tngea

Pages

Friday, June 11, 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகுமா ?

தடைகளும் விடைகளும்
-க.ராஜ்குமார் -
நன்றி - தீக்கதிர்-11-06-2010

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட முடியவில்லை. இருமுறை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத் தியும் ஒருமித்தக் கருத்தினை எட்ட முடியவில்லை. காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்குள்ளேயே இம்மசோதாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தாமதம் ஏன்?

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் சென்ற ஆண்டு பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மத்திய அரசுத் துறைகளில் பெண்களின் பங்கு வெறும் 7.5 சதவீதம் மட்டும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆட்சிப்பணிகளில் 24 சதவீதம், காவல் பணிகளில் 18 சத வீதம், அயல்நாட்டுப் பணிகளில் 18 சதவீ தம் எனவும் தெரிவித்துள்ளார். நாடு விடு தலை அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் பெண்களுக்கு வேலைவாய்ப் புகளில் சமத்துவம் என்பது இல்லை என்பதே அவர் அளித்துள்ள புள்ளி விபரங் கள் மூலம் அறிய முடிகிறது. இதில் வேடிக் கை என்னவென்றால் ஒரு நிலையான ஜனநாயக ஆட்சி தொடர்ச்சியாக இல் லாமல் உள்ள பாகிஸ்தானில் கூட, அரசு வேலைகளில் பெண்கள் 21 சதவீதம் என்பதும், நமது அண்டை நாடுகளான நேபாளத்தில் 30 சதவீதம், பங்களா தேஷில் 10 சதவீதம் என்பதும் நமக்கு கிடைத்திருக்கும் செய்திகளாகும். இந்தப் பின்னணியில்தான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக குரல் எழுப்பப்படுவதின் காரணத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்திய நாட்டில் வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையானது, பதிவுகளின்படி 10 கோடிக்கும் மேல். இதில் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. இந்திய நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனையாக மாறியுள்ளது வேலை யின்மை. இதற்குக் காரணம், இன்றைய ஆட்சியாளர்களின் தாராளமயக் கொள்கைகள்தான். இந்த முதலாளித்துவ சுரண்டல் அமைப்பில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சமதர்ம சமுதாயத் தை உருவாக்கிட போராடினால்தான் பெண்களுக்கான சமத்துவத்திற்கு வழி பிறக்கும். சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையுடன் இணைந்ததே பெண் களுக்கான விடுதலையாகும்.

இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

கடந்த 14 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா 9.03.10 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இது ஒரு குறிப் பிடத்தக்க நிகழ்வாகும். பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களி லும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவ தற்கு வழிவகுக்கும் இந்த மசோதாவை மத்திய அரசு, மகளிர் தினமான 8.03.10 அன்று மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது, வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. சமாஜ்வாடி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் வன் முறையில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறினாலும், மக்களவையும், மொத்தம் உள்ள 28 சட்டமன்றங்களில், 15 சட்டமன்றங்கள் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால்தான் இது சட்டமாகும். காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் முணு முணுப்புகள் எழுந்துள்ளன. இத்தகைய எதிர்ப்பிற்கு என்ன காரணம்? அவர்களின் கோரிக்கைதான் என்ன?

ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு

பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் வழங்கப்படவுள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டிற்குள் இதர பிற் படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்க ளுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இவர்கள் கோருகின்றனர். முதலில் 33 சதவீதம் மகளிருக்கான மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால் உள் ஒதுக் கீடு போன்ற இதர விஷயங்களை சட்ட மாக்கப்படும் போது விவாதிக்கலாம் என் பதே பிறரின் நிலைபாடு. கடந்த 14 ஆண் டுகாலமாக பெண்களுக்கான இடஒதுக் கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருபவர்களுக்கு ஒரு பொதுவான நோக்கம் உள்ளது. பெண்களுக்கு அரசி யல் அதிகாரம் வழங்க அவர்கள் தயாராக இல்லை. பெண்களுக்கு 33 சதவீதம் தரு வதற்கு தயாராக இல்லாமல் இழுத்த டித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதக மாகவே உள் ஒதுக்கீடு கேட்பவர்களின் போராட்டங்கள் உள்ளன. இந்த இடஒதுக் கீட்டிற்குள் மத ஒதுக்கீட்டை கேட்பவர்க ளுக்கு ஒரு உள்நோக்கம் இல்லாமல் இல்லை. ஓட்டுச்சீட்டு அரசியலில் ஒரு பிரச்சனையை அணுகினால் தீர்வு காண முடியாது என்பதை பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையின் மூலம் அறியலாம். சட்டம் கொண்டு வந்த பிறகு உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என் பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்கீட்டிற்கு எதி ராக உள்ளது ஏன் என்பதை அவர்கள் விளக்கியே ஆக வேண்டும்.

உள் ஒதுக்கீடு தேவையற்றது என்று யாரும் சொல்லவில்லை. பசியுடன் காத் திருக்கும் ஒரு வீட்டில் சமையல் செய்ய முனையும்போது எந்த குழந்தைக்கு எவ்வளவு என்பதை முடிவு செய்து விட்டு சமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது போல் இன்று ஒட்டுமொத்த மாக இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல் படுபவர்களின் செயல்பாடுகள் அமைந் துள்ளன. பெண்கள் இன்று சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த இட ஒதுக்கீடு மட்டும் அமையாது என்பதும், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை படைப்பதின் மூலமே விடுதலை காணமுடியும் என்பதால்தான் இடதுசாரி கள் இன்று இடஒதுக்கீட்டில் முதலில் 33 சதவீதம், பின்னர் உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என்று சொல்லி வருகின்றனர்.

சொத்தை வாதங்கள்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எந்த ஒரு பிரச்சனையும் இந்த அளவிற்கு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சில முதலாளித்துவ செய்தித்தாள்கள் எதிராக எழுதி வருகின் றன. பெண்களுக்கு வழங்கப்படும் அதி காரம் ஆண்களிடம் பினாமியாக சென்று சேர்ந்துவிடும் என அவை வாதாடுகின் றன. தற்போது உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக் கீடு பயனளிக்கவில்லை என்பது அவை களின் கருத்து ஆகும். பெண் பிரதிநிதிக ளின் கணவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர் என்பது அவர்களின் வாதம். எந்த ஒரு நடைமுறையும் ஆரம்ப காலத்தில் இத்தகைய விமர்சனத் தை எதிர்கொள்வது வழக்கம். நாளடைவில் பெண்கள் இத்தகைய அமைப்பில் செயல்பட்டு வெற்றி பெறும்போது இத்த கைய வாதங்கள் காணாமல் போய்விடும். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படாமல், படிப்பதற்கு கூட உரிமை இல்லாதவளாக பெண் இருந்தாள். தேர்தல்களில் வாக்களிக்க உரிமை யில்லாதவளாகவும் அவள் இருந்தாள். இன்று இத்தகைய உரிமைகளை போராடி பெற்று அவள் தவிர்க்க முடியாத தீர்மான கரமான சக்தியாக முன்னேறி வருகின்றாள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவளது வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க் கை நடைமுறை அனுபவங்கள் படிப்பறிவு இல்லாமல் கூட சிறந்த நிர்வாகி யாக இல்லறத்தில் செயல்பட வைத்துள் ளது. இன்று அவள் பல பரிமாணங்களில் அறிவுத்திறன் பெற்றுள்ளாள். அப்படிப் பட்ட அடிப்படை குணாம்சத்தோடு அவள் அரசியல் அதிகாரத்திற்கு 33 சத வீத இடஒதுக்கீட்டு அடிப்படையில் தீர் மானகரமான சக்தியாக இடம்பெற்றால், இந்திய நாட்டின் சமூக, பொருளாதார, அர சியல் மற்றும் கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் மிகச்சிறந்த வரவேற்கத்தக்க இரசாயன மாற்றம் ஏற்படும். இது இன் றுள்ள புரையோடிப் போன சூழலில் சுக வாசியாக உள்ளவர்களுக்கு சம்மட்டி அடியாக அமையும். எனவேதான் சகல வசதிகள் ஆடம்பரத்தை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரக்கூடிய ஒரு பகுதியும் பெண்களுக்கும் குழந்தைக ளுக்கும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்திற் கும் எதிரான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதிகாரபலம், ஆள்பலம், பண பலத்தினால் தண்டனைகளிலிருந்து தப்பியும் பெரிய மனிதர்கள் என்ற போர் வையில் வாழும் சில மனிதர்கள், பெண் களுக்கான, அல்ல அல்ல, சமூக முன்னேற்றத்திற்கான இம்மசோதாவை எதிர்க்கின்றனர். மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவேண் டுமென்றால் நாடு முழுவதும் அதற்கு ஆதர வான குரல்கள் உரத்து ஒலிக்க வேண்டும்.

No comments:

Post a Comment