ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 3-ம் முதல் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.
- 6-வது ஊதியக்குழுவின் நிலுவையினை உடனடியாக வழங்கவேண்டும்
- 6-வது ஊதியக்குழுவின் நிலுவையினை உடனடியாக வழங்கவேண்டும்
- வீட்டு வாடகைப்படி ஏற்ற தாழ்வுகளை களைய வேண்டும்
- அங்கன்வாடி உள்ளிட்ட தற்காலிக ஊழியர்களின் பனி வரன்முறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
-ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப போராட்டத்தில் அம்மாநிலத்தில் உள்ள தலைமைச் செயலக ஊழியர் சங்கம் உள்பட அணைத்து சங்கங்களும் கலந்து கொண்டுள்ளன. இச்சங்கங்கள் ஒன்றாக இணைந்து போரட்டக்குழுவினை ஏற்படுத்தியுள்ளன. அகிலஇந்திய மாநில அரசுஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய செயலாளர் தோழர் மக்பூல் அவர்களின் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசுஊழியர் சங்கம் இந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றுகிறது .
போராட்டக்குழு தலைவர்கள் கடந்த மார்ச் மாதம் 19 தேதி மற்றும் ஏப்ரல் 3 தேதி ஆகிய இருநாட்கள் அம்மாநில நிதி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் எந்த பலனும் கிடைக்காததால் வேலைநிறுத்தம் நடைப்பெற்றது.
ஏப்ரல் 5-ல் அம்மாநில அரசு போராடும் அரசுஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்தியுள்ளது . தோழர் மக்பூல் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது .
இதற்கிடையில் அம்மாநில உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு பொதுநல வழக்கில் அரசுஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உரிமையில்லை என்றும் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அந்நீதிமன்றம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு 01-01-1996 பிறகு 13 ஆண்டுகள் கழித்து 6-வது உதியக்குழுவினை அமைத்து அதன் பரிந்துரைகளை 01-01-2006 முதல் அமல்படுத்த முடிவெடுத்தபோது இதை மாநிலத்தில் அமல்படுத்துவது அம்மாநில அரசுகளை சார்ந்தது என கை கழுவிய காரணத்தினால் இன்று பல்வேறு மாநிலங்களில் இத்தகைய போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட ஒரு போராட்டத்தின் மூலமே ஊதிய மாற்றத்தை பெற முடிந்தது. ஆந்திரம், கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநில அரசுகள் அம்மாநில அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய குழுவின் பரிந்துரைகளையும் கடந்து ஊதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளன.
காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ஊதிய மாற்ற நிலுவைகளை வழங்குவதில் அம்மாநிலஅரசு தயக்கம் காட்டுகிறது. இத்தகைய மாநிலங்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு அங்கு அரசிற்கும் அரசு ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ள மோதலை வேடிக்கை பார்த்துகொண்டுஇருக்கிறது. மத்திய அரசின் பொறுப்பற்ற இத்தகைய நடவடிக்கைகளே வேலை நிறுத்தத்திற்கு காரணம் ஆகிறது. 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் மாநிலங்கள் எதிர்கொள்ளும் செலவினை மத்திய அரசும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அகில இந்திய மாநில அரசுஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி வருகின்றது.
மாநிலங்களின் வளர்ச்சிப்பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அது செலவிடப்படவில்லை என மாநிலங்களை குறை கூறி வருகின்றது. ஆனால் மத்திய அரசு ஏற்று அமல்படுத்திய 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை முழுமையாக காஷ்மீர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அமல் படுத்த தவறினால் அதை கண்டும் காணாமலும் உள்ளது.
காஷ்மீர் நீதி மன்றம் அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்த உரிமை இல்லை என்று ஒரு புதிய கண்டு பிடிப்பை கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது . இது காலகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விவாதத்தின் ஒரு பகுதியே. வேலை நிறுத்தம் எனபது உழைப்பாளி மக்களின் பிறப்புரிமை ஆகும். சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் வேலை நிறுத்த உரிமையை அங்கீகரித்தும் இன்றும் இந்திய போன்ற நாடுகளில் வேலை நிறுத்த உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. 2003 -ம ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினை தொடர்ந்து வேலை நிறுத்த உரிமை தொடர்பான வழக்குகள் இன்றும் நிலவையில் இருந்து வருகின்றன.
இன்று கஷ்மீரில் அரசு ஊழியர்களின் தலைவர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில நீதிமன்றம் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது . இந்நிலையில் அம்மாநிலஅரசு போராட்டத்தை சுமூக முடிவிற்கு கொண்டுவரும் வகையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழாண்டு அரசு ஊழியர் சங்கம் இன்றும் நாளையும் (15-04-10 மற்றும் 16-04-10) வட்ட மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது.
காலம் அறிந்து கூவும் சேவலை
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
கல்லை தூக்கி பாரம் வைத்தாலும்
கல்லை தூக்கி பாரம் வைத்தாலும்
கணக்காய் கூவ தயங்காது
தமிழ்செல்வி
No comments:
Post a Comment