பயணங்கள் வேறு; பாதை ஒன்று
-க.ராஜ்குமார்
அமெரிக்க-இந்திய அணுசக்தி; ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவில் அணு உலைகள் அமைப்பதற்கு பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. அணு உலை களில் விபத்து அல்லது கசிவு ஏற்பட் டால் அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வழிவகை செய்யும் வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறி முகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள பல ஷரத்துக்கள் இந்திய நாட்டு மக்களின் நலனுக்கு எதிரானது என பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் அதை எதிர்த்தன. ஆனால் பாஜக தற் போது நடப்பு கூட்டத்தொடரில், 18-08-10 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா-2010-ஐ ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நிதியமைச் சருமான பிரணாப் முகர்ஜி, பாஜக தலை வர்களான எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவ ராஜ், அருண் ஜேட்லி ஆகியோரை சந் தித்து இந்த மசோதாவை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அறிமுக நிலையில் இந்த மசோதாவை எதிர்த்த பா.ஜ.க இப் போது தனது நிலையை மாற்றிக்கொண் டது. தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நான்கைந்து ஆலோசனைகளை காங்கி ரஸ் ஏற்றுக்கொண்டிருப்பதால் மசோதா விற்கு ஆதரவு தர முடிவு செய்திருப்பதாக அது அறிவித்துள்ளது. நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரிக்கவும், நஷ்ட ஈட்டு ஆணையருக்கு கூடுதல் அதிகாரங் களை தரவும் மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும் என காங்கிரஸூம் அறிவித்துள்ளது.
ஓரே குட்டையில்ஊறிய மட்டைகள்
இந்திய ஜனநாயகத்தில் பிரதான எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்று சேர்ந்து ஆதரித்து ஒரு மசோதாவை நிறைவேற்றுவது அரிதான நிகழ்வாக இருந்தாலும், இந்திய நாட்டின் இறை யாண்மைக்கு எதிராக அவை ஒன்றுபட்டி ருப்பது கவலைக்குரிய நடவடிக்கையா கும். வெளிநாட்டில் உள்ள இலட்சக் கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணத் தை கைப்பற்றுவதற்காகவோ அல்லது விலைவாசி உயர்விற்கு காரணமாக உள்ள பதுக்கல்காரர்களை பிடிப்பதற்கோ ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்தி ருக்க முடியும். ஆனால் இந்திய நாட்டு மக் களுக்கு துரோகம் செய்ய இவை இரண் டும் இன்று ஒன்று சேர்ந்துள்ளன. அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதாவை இவ் வளவு அவசரம் அவசரமாக நிறைவேற்று வதில் இவ்விரு கட்சிகளுக்கும் ஒரு நோக்கம் உண்டு. விரைவில் இந்தியா வர விருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வை திருப்திப் படுத்தத்தான் இவ்விரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்துள்ளன. தங்கள் எஜமான விசுவாசத்தை போட்டி போட் டுக்கொண்டு காட்டுவதற்கு தயாராகி விட்டன.
அவசரம் ஏன்?
அணு சக்தி துறையில் அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்க்க இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஸ் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள் ளார். ஆனால் அமெரிக்கா அணு உலை தொழில்நுட்ப மறுபயன்பாட்டிற்கு தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற அவசரம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்துள்ள அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதா இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளன. இந்த மசோதா இந்திய நாட்டு மக்களுக்கு பயன் படுவதை காட்டிலும் அந்நிய நாட்டு நிறுவ னங்களுக்கு பாது காப்பு அளிப்பதாகவே உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டி யுள்ளன.
மசோதாவில் உள்ள பாதகமான ஷரத்துக்கள்
மசோதாவில் அந்நிய நாட்டு நிறு வனங்கள் இந்திய நாட்டில் அணு மறு சுழற்சி ஆலைகளை அமைக்கும்போது, விபத்து நஷ்ட ஈட்டிற்காக முதலீடு செய்ய வேண்டிய பாதுகாப்பு தொகையாக 458 மில்லியன் டாலர் (2,087 கோடி) என குறிப் பிட்டுள்ளது. அணு உலைகளின் விபத் துக்களால் ஏற்படும் இழப்புகளை ஈடு கட்ட இது போதுமானதல்ல. இத்தகைய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள அணு விபத்து நஷ்ட ஈட்டுத் தொகையோ 10.5 பில்லியன் டாலர் ஆகும்.
நஷ்ட ஈட்டுத் தொகையை பெற விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களை நேரடியாக அணுக முடியாது. இந்த சட்டத்தின் பிரிவு 17-ன்படி இதற்கென மத்திய அரசு அமைக்கவுள்ள இந்திய அணுசக்தி கழ கத்தின் (சூஞஊஐடு) மூலமாகவே நிவாரணம் கேட்க முடியும். மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த கழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய் யவில்லை. முதலில், ரூ.500 கோடி என்று அறிவித்து, இப்போது ரூ.1500 கோடி என்று உயர்த்துவதாக மத்திய அரசு அறி வித்துள்ளது. இந்த தொகை போதுமான தல்ல என்பதே இடதுசாரிகளின் வாத மாகும்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலை உபகரணங் களுக்கு இந்த மசோதாவிலிருந்து விதிவி லக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தர மற்ற உபகரணங்கள் இறக்குமதி செய்யப் பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
போபாலில், விஷவாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக் கும் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர் சனை இந்திய நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தர முடி யாத இவர்களுக்கு, இத்தகைய சட்டங்கள் கொண்டுவருவதில் தயக்கம் ஏதும் இருக்காது என்பதில் வியப்பில்லை.
பாஜகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து ஒரு மசோதாவை, அதுவும் மக்கள் விரோத மசோதாவை நிறைவேற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பாஜக ஆட்சியின் போது கொண்டுவந்த மின்சார மசோதா வை (2001) இதே இருகட்சிகளும் சேர்ந்து ஆதரித்த நிகழ்வும் உண்டு. பாஜக அறிமு கப்படுத்திய புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கிட இன்றும் காங்கிரஸ் துடி யாய் துடித்துக்கொண்டிருப்பதும் நாட்டு மக்கள் அறிந்ததே!
இந்திய நாட்டு மக்களின் பாதுகாப் பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த சட்டத்தை நிறைவேற்றத்தான் இன்று காங்கிரஸூம் பாஜகவும் ஒன்று சேர்ந்துள் ளன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இவர்களின் பயணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பாதை ஒன்றுதான். அது ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான பாதை என்பதை நாட்டுமக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment