tngea

Pages

Monday, April 12, 2010

ஜம்மு காஷ்மீர் மாநில ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நான்கு லட்சம் அரசு ஊழியர்கள் கடந்த ஏப்ரல் முன்றாம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ஊதிய மாற்ற நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் - அங்கன்வாடி மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி வரன் முறை - ஊதிய உயர்வு - உதியக்குழு முரண்பாடுகளை களைதல்- வீட்டு வாடகைப்படியில் உள்ள பாகுபாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடை பெறுகிறது . மாநில அரசின் நிதித்துறை செயலாளருடன் இரு முறை பேச்சுவார்த்தை நடை பெற்றும் பலன் இல்லை . அரசு அங்கு ESMA சட்டத்தை அமல் படுத்தியுள்ளது . அகில இந்திய மாநில அரசுஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் தோழர் மக்பூல் உள்பட ஆயிரம் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . அந்த மாநில அரசின் அடக்குமுறையை கண்டித்தும் போராடும் ஊழியர்களுக்கு ஆதரவு அளித்தும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெறுகின்றன. போராடும் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச வலியுறுத்தி அந்த மாநில முதல்வருக்கு தந்திகள் அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தந்திகள் அனுப்ப அரசு ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

1 comment: