ஊதிய விகிதங்களில் முரண்பாடு: தமிழக அரசிடம் ஒருநபர் குழு அறிக்கை
சென்னை, சனி, 24 ஏப்ரல் 2010( 16:15 IST )
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ள ஊதிய விகிதங்களின் முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒருநபர் குழு தனது அறிக்கையை தமிழக அரசுக்கு அளித்துள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அலுவலர் குழு, 2009இன் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ள ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் இருப்பின், அவற்றைக் களைய ராஜீவ் ரஞ்சன் (முதன்மைச் செயலாளர், தொழில் துறை) தலைமையில் ஒரு நபர் குழு நியமித்து அரசு ஆணை வெளியிடப்பட்டது.ஒரு நபர் குழுவால் சுமார் 1066 அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. மேலும் 05.10.2009 முதல் 01.12.2009 வரை சுமார் 130 அலுவலர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து ஒரு நபர் குழுவின் முன் நேரில் எடுத்துரைத்தனர்.இக்கோரிக்கைகளை ஒரு நபர் குழு பரிசீலித்து தனது அறிக்கையினை இன்று அரசுக்கு அளித்துள்ளது. ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை அரசு ஆராய்ந்து உரிய ஆணைகள் விரைவில் வெளியிடும் என்று முதலஅமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
No comments:
Post a Comment