tngea

Pages

Monday, June 14, 2010

ஜூலை - 15 உண்ணாவிரதப் போராட்டம்

ஜூலை 15 அன்று மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள்
மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

- வரலாறு காணாத விலை வாசி உயர்வால் ஏழை மறறும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் போராட்டங்கள் மூலம் உழைக்கும் மக்கள் பெற்றுள்ள சிறு சிறு ஊதிய உயர்வுகள் கூட இதனால் பயனற்று போய்விட்டன. எனவே மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்

- வேலை நிறுத்த உரிமையை சட்டபூர்வமான உரிமையாக அறிவித்திட வேண்டும்

- அரசுஊழியர்களின் ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகளை முடக்குவதற்கு பயன்படுத்தப்படும் நடத்தை விதிகளை ரத்து செய்ய வேண்டும்

-வைப்பு நிதி வட்டி விகிதத்தை 12 விழுக்காடாக அறிவிக்க வேண்டும்

- ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தும் முரண்பாடுகள் குறித்தும் அரசுஊழியர் சங்கம் மாறும் துறைவாரி சங்கங்களின் தலைவர்களை அழைத்துப்பேசி ஒருநபர் குழு அறிக்கையை விரைவாக அமல்படுத்திட வேண்டும்.

-அவுட் சோர்சிங் ஒப்பந்த நியமனங்களை கைவிட்டு காலி பணியிடங்களை நிரப்பிட அரசு விதித்துள்ள நிபந்தனைகளை இரத்து செய்து வேலைவாய்ப்பகம் மற்றும் தேர்வாணையம் மூலம் முறையான நியமன நடைமுறைகளை மேற்கொண்டு விரைந்து நிரப்பிட வேண்டும்.

-ஓய்வு பெற்ற அரசுஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்திட வழிவகுக்கும் அரசு ஆணை 170-ஐ இரத்து செய்திட வேண்டும்

-புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஊழியர்களின் பொது நல நிதியாக மாற்றி உரிய வட்டி வழங்கப்பட வேண்டும்

-மத்திய அரசு போனஸ் சட்டத்தை திருத்தி போனசாக ரூ 3500 - 2006,2007,2008ஆண்டுகளுக்கு நிலுவையுடன் வழங்கி இருப்பது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

-சத்துணவு ஊழியர்கள் , அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஊதியக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்


- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பிட்டு திட்டத்தை தனியார் நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் மூலமாக நடத்துவதை அரசே ஏற்று வேண்டும் வேண்டும் அல்லது இந்திய பொது துறை காப்பிட்டு நிறுவனங்கள் மூலமாக நடத்திட வேண்டும்

- தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் தொழில் நுட்ப்ப ஊழியர்களுக்கு மத்திய அரசிற்கினையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்

- சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்காலமாக கருதி வரன்முறை செய்திட வேண்டும்

- காதர் வாரியத்தில் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு பட்டியல்கள் வெளியிட்ட வேண்டும் பொது நல நிதியில் இருந்து முன் பணம் பெற அனுமதிக்க வேண்டும்

- நகராட்சி ஊழியர்கள் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் ஊழியர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்பட்டு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்

-பல்வேறு துறைகளில் பல்லாண்டுகாலமாக பணிவரன்முறை செய்யப்படாமல் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் பணியினை ஒரு பொதுவான விதி தளர்வின் கீழ் விரைந்து வரன்முறை செய்யப்படவேண்டும் . தொகுப்பூதியத்தில் இருந்து முறையான ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படும் ஊழியர்களின் கடந்தகால பணி காலம் முழுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பணப்பயன் பணிப்பயன் வழங்க வேண்டும்

-பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக முடிவிற்கு கொண்டுவரப்படாமல் உள்ள ஒழுங்கு நடவடிக்கை இனங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

-ஊழியர்களின் நலன் பாதிக்கப்படாமல் மாறுதல்கள் மேற்கொள்ள பொதுவான மாறுதலுக்கு உள்ள தடைக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும்.

-அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்த்திட உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் குழுக்கள் அமைத்திட வேண்டும்

-அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்தப்படி அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் உடனடியாக வழங்கவேண்டும்.

- காலம் சென்ற அரசு ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் காலி பணியிடங்களில் பணி நியமனம் உடனடியாக வழங்க வேண்டும் பல்வேறு துறைகளில் ஏற்கெனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு பணி வரன் முறை செய்யப்படாமல் உள்ளவர்களுக்கு உடன் பணி வரன் முறை செய்யப்படவேண்டும் .

-அரசியல்வாதிகளாலும் சமூக விரோதிகளாலும் அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன அதனை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

- தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் கணணி இயக்குனர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் பணி வரன் முறை செய்ய வேண்டும் அவர்களுக்கு பணிவிதிகள் ஏற்படுத்தி முது நிலை அடிப்படையில் உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெரும் சூலை 15 உண்ணாவிரதப் போராட்டத்தை
திட்டமிடுவீர்! வெற்றிபெறச் செய்வீர் !

இரா தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்

1 comment:

  1. 15.6.10 Daily Thanthi Thalaiyangam- 31-12-2011 kkul 2.5 latchamper Oyvuperappogirarkal.4 latchamperai vaithuthan Nirvagam nadathavendum. Idhil Assembly, Local body elections eppadi nadathuvu? entru patrikkaikal kavalai therivikkintrana. Muraiyana Niyamanathil Kalippaniyadangali nirappidakkorum UNNAVIRADHA Porattathai vetriperacheyvom.RAJAGOPALAN,TIRUPPUR.

    ReplyDelete