யப்பட்டதும், அந்த வழக் கின் கதி என்னவாயிற்று என்பதும் அந்த ஆண் டவனுக்கே வெளிச்சம்!

இத்தகையச் சம்பவங்களில் ஈடு படும் சமூகவிரோதிகள், ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களின் ஆதரவை பெற்று செயல்படுவதுதான் வருத்தத்திற் குரிய விஷயமாகும்.

ஆட்சியாளர்கள் குறித்தும் அரசியல் வாதிகள் குறித்தும் சுதந்திரமாக கருத்துக் களை வெளியிடும் பத்திரிகை அலுவல கங்கள் தாக்கப்படுவதும், எரிய+ட்டப்படு வதும் தமிழ்நாட்டில் சர்வசாதாரண நிகழ் வாக மாறிவிட்ட நிலையில், மராட்டிய மாநிலத்தில் அரசுஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தையாவது பொறுப்புணர்வுடன் வெளியிட்ட செய்தித்தாள்களை பாராட் டாமல் இருக்கமுடியாது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கினால் அதை பல முறை வெளியிட்டு மிகைப்படுத்தும் செய்தித்தாள்கள், அரசுஊழியர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படும்போதும், அரசியல்வாதிகளால் அச்சுறுத்தப்படும் போதும் அதை மக்கள் மத்தியில் அவ் வளவாக கொண்டு செல்ல முன்வருவ தில்லை என்பதையும் வருத்தத்துடன் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. இதே நேரத்தில் அரசின் விளம்பரங்களை எதிர் பார்த்து தயங்கிக்கொண்டிருக்காமல் உழைப்பாளி மக்களின் இயக்கச் செய்தி களை உரிமைப் போராட்டங்களை வெளி யிடும் ஓரிரு பத்திரிகைகளும் இருக் கின்றன என்பதை எண்ணி மகிழ்ச்சி அடையலாம்.

வெள்ளித்திரைக்கும் சின்னத்திரைக் கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எத்தனை நாளுக்குத்தான் இந்த பொதுஜ னம் பார்த்துக் கொண்டு ஊமைத்துரை களாக சும்மா இருப்பார்கள்? அவர்களது அறிவுக் கண்ணும் திறக்கும்! பத்திரிகை சுதந்திரத்திற்கும் வழி பிறக்கும்!

- கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்