tngea

Pages

Saturday, August 28, 2010

ஒரு நபர் குழு அரசு அறிவிப்பு கண்துடைப்பு

ஒருநபர் குழுவின் பரிந்துரைகளை வெளியிடாமல் தன்னிச்சையான அறிவிப்பு தமிழக அரசின் கண்துடைப்பு அரசு ஊழியர் சங்கம் விமர்சனம்

சென்னை, ஆக. 27-ஒரு நபர் குழுவின் பரிந்து ரைகளை வெளியிடாமல் தன் னிச்சையான முடிவுகளை தமி ழக அரசு அறிவித்திருப்பது ஒரு கண்துடைப்பே என்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் கண் டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன் ஆகியோர் வெள்ளியன்று வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு அரசு ஊழியர் களுக்கு மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையான ஊதிய மாற்றம் என்ற பெயரில் ஆணை யிடப்பட்ட ஊதிய மாற்றத்தில் ஏராளமான குறைபாடுகள் மலிந்துள்ளன. இவற்றைக் களைவதற்கு சங்கங்களை அழைத்து நேரடிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் தொடர்ந்து தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் வலி யுறுத்தி வந்துள்ளது.ஆனால், இதற்கு மாறாக, 9.9.2009 அன்று ஊதியக் குறை பாடுகளைக் களைவதற்கு ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர்குழுவை அமைத்து தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் ஊதிய மாற்றத்தில் குறைபாடுகள் உள்ளது என்பதை தமிழக அரசு ஒப்புக் கொண்டது. எனினும், ஜனநாயக ரீதியாக சங்கங்களை அழைத்து, இரு தரப்பு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதில், தமிழக அரசு அக்கறை காட்ட வில்லை என்பதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியது.எவ்வாறாயினும், இந்த ஒரு நபர் குழுவேனும் முறையாக சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணை யான வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி, கல்விப் படி மற்றும் இணையான ஊதி யம் வழங்கப்படாத ஊழியர் களுக்கும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி உள் ளிட்ட உழைப்பு சுரண்டலுக்கு நீண்டகாலமாக ஆளாக்கப்பட் டுள்ள சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர் கள், ஊராட்சி உதவியாளர்கள், பேரூராட்சி எழுத்தர்கள், மக் கள் நலப்பணியாளர்கள் மற் றும் கிராமப்புற நூலகர்கள் போன்ற பிரிவினருக்கு வரைய றுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வஞ் சிக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப ஊழியர்களது ஊதிய முரண்பாடுகளை களைவது ஆகிய பிரச்சனைகளுக்கு முழு மையானதும், நியாயமானது மான தீர்வுகளைத் தர முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப் பட்டது.ஒருநபர் ஊதியக் குழுவின் பணிக்காலம் முதலில் மூன்று மாத காலம் என அறிவித்த தமி ழக அரசு, 9 மாத காலம் நீட் டித்த நிலையிலும் ஒரு நபர் குழு தமது அறிக்கையை அரசிடம் அளித்திடாததால், கடந்த 23.4.2010 அன்று சங்கத்தின் சார் பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 1000 அலு வலகங்கள் முன்பாக ஆர்ப்பாட் டம் மிக வலிமையாக நடத்தப் பட்டது. அதன் அடிப்படை யில் கடந்த 24.4.2010 அன்று ஒரு நபர் குழு தமது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத் தது. அதன்பின்னரும், தொடர் ந்து தமிழக அரசு தாமதம் செய்து வந்ததால் சங்கத்தின் சார்பில் கடந்த 15.7.2010 அன்று அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் பல்லாயிரக் கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் உண் ணாவிரதம் நடைபெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் 27 அன்று தமிழக முதல்வர் ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண் டதாக அரசின் பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளார். இச்செய்தி குறிப்பின்படி 2 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பலன் பெறு வார்கள் என்றும், இதனால் அரசுக்கு ரூ.223 கோடி கூடுதல் செலவாகும் எனவும், திருத்திய ஊதிய விகிதங்கள் தொடர் பான ஆணைகள் துறைவாரி யாக விரைவில் வெளியிடப் படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்செய்தியின்படி 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் மட்டுமே பலன் பெறுவார் கள் என்பதிலிருந்து அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள் ளது. சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர் கள் மட்டுமே 2 லட்சம் பேர் உள்ள நிலையில், மக்கள் நலப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேர், வருவாய் கிராம ஊழியர்கள் 17 ஆயிரம் பேர் உள்ளிட்டோருக் கும், தொழில்நுட்ப ஊழியர் கள், ஊரக நூலகர்கள், உள் ளாட்சி உதவியாளர்கள் உள் ளிட்ட இதர 10 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றா தது குறித்து அரசு ஊழியர்களி டையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.மேலும், ஒரு நபர் குழு பரிந் துரைகளை வெளியிடாமலும், சங்கங்களின் கருத்துக்களை கேட்டு அறிந்திடாமலும், தன் னிச்சையாக தமிழக அரசு அறி வித்துள்ளது, தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, 12 லட்சம் தமிழக அரசு ஊழியர் களின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்றிட, ஒரு நபர் குழு பரிந்துரைகளை வெளி யிட்டு, சங்கங்களை அழைத் துப் பேசி தீர்வு காண வேண்டு மென தமிழக அரசை தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment