அமெரிக்க வசதிக்கான (அணு விபத்து) இழப்பீடு சட்டம் அணு" href="http://search.webdunia.com/search.aspx?w=true&lid=TM&q=
புதன், 18 ஆகஸ்ட் 2010( 20:15 IST )
-->
அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்று நமது நாட்டில் அமைக்கப்படவுள்ள அணு மின் நிலையங்களில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்குவதை முறைபடுத்தும் அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்னும் சில நாட்களில் நிறைவேறிவிடும் என்று நிச்சயமாக நம்பலாம்.
PTIஏனென்றால், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜனதா கட்சியின் (நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள முக்கிய எதிர்க்கட்சி) தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை அழைத்துப் பேசியுள்ளார். அவர்களும் தங்கள் பங்கிற்கு ஒரு குறைந்தபட்ச யோசனையை கூறிவிட்டு, சட்ட வரைவை நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று காலைச் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில்தான், இந்த அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு (மசோதா) குறித்து ‘ஆராய்ந்த’ நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த அறிக்கை (Parliament standing committee) , இன்று காலை இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக்குழு சில ஆலோசனைகளையும் தந்துள்ளது. அணு உலை விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலையை இயக்கும் நிர்வாக அமைப்பு ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றுள்ளதை, ரூ.1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பாரதிய ஜனதா தலைவர்கள், அணு உலை விபத்து இழப்பீடு சட்ட வரைவில், அணு உலைகளை விற்கும் அந்நிய நிறுவனங்களையும் பொறுப்பாக்க வேண்டும் என்று யோசனை கூறியதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் எந்த அளவிற்கு அவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறியுள்ளனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை. ஆக இந்த நாட்டின் ஆளும் கூட்டணியும் முக்கிய எதிர்க்கட்சியும் அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டன. நமது கேள்வியெல்லாம் (ஏற்கனவே இதே பகுதியில் எழுதிய கட்டுரையிலும் கேட்டுள்ளோம்) அணு உலை விபத்து ஏற்படும் நிலையில் ரூ.1,500 கோடி இழப்பீடு போதுமானதா? இதனை நிறைவேற்ற மன்மோகன் அரசு இத்தனை அவசரம் காட்டும் அவசியமென்ன? என்பதே.அமெரிக்காவின் இழப்பீடு சட்டம் - ஒரு ஒப்பீடுபோபால் விஷ வாயு விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட சட்டச் சிக்கல் குறித்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அரசு ஒரு அமைச்சரவைக் குழுவை நியமித்து ஆராய்ந்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 இலட்சம் இழப்பீடு அளிப்பது என்றும், பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு மறுவாழ்வு பெற உதவுவது என்றும் பரிந்துரை செய்துள்ளது. போபால் நகரத்தை நரகமாக்கிய யூனியன் கார்பைட் கம்பெனியில் இருந்து வெளியேறிய மிக் என்று அழைக்கப்படும் மீதைல் ஐசோசயனைட் வாயு ஒரு இரவில் 15,000 பேரைக் கொன்றது (மத்தியப் பிரதேச அரசுக் கணக்கு 3,787), பல பத்தாயிரக்கணக்கானவர்கள் பார்வையிழந்தனர்.
FILEஇப்படி ஒரு விஷ வாயு விபத்திற்கே நெருக்கமாக மக்கள் வாழும் நமது நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றால், அணு உலை விபத்து ஏற்பட்டால் எந்த அளவிற்கு உயிரிழப்பும், இதர பாதிப்புகளும் ஏற்படும் என்று இந்தச் சட்டத்தை நிறைவேற்றத் துடிப்பவர்கள் எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை (ஒருவேளை அணு விபத்து என்று நிகழ்ந்தால் அந்த இடத்தில் யார் மிஞ்சப்போகிறார்கள் இழப்பீடு வழங்குவதற்கு என்று யோசித்திருப்பார்களோ?). முதன் முதலில் அமெரிக்காவில் அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் நிறைவேற்றப்பட்டபோது கூட, 60 மில்லியன் டாலர்கள் தான் அணு சகதி மையத்தை இயக்கும் நிறுவனத்திற்கான இழப்பீடு பொறுப்பாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது (1957ஆம் நிறைவேற்றப்பட்ட பிரைஸ் - ஆண்டர்சன் சட்டம்). ஆனால் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த (இரஷ்யாவின்) செர்னோபில் அணு மின் உலை விபத்திற்குப் பிறகுதான், இழப்பீடு தொடர்பான தீவிர விவாதம் சர்வதேச அளவில் உருவாகி, அதன் அடிப்படையில் அணு விபத்து இழப்பீடு தொடர்பான இரண்டு சட்டங்களை பன்னாட்டு அணு சக்தி முகமை (IAEA) உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில்தான், அணு உலை விபத்து ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ‘அணு விபத்து கூடுதல் இழப்பீடு உடன்படிக்கை’ (Convention on Supplementary Compensation for Nuclear Damage 1997) நடைமுறைக்கு வந்தது. இந்த உடன்படிக்கையே, அணு உலை விபத்து ஏற்பட்டால் அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம் அதிகபட்சமாக 465 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு அளித்தால் போதுமானது என்று வரையறை நிர்ணயித்தது. இதை அடிப்படையாகக் கொண்டுதான், மன்மோகன் சிங் அரசும், அணு உலையை இயக்கும் நிறுவனம் (இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய அணு சக்திக் கழகம் - NPCIL) ரூ.500 கோடி கொடுத்தால் போதுமானது என்றும், கூடுதல் இழப்பீட்டை அரசு அளிக்கும் என்றும் கூறி இந்த சட்ட வரைவைத் தயாரித்தது. இதன் மூலம் அணு உலையை விற்கும் நிறுவனங்கள் இழப்பீடு பொறுப்பில் இருந்து முழுமையாக தவிர்க்கப்பட்டன!
12»
No comments:
Post a Comment