பாவேந்தர் பாரதிதாசன் 120வது பிறந்தநாள் இன்று. 29.04.1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழ் ஆசியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதி மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். எளிய எழுச்சிமிக்க எழுத்துக்களால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் இவர் அழைக்கப்பட்டார்.
பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழே, உயிர் நீ, மறப்பேனா?
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி
பாரதிதாசன் (இசையமுது - தமிழ்)
புலிநிகர் தமிழ் மாந்தர்
தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:
நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!
"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!
மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!
ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்
Thursday, April 29, 2010
Wednesday, April 28, 2010
--> Left-led Bharat bandh hits normal life in 13 states-->
Tue, Apr 27 11:07 AM
A 12-hour all India shutdown has been called by the Left-led 13 party front demanding immediate control on spiralling prices, roll back in customs duty on crude oil and excise tax on petroleum products.
The parties leading the shutdown are Communist Party of India (CPI), Communist Party of India -Marxist (CPI-M), Indian National Lok Dal (INLD), Samajwadi Party (SP), Biju Janata Dal, Rashtriya Samajwadi Party (RSP) and Lok Janshakti Party (LJP).
The shutdown is affecting the normal life in the states of Kerala, West Bengal, Bihar, Uttar Pradesh, and Orissa.
Kolkata appears to be the most affected with road, rail and air services coming to a halt. Kingfisher Airlines has stopped its services. No taxis are available at the airport and railway stations as all prepaid booths are closed.
A number of Kolkata-bound trains have been stopped at various places by the protestors.
There are also reports that around eight people have been injured in a clash in Pandua in Hoogly district, when a train coming to Howrah was stopped by CPM supporters at Pandua.
In Uttar Pradesh, Samajwadi Party workers stopped the Ganga Gomti Express in Allahabad. Trains have also been stopped in Ghaziabad.
Meanwhile, there are reports that the police have baton-charged the Samajwadi Party workers at Bijnor during the shutdown.
Earlier, two buses were set on fire by the protestors in an area on the outskirts of Lucknow at around 5.30 am.
In Kerala, the streets have worn a deserted look and public and private transport is off the road.
Shops, business establishment, schools and other educational institutions are completely closed in the state.
There are reports of train services being disrupted, but till now there are no reports of air traffic disruption from Kerala.
There is no train or air traffic disruption in Orissa so far. But protesters are planning to stop few major trains and disrupt road traffic at some points.
The protestors are reportedly stopping the work only at Central Government offices; state offices in Orissa are not affected due to the shutdown.
In Bihar, the RJD protestors are reported to have blocked the Mahatma Gandhi Setu bridge that connects Patna to Hajipur.
The Bharatiya Janata Party (BJP) is not a part of this shutdown, but is expected to organize a march to Parliament on the issue.
Tuesday, April 27, 2010
பொது வேலைநிறுத்தம்
''அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய-மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.எரிபொருட்கள் மீது வரி ஏற்றி அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்வதற்கு அரசே வழிவகை செய்திருக்கிறது. என்றும் கண்டிராத மின்வெட்டும் மக்களின் வாழ்க்கையை பாதித்திருக்கிறது.தண்ணீர் நெருக்கடி முற்றி வருகிறது. இவற்றுக்குக் காரணமான மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் உள்பட 13 கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து வெட்டு தீர்மானம் எதிர் கட்சிகளால் கொண்டுவரப்படுகிறது.
தமிழ்செல்வி
Monday, April 26, 2010
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் 27-04-10 அன்று மாவட்ட தலைநகரங்களில் விலைவாசிக்கு எதிராகவும் புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்
தமிழ்செல்வி
Saturday, April 24, 2010
ஒருநபர் குழு அறிக்கை அரசிடம் - ஆர்ப்பட்டத்திற்கு கிடைத்த வெற்றி
ஊதிய விகிதங்களில் முரண்பாடு: தமிழக அரசிடம் ஒருநபர் குழு அறிக்கை
சென்னை, சனி, 24 ஏப்ரல் 2010( 16:15 IST )
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ள ஊதிய விகிதங்களின் முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒருநபர் குழு தனது அறிக்கையை தமிழக அரசுக்கு அளித்துள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அலுவலர் குழு, 2009இன் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ள ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் இருப்பின், அவற்றைக் களைய ராஜீவ் ரஞ்சன் (முதன்மைச் செயலாளர், தொழில் துறை) தலைமையில் ஒரு நபர் குழு நியமித்து அரசு ஆணை வெளியிடப்பட்டது.ஒரு நபர் குழுவால் சுமார் 1066 அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. மேலும் 05.10.2009 முதல் 01.12.2009 வரை சுமார் 130 அலுவலர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து ஒரு நபர் குழுவின் முன் நேரில் எடுத்துரைத்தனர்.இக்கோரிக்கைகளை ஒரு நபர் குழு பரிசீலித்து தனது அறிக்கையினை இன்று அரசுக்கு அளித்துள்ளது. ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை அரசு ஆராய்ந்து உரிய ஆணைகள் விரைவில் வெளியிடும் என்று முதலஅமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
Friday, April 23, 2010
ஆயிரம் அரசு அலுவகங்கள் முன் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு . ஒரு நபர் குழுவின் அறிக்கையினை உடனடியாக வெளியிட வேண்டுமெனவும், அரசுஊழியர் சங்கத்தினை அழைத்து பேச வேண்டுமெனவும் வலியுறுத்தி, இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் அரசுஅலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
தமிழ்செல்வி
Thursday, April 22, 2010
சாலைப்பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு
பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக கருதி அறிவிக்கவேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் சங்கம் இன்று ( 22-04-10 ) மாவட்ட தலைநகரங்களில் நடத்தும் பெருந்திரள் முறையீடு இயக்கத்திற்கு தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துகொள்கிறது.
தமிழ்செல்வி
Wednesday, April 21, 2010
துணை முதல்வருக்கு வேண்டுகோள்!
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டு மொத்த விடுப்பில் சென்றுள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசி சுமூக முடிவு காணவேண்டும் என தமிழக துணை முதல்வர் அவர்களை அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது .
தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்
Tuesday, April 20, 2010
பி எஸ் என் எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு லட்சம் ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் குறைப்பதை கண்டித்து நாடு முழுவதும் அதன் தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.30 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்த சாம் பிடோரா கமிட்டி அளித்த சிபாரிசை மத்திய அரசு செயல்படுத்த முற்படுவதை கண்டித்து நாட்டில் உள்ள 15 தொழிற்சங்கங்களைச்சேர்ந்த 3 லட்சம் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க கூட்டு செயல் கமிட்டி அமைப்பாளர் வி.ஏ.என். நம்பூதிரி, இந்த வேலை நிறுத்ததால் தொழிலாளர்கள் எந்த பணியையும் செய்ய மாட்டார்கள் என்றார்.
தமிழ்செல்வி
Monday, April 19, 2010
Sunday, April 18, 2010
மனித சங்கிலி போராட்டம்
சத்துணவு ஊழியர் சங்கம், காலிப்பணியிடங்களில், தகுதியின் அடிப்படையில் , முன்னுரிமை வழங்கி , பணி உயர்வு வழங்க வலியுறுத்தியும் சட்ட ரீதியான மாதந்திர ஓய்வுஊதியம் வழங்க வலியுறுத்தியும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கேட்டும் , 20-04-10-ல் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடைபெறவுள்ளது
தமிழ்செல்வி
ஆயிரம் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்
ஒரு நபர் குழுவின் அறிக்கையினை உடனடியாக வெளியிட வலியுறுத்தியும் , அரசுஊழியர் சங்கத்தினை அழைத்து பேசவேண்டும் என வலியுறுத்தியும் , ஏப்ரல் 23 -ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் அரசுஅலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என 17-04-10 அன்று சென்னையில் நடைபெற்ற அரசுஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது . இந்த ஆர்ப்பாட்டத்தினை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென மாவட்ட வட்ட கிளைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன .
தமிழ்செல்வி
Saturday, April 17, 2010
காஷ்மீர் ஊழியர்கள் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது
காஷ்மீரில் அரசுஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளனர். அம்மாநில உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உரிமையில்லை என அறிவித்ததை ஒட்டி இந்த முடிவு போரட்டக்குழுவால் எடுக்கப்பட்டது . கைது செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசுஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அம்மாநில முதல்வர் கோரிக்கைகள் குறித்து போராட்டக்குழுவுடன் பேசப்படும் என அறிவித்துள்ளார். அகில இந்திய அரசுஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் தோழர் மக்பூல் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசப்பட்டது . வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்ளப்பட்டது .
உரிய நேரத்தில் கஷ்மீர் ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட, வட்டக்கிளைகளுக்கு மாநில மையம் நன்றினையும் பாரட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறது.
தமிழ்செல்வி
Friday, April 16, 2010
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வரும்21-ம் தேதி ஒருநாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகின்றனர் .
-வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றி இருப்பதை ரத்து செய்ய வலியுறுத்தியும்
-கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கு தனி பணியிடங்களை ஏற்படுத்த கேட்டும்
-விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டங்களை நடத்துவதை கைவிடும்படி வலியுறுத்தியும்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர் தமிழக அரசு அச்சங்க தலைவர்களை அழைத்துப்பேசி சுமூக முடிவு காணவேண்டும் என தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் போராட்டத்திற்கு அரசுஊழியர் சங்கம் தனது ஆதரவினையும் தெரிவித்துகொள்கிறது.
தமிழ்செல்வி
Thursday, April 15, 2010
Jammu and Kashmir State Employees Strike
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 3-ம் முதல் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.
- 6-வது ஊதியக்குழுவின் நிலுவையினை உடனடியாக வழங்கவேண்டும்
- 6-வது ஊதியக்குழுவின் நிலுவையினை உடனடியாக வழங்கவேண்டும்
- வீட்டு வாடகைப்படி ஏற்ற தாழ்வுகளை களைய வேண்டும்
- அங்கன்வாடி உள்ளிட்ட தற்காலிக ஊழியர்களின் பனி வரன்முறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
-ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப போராட்டத்தில் அம்மாநிலத்தில் உள்ள தலைமைச் செயலக ஊழியர் சங்கம் உள்பட அணைத்து சங்கங்களும் கலந்து கொண்டுள்ளன. இச்சங்கங்கள் ஒன்றாக இணைந்து போரட்டக்குழுவினை ஏற்படுத்தியுள்ளன. அகிலஇந்திய மாநில அரசுஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய செயலாளர் தோழர் மக்பூல் அவர்களின் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசுஊழியர் சங்கம் இந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றுகிறது .
போராட்டக்குழு தலைவர்கள் கடந்த மார்ச் மாதம் 19 தேதி மற்றும் ஏப்ரல் 3 தேதி ஆகிய இருநாட்கள் அம்மாநில நிதி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் எந்த பலனும் கிடைக்காததால் வேலைநிறுத்தம் நடைப்பெற்றது.
ஏப்ரல் 5-ல் அம்மாநில அரசு போராடும் அரசுஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்தியுள்ளது . தோழர் மக்பூல் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது .
இதற்கிடையில் அம்மாநில உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு பொதுநல வழக்கில் அரசுஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உரிமையில்லை என்றும் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அந்நீதிமன்றம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு 01-01-1996 பிறகு 13 ஆண்டுகள் கழித்து 6-வது உதியக்குழுவினை அமைத்து அதன் பரிந்துரைகளை 01-01-2006 முதல் அமல்படுத்த முடிவெடுத்தபோது இதை மாநிலத்தில் அமல்படுத்துவது அம்மாநில அரசுகளை சார்ந்தது என கை கழுவிய காரணத்தினால் இன்று பல்வேறு மாநிலங்களில் இத்தகைய போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட ஒரு போராட்டத்தின் மூலமே ஊதிய மாற்றத்தை பெற முடிந்தது. ஆந்திரம், கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநில அரசுகள் அம்மாநில அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய குழுவின் பரிந்துரைகளையும் கடந்து ஊதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளன.
காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ஊதிய மாற்ற நிலுவைகளை வழங்குவதில் அம்மாநிலஅரசு தயக்கம் காட்டுகிறது. இத்தகைய மாநிலங்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு அங்கு அரசிற்கும் அரசு ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ள மோதலை வேடிக்கை பார்த்துகொண்டுஇருக்கிறது. மத்திய அரசின் பொறுப்பற்ற இத்தகைய நடவடிக்கைகளே வேலை நிறுத்தத்திற்கு காரணம் ஆகிறது. 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் மாநிலங்கள் எதிர்கொள்ளும் செலவினை மத்திய அரசும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அகில இந்திய மாநில அரசுஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி வருகின்றது.
மாநிலங்களின் வளர்ச்சிப்பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அது செலவிடப்படவில்லை என மாநிலங்களை குறை கூறி வருகின்றது. ஆனால் மத்திய அரசு ஏற்று அமல்படுத்திய 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை முழுமையாக காஷ்மீர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அமல் படுத்த தவறினால் அதை கண்டும் காணாமலும் உள்ளது.
காஷ்மீர் நீதி மன்றம் அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்த உரிமை இல்லை என்று ஒரு புதிய கண்டு பிடிப்பை கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது . இது காலகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விவாதத்தின் ஒரு பகுதியே. வேலை நிறுத்தம் எனபது உழைப்பாளி மக்களின் பிறப்புரிமை ஆகும். சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் வேலை நிறுத்த உரிமையை அங்கீகரித்தும் இன்றும் இந்திய போன்ற நாடுகளில் வேலை நிறுத்த உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. 2003 -ம ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினை தொடர்ந்து வேலை நிறுத்த உரிமை தொடர்பான வழக்குகள் இன்றும் நிலவையில் இருந்து வருகின்றன.
இன்று கஷ்மீரில் அரசு ஊழியர்களின் தலைவர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில நீதிமன்றம் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது . இந்நிலையில் அம்மாநிலஅரசு போராட்டத்தை சுமூக முடிவிற்கு கொண்டுவரும் வகையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழாண்டு அரசு ஊழியர் சங்கம் இன்றும் நாளையும் (15-04-10 மற்றும் 16-04-10) வட்ட மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது.
காலம் அறிந்து கூவும் சேவலை
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
கல்லை தூக்கி பாரம் வைத்தாலும்
கல்லை தூக்கி பாரம் வைத்தாலும்
கணக்காய் கூவ தயங்காது
தமிழ்செல்வி
Wednesday, April 14, 2010
வணக்கம்! வாழ்த்துக்கள்!
இந்த தளம் ஒரு செய்தி தளமாக மட்டுமில்லாமல் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் தளமாகவும் அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சமூகத்தின் அவலங்களை அம்பலப்படுத்துவதுடன் தீர்வினையும் துணிச்சலுடன் சொல்லும் தளமாக இது அமையும் . நாங்கள் பலமணிநேரம் விவாதம் நடத்திய பிறகே இது போன்ற ஒரு இணைய தளத்தை துவக்க முடிவு செய்தோம் . ஊடகங்களை ஆக்க பூர்வமான பணிகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பது எங்கள் நம்பிக்கை. இந்த தளம் குறித்த உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எங்களுக்கு தெரிவிக்கவும். அது எங்களை செழுமை படுத்தும் ஊக்கம் அளிக்கும் . மீண்டும் சந்திப்போம்.இன்று டாக்டர் அம்பேத்கர் மற்றும் மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பிறந்த நாள். சித்திரை திருநாள். இந்த நாளில் உங்கள் பார்வைக்கு 'புனல்' இணையதளம் வெளியிடப்படுகிறது.
தமிழ்செல்வி
Monday, April 12, 2010
ஜம்மு காஷ்மீர் மாநில ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நான்கு லட்சம் அரசு ஊழியர்கள் கடந்த ஏப்ரல் முன்றாம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ஊதிய மாற்ற நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் - அங்கன்வாடி மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு பணி வரன் முறை - ஊதிய உயர்வு - உதியக்குழு முரண்பாடுகளை களைதல்- வீட்டு வாடகைப்படியில் உள்ள பாகுபாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடை பெறுகிறது . மாநில அரசின் நிதித்துறை செயலாளருடன் இரு முறை பேச்சுவார்த்தை நடை பெற்றும் பலன் இல்லை . அரசு அங்கு ESMA சட்டத்தை அமல் படுத்தியுள்ளது . அகில இந்திய மாநில அரசுஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் தோழர் மக்பூல் உள்பட ஆயிரம் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . அந்த மாநில அரசின் அடக்குமுறையை கண்டித்தும் போராடும் ஊழியர்களுக்கு ஆதரவு அளித்தும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெறுகின்றன. போராடும் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச வலியுறுத்தி அந்த மாநில முதல்வருக்கு தந்திகள் அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தந்திகள் அனுப்ப அரசு ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
வணிகவரிப் பணியாளர்கள் சங்கம் பிரச்சாரப் பயணம்
வணிக வரித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும் ஒழுங்கு நடவடிகை இனங்களில் விரைவாக ஆணை பிறபிக்கவும் துணை ஆணையர் பட்டியல் வெளியிடவும் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாநில செயற்குழுவின் முடிவின் படி பிரச்சாரப் பயணம் சென்னை கரூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்கியது இதில் மாநில நிர்வாகிகள் தமிழ்செல்வி ரெங்கநாதன் முருகன் வெற்றி ராஜன் மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர் .
Wednesday, April 7, 2010
வேலையின்மை எதிர்ப்பு கருத்தரங்கம்
17-04-10 சிராஜ் ஹால் எக்மோர் - சென்னை
தலைமை : இரா.தமிழ்செல்வி மாநில தலைவர் -வரவேற்புரை ப இரவி மாநில துணைத்தலைவர்
துவக்கவுரை : க. ராஜ்குமார் பொருளாளர் AISGEF
கருத்துரை
ஏ.கே. பத்மநாபன் அகில இந்திய தலைவர் CITU
இரா.சீனிவாசன் TNGEA எஸ் கண்ணன் DYFI கேI .வெங்கடராமன் Audit Association கே.ராஜேந்திரன் STFI
நன்றி : என்.இளங்கோ TNGEA
Saturday, April 3, 2010
காஞ்சியில் மகளிர் தினம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 03-04-10 அன்று காஞ்சியில் மகளிர் தின விழா மாவட்ட தலைவர் தோழர் சாரங்கன் தலைமையில் நடை பெற்றது . தோழர் நிர்மலா வரவேற்புரை ஆற்ற மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் தோழர் கியூரி வாழ்த்துரை வழங்க சி.ஐ .டி.யு மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எம் இராஜேஸ்வரி மற்றும் அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் ஆர் தமிழ்செல்வி ஆகியோர் சிறப்புரை நல்கினர். தோழர் திலகம் நன்றி கூறினார் . இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிர் பங்கேற்றனர் .
Subscribe to:
Posts (Atom)