tngea

Pages

Thursday, December 30, 2010

TNGEA RGB - நெல்லை - ஜன '11

மாநில பிரதிநிதித்துவப் பேரவை
8,9-01-11- நெல்லை
தலைமை இரா தமிழ்செல்வி மாநிலத்தலைவர்
ரவேற்ப்புரை செ.முத்துகுமாரசாமி AIIEA
துவக்கவுர எ. வில்லியம் ஜேம்ஸ் AIFUCTO
வேலைஅறிக்கை இரா. சீனிவாசன் பொதுச்செயலாளர்
பொருளாளர் அறிக்கை ந. இளங்கோ மாநில பொருளாளர்
வாழ்த்துரை மூ சுந்தரராஜன் தலைவர்
செ போத்திலிங்கம் TNPTF
நிறைவுரை . ராஜ்குமார் AISGEF
நன்றி : பா சங்கரவேலாயுதம்

Friday, December 10, 2010

மாநில செயற்குழுக்கூட்டம்
தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் முகவையில் 18-11-10 அன்று நடைபெறவுள்ளது . ஜனவரி 8,9 தேதிகளில் நெல்லையில் நடைபெறவுள்ள மாநில பிரதிநிதித்துவப் பேரவை கூட்டத்தின் அறிக்கைகளையும் எதிர்கால திட்டங்களையும் இக்கூட்டத்தில் இறுதி செயப்படும்

இரா.தமிழ்செல்வி

Wednesday, November 24, 2010

மாநில பிரதிநிதித்துவப் பேரவை

தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை 2011 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் நெல்லையில் நடைபெறவுள்ளது

சென்னையில் நடைப்பெற்ற அரசுஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது . மேலும் ஊதிய மாற்ற முரண்பாடுகள் களைந்திட வலியுறுத்தி 15-11-10 முதல் 30-11-10 வரை ஊழியர் சந்திப்பு இயக்கம் மற்றும் அனைத்து சங்கங்களுடன் இணைந்து கூட்டு போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது .

இரா.தமிழ்செல்வி

Friday, October 15, 2010

Thursday, October 14, 2010

அரசு ஊழியர் பேரணி

மாவட்ட தலைநகரங்களில் பேரணி
ஒரு நபர் குழு அறிக்கை ஏமாற்றம்
அரசு ஊழியர் சங்கத்தை அழைத்து பேசி முரண்பாடுகளை களைய வலியுறுத்தி
பணி நீக்கம் செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி
மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 20-ம் தேதி
மாபெரும் பேரணி

அனைவரும் வாரீர் அணி வகுப்பீர்
--TNGEA

Friday, October 8, 2010

பணி நீக்கத்தை ரத்து செய்திடுக AISGEF தீர்மானம்

சத்துணவு ஊழியர்களின் பணி நீக்கதினை ரத்து செய்திடுக

தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சத்துணவு ஊழியர்களை உடனடியாக பணியில் அமர்த்தவேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய மாநில அரசுஊழியர் சம்மேளனத்தின் தேசிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

விஜயவாடாவில் அக்டோபர் 5,6,7 தேதிகளில் நடைபெற்ற கூடத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது . தேசிய குழு கூட்டத்தினை ஆந்திரா மாநில முதல்வர் திரு ரோசயா அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றினார். விஜயவாட நாடளுமன்ற உறுப்பினர் திரு லகடபதி ராஜகோபால் வரவேற்ப்புரையாற்றினார். நாடு முழுவதுமிருந்து 1100மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கடந்த 44 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தம் செய்துவரும் பீகார் மாநில அரசுஊழியர்களின் தலைவர்களை அழைத்து பேசி சுமூக முடிவினை எட்ட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வேலை நிறுத்த உரிமையை சட்ட பூர்வமாக வழங்கிட வேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என் வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 18 அன்று அகில இந்திய கண்டன நாள்கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Saturday, October 2, 2010

அகில இந்திய சம்மேளனத்தின் பொன் விழா

போராடும் அமைப்பிற்கு பொன்விழா
-க.ராஜ்குமார்-
நன்றி தீக்கதிர் 2-10-10

மாநில அரசு ஊழியர்களை இணைக்கும் பாலமாக விளங்கும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் 1960-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரில் ஜனவரி 23, 24-ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் மாநாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திர மாநில என்.ஜி.ஓ. யூனியனின் பெருமைமிகு தலைவர் ஸ்ரீ இராமுலுவின் சீரிய முயற்சியால் துவக்கப்பட்டது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தில் தற்போது 28க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் அரசு ஊழியர் அமைப்புகள் இணைந்துள்ளன. சுமார் 80 லட்சம் மாநில அரசு ஊழியர்களை பிரதிபலிக்கக்கூடிய அமைப்பாக சம்மேனம் விளங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற செப்டம்பர் 7 வேலை நிறுத்தத்தில் பல்வேறு மாநில இணைப்பு அமைப்புகளின் பங்கேற்பு இதனை உறுதி செய்துள்ளது.

சம்மேளனத்தின் சாதனைகடந்த 50ஆண்டுகாலமாக, சம்மேளனத்தின் இடைவிடாத செயல்பாட்டின் காரணமாக பெரும்பான்மையான மாநிலங்களில் இன்று மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத்தர முடிந்துள்ளது. 1980க்குப் பிறகு மத்திய அரசில் புதிய பொருளாதாரக் கொள் கைகள் அமல்படுத்த தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நடைபெற்றுள்ள ௧௪ அகில இந்திய வேலை நிறுத்தங்களில், சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று லட்சக் கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்று முத்திரை பதித்துள்ளனர். சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று 10-2-88 அன்று நடைபெற்ற அகில இந்திய சூவலை நிறுத்தமே, 1988நடைபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் (ஜாக்டீ) போராட்டத்திற்கு வித்திட்டது. இந்த போராட்டமே தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசால் 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் சட்டமாக்கிட முயலும் புதிய பென்சன் திட்டத்தை இதுவரை தடுத்து நிறுத்திட முடிந்துள்ளது என்றால், அதில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பங்கு மகத்தானது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், ஆசிரியர் கூட்டமைப்பு, எல்.ஐ.சி., வங்கி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதை எதிர்த்தும், வேலை நிறுத்த உரி மையை அடிப்படை உரிமையாக்கிட வலியுறுத்தியும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் குறிப்பிடும்படியான பாத்திரத்தை சம்மேளனம் வகித்து வருகிறது. வேலையின்மைக்கு எதிரான பிரச்சார இயக் கத்தில் ஏனைய வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து நமது சம்மேளனம் பணியாற்றியுள்ளது.

போராட்டக்களத்தில் ஆதரவுதமிழ்நாட்டில் 2003ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஊழியர்களை பாதுகாத்திட நாடு முழுவதும் நிதி திரட்டி தமிழக அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் போராட்டத்தை பாதுகாத்தது அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம். இன்றும் காஷ்மீர் மற்றும் பீகாரில் போராடி வரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை பாதுகாத்து, நாடு முழு வதும் அவர்களுக்கு ஆதரவினை திரட்டி வருகிறது சம்மேளனம்.

இந்த காலகட்டத்தில் அகில இந்திய சம்மேளனம், பெண்களை அணிதிரட்டி, அவர்களை பயிற்றுவித்து தலைமைப் பொறுப்பிற்கு உயர்த்தவும் தவறவில்லை. சம்மேளனத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மாநில அமைப் பும் அம்மாநிலத்தில் பெண்களுக்கென்று ஒரு துணை அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என முடிவெடுத்து, அந்த துணை அமைப்பின் பொறுப்பாளர்களை தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலத்தில் பெண்களுக்கான அமைப்பு மேற் கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக் கின்றனர். இதன் மூலம் பெண்களை தேசிய தலைவர்களாக அடையாளம் காட்ட முடிந் துள்ளது.

தமிழகத்தின் பங்குதோழர் எம்.ஆர்.அப்பன் சம்மேளனம் உருவான 1960-ம் ஆண்டிலிருந்து சம்மேளனத்துடன் தொடர்பு கொண்டு வந்தார். அரசு அலுவலர் ஒன்றியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தோடு இணைந்து செயலாற்றிட வலியுறுத்தி வந்தார். பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சம்மேளனக் கூட்டங்களில் எம்.ஆர்.அப்பன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கைக் குழு உருவாகி செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் அறிவிக்கக் கூடிய போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் தொடங்கப்பட்ட பின்னர் (1984) மும்பையில் 1985ல் நடைபெற்ற சம்மேளனத்தின் 6-வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் அகில இந்தியச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம் மேளனத்தின் 7வது தேசிய மாநாடு 1990, மே மாதம் 12 முதல் 15 தேதிகளில் கோவையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆரம்பித்து (1984) குறுகிய காலத்தில் அகில இந்திய மாநாட்டை நடத்திட முன்வந்தது, அனைத்து மாநில பிரதிநிதிகளின் பாராட்டை பெறத்தக்கதாக அமைந்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற 9வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் சம்மேளனத்தின் கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த கே.கங்காதரன் அகில இந்திய செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக சம்மேளனத்தின் 11-வது தேசிய மாநாடு 2002 டிசம்பர் மாதம் 27 முதல் 30 வரை சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவர் என்.எல்.ஸ்ரீதரன் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கொல்கத்தாவில் 2005-ம் ஆண்டு நடை பெற்ற சம்மேளனத்தின் 12-வது தேசிய மாநாட்டில் அரசுஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் துணைப் பொதுச் செயலாளராகவும், இன்றைய மாநிலத் தலைவராக உள்ள இரா.தமிழ்செல்வி, அகில இந்திய துணைத் தலைவராக வும் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சம்மேளனத்தின் 13-வது தேசிய மாநாட்டில் ஆர்.ஜி.கார்னிக் அகில இந்திய தலைவராகவும், சுகுமால்சென் மூத்த துணைத்தலைவராகவும், அஜய் முகோபாத்யாயா கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன் றைய பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் அகில இந்திய பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய மாநிலத் தலைவர் இரா தமிழ்செல்வி அகில இந்திய துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமையிடம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் சம்மேளனத்தின் அகில இந்திய பொருளாளராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன் தலைமையிடத்து செயலாளராகவும், கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இரா.பீட்டர் பர்னபாஸ் மற்றும் மாநிலச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாகவும் தற்போது செயல்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சி.பி.மல்லிகா பத்மினி தேசிய செயற்குழுவில் தமிழகத்தின் சார்பில் மகளிர் பிரதிநிதியாக பங்கேற்று வருகின்றார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் 5,6,7 தேதிகளில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. விழாவில் நாடு முழுவதுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். முதல் நாள் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சம்மேளனத்தின் 50-ம் ஆண்டு பொன் விழா நடைபெறுகின்ற நேரத்தில் தமிழகம் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமையிடமாக மாறியிருப்பதின் மூலம் அகில இந்திய சம்மேளனத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னோடிகள் கடந்த காலங்களில் ஆற்றிய உழைப்பு அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Friday, October 1, 2010

தென் ஆப்ரிக்கா பயணம்

தென் ஆப்ரிக்க நாட்டில் ஜோஹெனச்பெர்க் நகரில் செப்டம்பர் மாதம் 27 முதல் 29 வரை நடைபெற்ற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்தா ஊழியர்களின் மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் இரா தமிழ்செல்வி கலந்துகொண்டார்.

Saturday, September 25, 2010

தொகுப்பு ஊதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி உயர்வு

©
GOVERNMENT OF TAMIL NADU
2010
Manuscript Series
FINANCE (ALLOWANCES) DEPARTMENT
G.O. No.372, Dated 24th September, 2010
(Purattasi 8 , Thiruvalluvar Aandu 2041)
Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM –
Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc
Increase from 01.07.2010 - Orders - Issued.
READ - the following papers:-
1. G.O.Ms.No.97, Finance (Allowances) Department, dated
27.03.2010.
2. G.O.Ms.No.371, Finance (Allowances) Department, dated
24.09.2010
*****
ORDER:
In the Government Order first read above, the Government sanctioned an ad-hoc increase in the Consolidated Pay / Fixed Pay / Honorarium with effect from 01.01.2010 at the rate of Rs.20/- per month in respect of those drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium up to Rs.600/- per month and at the rate of Rs.40/- per month in respect of those drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium of above Rs.600/- per month.

2. In the Government Order second read above, orders were issued enhancing the Dearness Allowance payable to Government employees on regular time scales of pay with effect from 01.07.2010. Government has therefore, decided to grant ad-hoc increase to those drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium with effect from 01.07.2010. Accordingly, Government direct that employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium be allowed another ad-hoc increase with effect from 01.07.2010 as detailed below:-
For those drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium up to Rs.600/- per month from 01.01.2006 Rs.20/- per month For those drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium above Rs.600/- per month from 01.01.2006 Rs.40/- per month

3. The arrears of adhoc increase for the months of July and August, 2010 shall be paid after the disbursement of Consolidated pay / Fixed pay / Honorarium of September, 2010.

4. This order shall also apply to employees of Local Bodies, Over head tank operators and Sweepers working in Rural Development and Panchayat Raj
Department.

(BY ORDER OF THE GOVERNOR)
K. SHANMUGAM
PRINCIPAL SECRETARY TO GOVERNMENT
To
All Secretaries to Government.
All Heads of Department.
All Collectors.
Tamil Nadu Information Commission, 378, Anna Salai, Teynampet, Chennai-18.
The Director of Social Welfare Department, Chennai-5.
The Director of School Education, Chennai-6.
The Accountant General (Accounts & Entitlements),Chennai-18.
The Principal Accountant General (Audit-I), Chennai-18.
The Accountant General (Audit-II), Chennai-18.
The Accountant General (CAB), Chennai-9.
The Accountant General (CAB), Madurai.
All Pay and Accounts Officers.
All Treasury Officers.
The Commissioner, Corporation of Chennai / Madurai / Tiruchirappalli / Coimbatore / Salem /
Tirunelveli / Erode / Tirupur.
The Director of Rural Development, Chennai-15.
The Director of Local Fund Audit, Chennai-108.
Copy to:-
The Social Welfare and Nutritious Meal Programme Department, Chennai-9.
The Municipal Administration and Water Supply Department, Chennai-9.
The Rural Development and Panchayat Raj Department, Chennai-9.
All Sections of Finance Department, Chennai-9.
Stock File/Spare Copies
// Forwarded : By Order //
SECTION OFFICER

அகவிலைப்படி உயர்வு

©
GOVERNMENT OF TAMIL NADU
2010
Manuscript Series
FINANCE (ALLOWANCES) DEPARTMENT
G.O. No.371, Dated 24th September 2010
(Purattasi 8, Thiruvalluvar Aandu 2041)
ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness
Allowance from 1st July 2010 – Orders – Issued.
READ - the following papers:
1. G.O.Ms.No.96, Finance (Allowances) Department, dated 27th
March 2010.
2. From the Government of India, Ministry of Finance,
Department of Expenditure, New Delhi, Office Memorandum
No. 1(6)/2010-E – II (B), dated 22.09.2010.
*****
ORDER:
In the Government Order first read above, orders were issued sanctioning revised rate of Dearness Allowance to State Government employees as detailed below:-
Date from which payable Rate of Dearness Allowance (per month) 1st January, 2010 35 per cent of Pay plus Grade Pay
2. The Government of India in its Office Memorandum second read
above has now enhanced the Dearness Allowance to its employees from 35% to
45% with effect from 1st July, 2010.
3. Following the orders issued by the Government of India, the
Government sanction the revised rate of Dearness Allowance to the State
Government employees as indicated below:-
Date from which payable Rate of Dearness Allowance
(per month)
1st July, 2010 45 per cent of Pay plus Grade Pay
4. The Government also direct that the above increase in Dearness
Allowance shall be paid in cash with effect from 01.07.2010.

5. The payment of arrears of Dearness Allowance for the months of July and August, 2010 shall not be made before the date of disbursement of salary of September, 2010. While working out the revised Dearness Allowance, fraction of a rupee shall be rounded off to next higher rupee if such fraction is 50 paise and above and shall be ignored if it is less than 50 paise.

6. The Government also direct that the revised Dearness Allowance sanctioned above, shall be admissible to full time employees who are at present getting Dearness Allowance and paid from contingencies at fixed monthly rates. The revised rates of Dearness Allowance sanctioned in this order shall not be admissible to part time employees.

7. The revised Dearness Allowance sanctioned in this order shall also apply to the teaching and non-teaching staff working in aided educational institutions, employees under local bodies, employees governed by the University Grants Commission/All India Council for Technical Education scales of pay, the Teachers/Physical Directors/Librarians in Government and Aided
Polytechnics and Special Diploma Institutions, Village Assistants in Revenue Department, Noon Meal Organisers, Child Welfare Organisers, Anganwadi Workers, Cooks, Helpers, Makhal Nala Paniyalar, Panchayat Assistants/Clerks in Village Panchayat under Rural Development and Panchayat Raj Department.

8. The expenditure shall be debited to the detailed head of account 03. Dearness Allowance' under the relevant sub-minor, sub-major and major heads of account.

9. The Treasury Officers / Pay and Accounts Officers are requested to make payment of the revised Dearness Allowance when bills are presented without waiting for the authorization from the Principal Accountant General (A&E) Tamil Nadu, Chennai-18.

(BY ORDER OF THE GOVERNOR)
K. SHANMUGAM
PRINCIPAL SECRETARY TO GOVERNMENT.
To
All Secretaries to Government.
The Secretary, Legislative Assembly Secretariat, Chennai-9.
The Secretary to the Governor, Chennai-32.
The Comptroller, Governor's Household, Raj Bhavan, Chennai-32.
The Governor's Secretariat, Raj Bhavan, Guindy, Chennai-32.
All Heads of Departments.
Tamil Nadu Information Commission, 378, Anna Salai, Teynampet, Chennai-18.
All Departments of Secretariat (OP/Bills)
All Sections in Finance Department.
All Collectors / All District Judges / All Chief Judicial Magistrates.
The Accountant General (Accounts and Entitlements), Chennai-18.
The Accountant General (Accounts and Entitlements), Chennai-18 (by name).
The Principal Accountant General (Audit I), Chennai-18.
The Principal Accountant General (Audit I), Chennai-18 (by name).
3
The Accountant General (Audit II), Chennai-18.
The Accountant General (Audit II), Chennai-18 (by name).
The Accountant General (CAB), Chennai -9 / Madurai.
The Director of Treasuries and Accounts, Chennai-15.
The Pay and Accounts Officer (East) Chennai-5.
The Pay and Accounts Officer (Secretariat) Chennai-9.
The Pay and Accounts Officer (South) Chennai-35.
The Pay and Accounts Officer (North) Chennai-79.
The Pay and Accounts Officer, Madurai-1.
All Treasury Officers / All Sub-Treasury Officers.
The Chairman, Tamil Nadu Public Service Commission, Chennai-2.
The Commissioner of Tribunal for Disciplinary Proceedings,
No.6 Manickeswari Road, Chennai-10.
The Registrar, High Court, Chennai-104.
The Registrars of all Universities/Agricultural University, Coimbatore.
All State owned Corporations and Statutory Boards.
The Commissioner, Corporation of Chennai / Madurai / Coimbatore / Tiruchirappalli / Salem /
Tirunelveli / Erode / Tirupur.
All Divisional Development Officers.
All Tahsildars.
All Block Development Officers.
All Municipal Commissioners.
All Revenue Divisional Officers.
All Chief Educational Officers.
The Project Co-ordinator, Tamil Nadu Integrated Nutrition Project, Tharamani, Chennai.
All Recognised Service Associations.
Copy to:
The Private Secretary to the Chief Secretary to Government, Chennai-9.
The Private Secretary to the Principal Secretary to Government, Finance Department, Chennai-
9.
The Secretary to Chief Minister, Chennai-9.
The Secretary to Government of India, Ministry of Home Affairs, New Delhi.
The Secretary to Government of India, Ministry of Finance (Department of Economic Affairs),
New Delhi.
The Secretary to Government of India, Ministry of Finance (Department of Expenditure), New
Delhi.
The Secretary to Government of India, Ministry of Finance (Department of Banking and
Revenue), New Delhi.
The Secretary to Government of India, Ministry of External Affairs, New Delhi.
The Senior Research Officer, Pay Research Unit, Ministry of Finance, (Department of
Expenditure), Room No.261, North Block, New Delhi.
Stock File / Spare Copies.
//Forwarded : By Order//
SECTION OFFICER

Thursday, September 2, 2010

போராட்டம் கசக்குகிறதா ?

என் வரதராஜன் கேள்வி

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். டிஸ்மிஸ் செய்யப்படு கிறார்கள். எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது நடத்திய போராட்டங்கள் எல்லாம் அவர்களுக்கு இனிப்பாக இருந்தது. ஆளுங்கட்சியாக மாறிய பின் அத்தகைய போராட்டங்கள் திமுகவுக்கு கசப்பாகத் தெரிகிறது.

திமுக அரசுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

Tuesday, August 31, 2010

சத்துணவு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் வேலை நீக்கம்

சத்துணவு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் வேலை நீக்கம்

அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 30-08-10 அன்று கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட சத்துணவு சங்கத்தின் மாநில நிர்வாகிகளை வேலை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் சத்துணவு ஊழியர்கள் கோபம் அடைந்துள்ளனர் . நாளை 31-08-10௦ தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திட சத்துணவு ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. அரசின் இந்த பழிவாங்கும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து 31-08-10 அன்று அனைத்து வட்டங்களிலும் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இரா.தமிழ்செல்வி மாநிலத்தலைவர்

Monday, August 30, 2010

சத்துணவு ஊழியர்களின் போராட்டம் அரசு அடக்குமுறை

சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோபம்
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் 30-08-10

சத்துணவு ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட 1982-ம் ஆண்டு முதல், அவர்களின் பணிப் பாதுகாப்பிற்காகவும் ஊதிய மேம்பாட்டிற்காகவும் சங்கம் அமைத்துக் கொடுத்து வழிநடத்தியவர் தோழர் எம்.ஆர். அப்பன். அவரின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 30) முறையான காலமுறை ஊதியம் வழங்க கேட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானதே!இந்தியாவிலேயே குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டிருந்த தமிழக அரசு ஊழியர் களிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிற்போக்கு குணம் கொண்ட தலைமைகளை எதிர்த்து போராடி, அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை ஒரு மகத்தான போராட்டம் மூலம் பெற்றுத்தந்தவர் தோழர் எம்.ஆர்.அப்பன்ர். அவரின் எளிமையான தோற்றமும், கொஞ்சும் தமிழும் லட்சக் கணக்கான ஊழியர்களை கவர்ந்தது என் றால் மிகையாகாது. அவரின் ஆழ்ந்த ஞானமும், ஆங்கிலச்சொல் திறனும் அரசு அதிகாரி களை ஈர்த்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது அறிக்கையில், நாங்கள் வெற்றி பெற்றுவந்தால் தொகுப்பூதிய முறையை ஒழித்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்து. அரசு ஊழியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், பிற மாநிலங்களில் இத்தகைய ஊழியர்களுக்கு தரப்ப டும் ஊதியத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் கூடுதலாக வழங்கப்படுவதாகவும், எனினும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் உறுதி யளித்தார். மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தும்போது சத்துணவு ஊழியர் களுக்கு ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதற்கு பதிலாக, ஒரு புதிய சிறப்பு காலமுறை ஊதியத்தை குறைந்தபட்ச ஊதியத்திற்கும் மிகக் குறைவாக கண்டுபிடித்து வழங்கினார்.

பிரச்சனைகளை சங்க பிரதிநிதிகளுடன் பேசி தீர்ப்பதற்கு பதிலாக தனக்கும் தனது ஆட்சிக்கும் எதிரான போராட்டமாக பார்ப்பது என்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது. விஷம் போல் ஏறிவரும் விலைவாசி இன்று நடுத்தர மக்களை வாட்டி வதைப்பதை உணராமல் அரசு ஊழியர்களுக்கு அள்ளித் தந்துவிட்டதாக நினைத்து செயல் பட்டால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். இன்று 12 லட்சம் அரசுஊழியர்களில் 5 லட்சம் அரசு ஊழியர் கள் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற பெயரில் குறைந்த ஊதியத்தை, மாதம் ரூ.100 முதல் ரூ.6000 வரை பெற்றுக் கொண்டி ருப்பதை அலட்சியப்படுத்துவது ஆபத்தில் முடியும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.மாறாக சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடுவ தாக அங்கலாய்த்துக்கொள்கிறார்.

தமிழக அர சின் அணுகுமுறைதான் உண்மையில் போராட் டங்களை தூண்டுகிறது. இந்தியாவிற்கே வழி காட்டுவதாக அமைந்துள்ள சத்துணவுத் திட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணி யாற்றும் ஊழியர்களின் பரிதாப நிலையை கண்டு கொள்ளாமல், சங்கத்திலிருந்து ஓடிய தலை வர்களை வைத்து போட்டி மாநாடு நடத்தி, நன்றி மழையில் நனைந்து மகிழ்வது நியாயமா? வாழ்க்கையை தொகுப்பூதிய பணியில் தொலைத்துவிட்ட ஊழியர்களின் கோபம் நியாயமானதே! .

Sunday, August 29, 2010

சென்னைக்கு வரும் சத்துணவு ஊழியர்கள் கைது

தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் கண்டனம்

சென்னையில் நாளை 30-08-10 நடைபெறவுள்ள கோட்டை முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேரூந்துகளில் கிளம்பிய ஆயிரகணக்கான சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன . கடந்த கால வரலாற்றை மறந்து போராடும் ஊழியர்களை காவல்த்துறை கொண்டு அடக்குமுறை மூலம் அடக்கிவிடலாம் என தமிழக அரசு நினைக்கிறது. தமிழக அரசின் இந்த போக்கிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துகொள்வதுடன் அச் சங்கத்தின் தலைவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காணவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் .
தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்

Saturday, August 28, 2010

ஒரு நபர் குழு அரசு அறிவிப்பு கண்துடைப்பு

ஒருநபர் குழுவின் பரிந்துரைகளை வெளியிடாமல் தன்னிச்சையான அறிவிப்பு தமிழக அரசின் கண்துடைப்பு அரசு ஊழியர் சங்கம் விமர்சனம்

சென்னை, ஆக. 27-ஒரு நபர் குழுவின் பரிந்து ரைகளை வெளியிடாமல் தன் னிச்சையான முடிவுகளை தமி ழக அரசு அறிவித்திருப்பது ஒரு கண்துடைப்பே என்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் கண் டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன் ஆகியோர் வெள்ளியன்று வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு அரசு ஊழியர் களுக்கு மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையான ஊதிய மாற்றம் என்ற பெயரில் ஆணை யிடப்பட்ட ஊதிய மாற்றத்தில் ஏராளமான குறைபாடுகள் மலிந்துள்ளன. இவற்றைக் களைவதற்கு சங்கங்களை அழைத்து நேரடிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் தொடர்ந்து தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் வலி யுறுத்தி வந்துள்ளது.ஆனால், இதற்கு மாறாக, 9.9.2009 அன்று ஊதியக் குறை பாடுகளைக் களைவதற்கு ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர்குழுவை அமைத்து தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் ஊதிய மாற்றத்தில் குறைபாடுகள் உள்ளது என்பதை தமிழக அரசு ஒப்புக் கொண்டது. எனினும், ஜனநாயக ரீதியாக சங்கங்களை அழைத்து, இரு தரப்பு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதில், தமிழக அரசு அக்கறை காட்ட வில்லை என்பதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியது.எவ்வாறாயினும், இந்த ஒரு நபர் குழுவேனும் முறையாக சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணை யான வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி, கல்விப் படி மற்றும் இணையான ஊதி யம் வழங்கப்படாத ஊழியர் களுக்கும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி உள் ளிட்ட உழைப்பு சுரண்டலுக்கு நீண்டகாலமாக ஆளாக்கப்பட் டுள்ள சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர் கள், ஊராட்சி உதவியாளர்கள், பேரூராட்சி எழுத்தர்கள், மக் கள் நலப்பணியாளர்கள் மற் றும் கிராமப்புற நூலகர்கள் போன்ற பிரிவினருக்கு வரைய றுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வஞ் சிக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப ஊழியர்களது ஊதிய முரண்பாடுகளை களைவது ஆகிய பிரச்சனைகளுக்கு முழு மையானதும், நியாயமானது மான தீர்வுகளைத் தர முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப் பட்டது.ஒருநபர் ஊதியக் குழுவின் பணிக்காலம் முதலில் மூன்று மாத காலம் என அறிவித்த தமி ழக அரசு, 9 மாத காலம் நீட் டித்த நிலையிலும் ஒரு நபர் குழு தமது அறிக்கையை அரசிடம் அளித்திடாததால், கடந்த 23.4.2010 அன்று சங்கத்தின் சார் பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 1000 அலு வலகங்கள் முன்பாக ஆர்ப்பாட் டம் மிக வலிமையாக நடத்தப் பட்டது. அதன் அடிப்படை யில் கடந்த 24.4.2010 அன்று ஒரு நபர் குழு தமது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத் தது. அதன்பின்னரும், தொடர் ந்து தமிழக அரசு தாமதம் செய்து வந்ததால் சங்கத்தின் சார்பில் கடந்த 15.7.2010 அன்று அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் பல்லாயிரக் கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் உண் ணாவிரதம் நடைபெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் 27 அன்று தமிழக முதல்வர் ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண் டதாக அரசின் பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளார். இச்செய்தி குறிப்பின்படி 2 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பலன் பெறு வார்கள் என்றும், இதனால் அரசுக்கு ரூ.223 கோடி கூடுதல் செலவாகும் எனவும், திருத்திய ஊதிய விகிதங்கள் தொடர் பான ஆணைகள் துறைவாரி யாக விரைவில் வெளியிடப் படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்செய்தியின்படி 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் மட்டுமே பலன் பெறுவார் கள் என்பதிலிருந்து அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள் ளது. சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர் கள் மட்டுமே 2 லட்சம் பேர் உள்ள நிலையில், மக்கள் நலப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேர், வருவாய் கிராம ஊழியர்கள் 17 ஆயிரம் பேர் உள்ளிட்டோருக் கும், தொழில்நுட்ப ஊழியர் கள், ஊரக நூலகர்கள், உள் ளாட்சி உதவியாளர்கள் உள் ளிட்ட இதர 10 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றா தது குறித்து அரசு ஊழியர்களி டையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.மேலும், ஒரு நபர் குழு பரிந் துரைகளை வெளியிடாமலும், சங்கங்களின் கருத்துக்களை கேட்டு அறிந்திடாமலும், தன் னிச்சையாக தமிழக அரசு அறி வித்துள்ளது, தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, 12 லட்சம் தமிழக அரசு ஊழியர் களின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்றிட, ஒரு நபர் குழு பரிந்துரைகளை வெளி யிட்டு, சங்கங்களை அழைத் துப் பேசி தீர்வு காண வேண்டு மென தமிழக அரசை தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி அரசுஊழியர்கள் செப் 7 வேலைநிறுத்தத்தில் பங்கேற்ப்பு

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்பு

புதுச்சேரி, ஆக.27: நாடு முழுவதும் செப்.7-ம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர் சங்க சம்மேளனம் பங்கேற்கிறது.


÷இதுகுறித்து பொதுச்செயலர் ஜெ.புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பினை ஏற்று, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் விடுத்துள்ள அழைப்பின்படி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில், சம்மேளனமும் அதன் இணைப்புச் சங்கங்களும் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, August 26, 2010

மக்கள் ஊழியர்களுக்கு ஊதியம் போதுமா ?

நமது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் (மக்களவை + மாநிலங்களவை) ஒன்றிணைந்து, ஒருமித்த குரலில் பேசி தங்களுடைய மாத ஊதியத்தை மும்மடங்காகவும், இதர சலுகைகளை இரண்டு மடங்காகவும் உயர்த்தி பெற்றுள்ளார்கள்!

இதுவரை மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் உள்ள 250 உறுப்பினர்களும் மாதத்திற்கு ரூ.16,000 ஊதியமாகப் பெற்றுவந்தனர். இதனை ரூ.50,000 ஆக உயர்த்தித் தரலாம் என்று நாடாளுமன்றக் குழு அளித்த பரிந்துரையை ஏற்றித்தர (!) மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ரூ.80,000 ஆக உயர்த்த வேண்டும் என்று 'பிரதமர்' லாலு பிரசாத் தலைமையில் நடந்த மாதிரி நாடாளுமன்றம் (Mock Parliament) ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

அதற்குப் பதிலாகவே தங்களுடைய அலுவலக பராமரிப்பு, தொகுதிப் படி ஆகியவற்றிற்கு மேலும் தலா ரூ.5,000 அளிப்பது என்று இன்று பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஊதிய உயர்வு அளிப்பது என்பது நமது நாட்டில் புதிது ஒன்றும் அல்ல, அது கிட்டத்தட்ட ஆண்டாண்டு நிகழ்வுதான். ஆனால் அப்படி ஊதிய உயர்வு அளிக்கப்படும்போதெல்லாம் அதற்கான அடிப்படை என்ன என்பதை அரசு தெரிவிக்கும். விலைவாசி ஏற்றத்தால் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பஞ்சப் படியை உயர்த்துவது, சில ஆண்டுகளில் சேர்ந்துள்ள பஞ்சப் படியை, விலைவாசி குறையாத காரணத்தினால் (என்றைக்கு இந்தியாவில் ஏறிய விலை குறைந்துள்ளது?), அதனை அடிப்படை ஊதியத்தில் சேர்த்துவிடுவது என்றும், 4வது ஊதிய ஆணையம், 5வது ஊதிய ஆணையம் என்று - ஊதியத்தை உயர்த்தி அதன் மூலம் அரசு ஊழியர்களின் வாக்குகளை தக்கவைத்துக் கொளவதற்கென்றே அமைக்கப்படும் ஆணையங்கள் அளித்த பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கப்படும். நமது நாட்டிற்காக கடுமையாக உழைத்திடும் அரசு ஊழியர்களும் அதனைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைவர்.

ஆனால், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான நியாயம் என்ன? நமது நாட்டின் பெரும்பான்மை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஊதியத்தை நம்பித்தான் வாழ்ந்து வருகிறார்களா? நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை அப்படி வாழ்ந்துவரும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20 அல்லது 30ஐத் தாண்டாது. ஒவ்வொரு உறுப்பினர்களும் தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், அவர்களுக்கு இந்த 16 ஆயிரம், 50 ஆயிரம் என்பெதல்லாம் ஒன்றுமில்லாத பணம் என்பது தெரியவரும்.

கோடிகள் கொடுத்து பெற்ற வெற்றியல்லவா?

எத்தனை கோடி செலவு செய்து வெற்றி பெற்று வந்துள்ளார்கள் இவர்கள்? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள், வாக்காளர்களை மகிழ்விக்க எத்தனை கோடிகளை அள்ளி வீசினார்கள் என்பது மக்களுக்கே (அவர்கள்தானே வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்கள்) தெரியுமே! ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் எவ்வளவு செலவு செய்தார், தோற்ற வேட்பாளர் எவ்வளவு செலவு செய்தார், நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் எவ்வளவு செலவு செய்தார், பெரம்பலூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆளும் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் வீட்டுக்கு வீடு எவ்வளவு அளித்தார், இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் தனது தொகுதியை மட்டுமே பார்த்துக் கொள்ளாமல், பக்கத்து தொகுதியையும் எவ்வாறு கண்டுகொண்டார்,

இன்றைக்கு மத்திய அரசில் அதிகாரமிக்கவராக இருந்து இந்த நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்துக் கொண்டிருப்பவர் எவ்வளவு செலவு செய்து குறைந்த வாக்குகளில் முதலில் தோற்று, பிறகு வெற்றி பெற்றார் என்பதெல்லாம் நாடறிந்த இரகசியம் ஆயிற்றே! வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூட ‘போதுமான அளவிற்கு’ செலவு செய்த காரணத்தினால்தான் வெற்றி பெற்றார்கள் என்றெல்லாம் பரவலாகப் பேசப்பட்டதே. கட்சி பலத்தையும், மக்கள் ஆதரவையும் மட்டுமே முழுமையாக நம்பி இந்த நாட்டில் எத்தனை வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள்? எனவே, ஏதோ எழுத்தர் பணி அரசு ஊழியர்கள் போல இவர்கள் ஊதிய உயர்வு கேட்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பியது நம்பமுடியாத வேடிக்கையாகவே இருந்தது.


வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்து வெற்றி பெற்று வந்தார்கள் என்பதல்ல, அவர்களுக்கு அளிக்கும் ஊதியம் நீண்டகாலமாக மாற்றியமைக்கப்படவில்லை (அதாவது உயர்த்தப்படவில்லை) என்று நியாயம் தேடலாம். ஆனால் இவர்கள் ஊதியம் மட்டுமா பெறுகிறார்கள்? நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் பெறும் மாத ஊதியம் மட்டுமின்றி, அவர்களுக்கு தங்கள் அலுவலகத்தை நடத்திக் கொள்ள படி, நாடாளுமன்ற நிகழ்வில் கலந்து கொள்ள டெல்லி வருவதற்கு அவருக்கும், அவருடைய உதவியாளருக்கும் (அல்லது மனைவியுடன்) இலவச விமான பயணம் (வருடத்திற்கு 40 விமான பயணங்கள் இலவசம்), தொகுதியில் சென்று ‘பணி’யாற்ற படி, ஒரு நாள் நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்றால் அதற்கு ரூ.1,000 படி (இப்போது ரூ.2,000 ஆக உயர்வு), டெல்லியில் தங்க மிக வசதியான தங்குமிட வசதி (இதற்காக அவர் கொடுக்கும் மாத வாடகை ரூ.2,000 மட்டுமே), தனது மனைவி அல்லது உறவினருடன் நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் முதல் வகுப்பு இரயில் பயணம் இலவசம், ஆண்டிற்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம், உள்ளூர் போக்குவரத்துப் படி (கி.மீ.க்கு ரூ.8.00), உணவு, 1,70,000 இலவச தொலைபேசி என்று அனைத்திற்கும் படி, படி என்று கை நிறைய படியாக பெற்றுக்கொள்கிறார்கள். இதற்கு மேலும் ரூ.16,000 போதவில்லை என்றால்... ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.வறுமைக் கோட்டிற்குக் கீழ் 37% இந்தியர்கள்இந்த நாட்டில் ரூ.16,000 ஒரு குடும்பம் பிழைப்பதற்குப் போதுமானதல்ல என்றல்லவா பொருள்? மொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்று அரசு அமைத்த டெண்டுல்கர் குழு கூறியுள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு ஒரு வேளை உணவிற்கு திண்டாடுபவர்கள்! ஆனால் அர்ஜுன் சென்குப்தா குழு 77 விழுக்காடு மக்கள் நாள் ஒன்றிற்கு ரூ.20க்கும் குறைவான வருவாய் கொண்டே உயிர் வாழ்கிறார்கள் என்கிறது. என்.சி. சக்சேனா குழு நமது நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள் என்கிறது. டெண்டுல்கர் குழு அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் அதனையே அடிப்படையாகக் கொள்வோம். மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமான மக்கள் நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட மக்கள் (வாக்காளர்கள்) நமது நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வருவாய் ஒரு நாளைக்கு ரூ.20க்கும் குறைவு! அதுவும் நிரந்தரமல்ல. அதனால்தானே தேசிய உணவிற்கு வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது? மழை, வெள்ளம் அனைத்தினாலும் பாதிப்பு. ஆனால் இவர்கள் (தவறாமல்) அளித்த வாக்குகளைப் பெற்றுத்தான் இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஏன்? தங்களின் வாழ் நிலையை வறுமையில் இருந்து தேற்றி, ஒரு கண்ணியமிக்க வாழ்வைப் பெறுவதற்காக. ஆனால், இவர்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தேடுத்தனுப்பிய அவர்களின் வாழ்வைப் பற்றிச் சிந்திக்காமல், தங்களின் வசதியை அரசு செலவில் பெருக்கிக்கொள்ளத்தான் இந்தப் பாடு படுகிறார்கள். மக்கள் வலி அறிந்தவர்கள்இதற்கு முன்னிருந்த நாடாளுமன்றவாதிகள் பலர் ஒருபோதும் தங்களுடைய ஊதியத்தை அதிகரித்துக் கொடு என்று கேட்டதில்லை. ஒரு நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் ரூ.350இல் இருந்து ரூ.400க்கு உயர்த்தப்பட்டபோது கேரளத்தைச் சேர்ந்த பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் ஏ.கே.கோபாலன், நமது நாடு உள்ள நிலையில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து அளிக்கப்படும் நமது ஊதியத்தை உயர்த்த கோரிக்கை விடுக்கக் கூடாது என்றார் என்கிறது நாடாளுமன்ற வரலாறு. அவர்களெ‌ல்லாம் அவ்வாறு கூறக் காரணம், அவர்க‌ள் மக்களின் வலியை அறிந்திருந்தார்கள், இப்போது உள்ளவர்களுக்கு அந்த வலியும் தெரிவதில்லை, அது குறித்தும் (சில உறுப்பினர்களைத் தவிர) எவரும் விவாதிப்பதுமில்லை. ஆண்டொன்றுக்கு ரூ.12 இலட்சத்திற்கு நிதி நிலை அறிக்கை போடும் ஒரு நாட்டின் அரசு, தனது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவதால் ஏற்படும் செலவினால் ஒன்றும் மூழ்கிவிடப் போவதில்லை. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் ஒரு பெரும் பிரிவினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாமல், ஊதிய உயர்வு கேட்பது நியாயமுமல்ல, ஜனநாயகமுமல்ல.
«




Sunday, August 22, 2010

அணு விபத்து இழப்பீடு சட்டம் பாது காப்பானதா ?

பயணங்கள் வேறு; பாதை ஒன்று
-க.ராஜ்குமார்

அமெரிக்க-இந்திய அணுசக்தி; ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவில் அணு உலைகள் அமைப்பதற்கு பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. அணு உலை களில் விபத்து அல்லது கசிவு ஏற்பட் டால் அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வழிவகை செய்யும் வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறி முகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள பல ஷரத்துக்கள் இந்திய நாட்டு மக்களின் நலனுக்கு எதிரானது என பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் அதை எதிர்த்தன. ஆனால் பாஜக தற் போது நடப்பு கூட்டத்தொடரில், 18-08-10 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா-2010-ஐ ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நிதியமைச் சருமான பிரணாப் முகர்ஜி, பாஜக தலை வர்களான எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவ ராஜ், அருண் ஜேட்லி ஆகியோரை சந் தித்து இந்த மசோதாவை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அறிமுக நிலையில் இந்த மசோதாவை எதிர்த்த பா.ஜ.க இப் போது தனது நிலையை மாற்றிக்கொண் டது. தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நான்கைந்து ஆலோசனைகளை காங்கி ரஸ் ஏற்றுக்கொண்டிருப்பதால் மசோதா விற்கு ஆதரவு தர முடிவு செய்திருப்பதாக அது அறிவித்துள்ளது. நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரிக்கவும், நஷ்ட ஈட்டு ஆணையருக்கு கூடுதல் அதிகாரங் களை தரவும் மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும் என காங்கிரஸூம் அறிவித்துள்ளது.

ஓரே குட்டையில்ஊறிய மட்டைகள்

இந்திய ஜனநாயகத்தில் பிரதான எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்று சேர்ந்து ஆதரித்து ஒரு மசோதாவை நிறைவேற்றுவது அரிதான நிகழ்வாக இருந்தாலும், இந்திய நாட்டின் இறை யாண்மைக்கு எதிராக அவை ஒன்றுபட்டி ருப்பது கவலைக்குரிய நடவடிக்கையா கும். வெளிநாட்டில் உள்ள இலட்சக் கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணத் தை கைப்பற்றுவதற்காகவோ அல்லது விலைவாசி உயர்விற்கு காரணமாக உள்ள பதுக்கல்காரர்களை பிடிப்பதற்கோ ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்தி ருக்க முடியும். ஆனால் இந்திய நாட்டு மக் களுக்கு துரோகம் செய்ய இவை இரண் டும் இன்று ஒன்று சேர்ந்துள்ளன. அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதாவை இவ் வளவு அவசரம் அவசரமாக நிறைவேற்று வதில் இவ்விரு கட்சிகளுக்கும் ஒரு நோக்கம் உண்டு. விரைவில் இந்தியா வர விருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வை திருப்திப் படுத்தத்தான் இவ்விரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்துள்ளன. தங்கள் எஜமான விசுவாசத்தை போட்டி போட் டுக்கொண்டு காட்டுவதற்கு தயாராகி விட்டன.

அவசரம் ஏன்?

அணு சக்தி துறையில் அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்க்க இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஸ் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள் ளார். ஆனால் அமெரிக்கா அணு உலை தொழில்நுட்ப மறுபயன்பாட்டிற்கு தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற அவசரம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்துள்ள அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதா இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளன. இந்த மசோதா இந்திய நாட்டு மக்களுக்கு பயன் படுவதை காட்டிலும் அந்நிய நாட்டு நிறுவ னங்களுக்கு பாது காப்பு அளிப்பதாகவே உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டி யுள்ளன.

மசோதாவில் உள்ள பாதகமான ஷரத்துக்கள்

மசோதாவில் அந்நிய நாட்டு நிறு வனங்கள் இந்திய நாட்டில் அணு மறு சுழற்சி ஆலைகளை அமைக்கும்போது, விபத்து நஷ்ட ஈட்டிற்காக முதலீடு செய்ய வேண்டிய பாதுகாப்பு தொகையாக 458 மில்லியன் டாலர் (2,087 கோடி) என குறிப் பிட்டுள்ளது. அணு உலைகளின் விபத் துக்களால் ஏற்படும் இழப்புகளை ஈடு கட்ட இது போதுமானதல்ல. இத்தகைய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள அணு விபத்து நஷ்ட ஈட்டுத் தொகையோ 10.5 பில்லியன் டாலர் ஆகும்.

நஷ்ட ஈட்டுத் தொகையை பெற விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களை நேரடியாக அணுக முடியாது. இந்த சட்டத்தின் பிரிவு 17-ன்படி இதற்கென மத்திய அரசு அமைக்கவுள்ள இந்திய அணுசக்தி கழ கத்தின் (சூஞஊஐடு) மூலமாகவே நிவாரணம் கேட்க முடியும். மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த கழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய் யவில்லை. முதலில், ரூ.500 கோடி என்று அறிவித்து, இப்போது ரூ.1500 கோடி என்று உயர்த்துவதாக மத்திய அரசு அறி வித்துள்ளது. இந்த தொகை போதுமான தல்ல என்பதே இடதுசாரிகளின் வாத மாகும்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலை உபகரணங் களுக்கு இந்த மசோதாவிலிருந்து விதிவி லக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தர மற்ற உபகரணங்கள் இறக்குமதி செய்யப் பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

போபாலில், விஷவாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக் கும் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர் சனை இந்திய நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தர முடி யாத இவர்களுக்கு, இத்தகைய சட்டங்கள் கொண்டுவருவதில் தயக்கம் ஏதும் இருக்காது என்பதில் வியப்பில்லை.

பாஜகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து ஒரு மசோதாவை, அதுவும் மக்கள் விரோத மசோதாவை நிறைவேற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பாஜக ஆட்சியின் போது கொண்டுவந்த மின்சார மசோதா வை (2001) இதே இருகட்சிகளும் சேர்ந்து ஆதரித்த நிகழ்வும் உண்டு. பாஜக அறிமு கப்படுத்திய புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கிட இன்றும் காங்கிரஸ் துடி யாய் துடித்துக்கொண்டிருப்பதும் நாட்டு மக்கள் அறிந்ததே!

இந்திய நாட்டு மக்களின் பாதுகாப் பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த சட்டத்தை நிறைவேற்றத்தான் இன்று காங்கிரஸூம் பாஜகவும் ஒன்று சேர்ந்துள் ளன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இவர்களின் பயணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பாதை ஒன்றுதான். அது ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான பாதை என்பதை நாட்டுமக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளனர்.

கனிம வளங்களை பாது காப்போம்

சுரங்கங்களை தேசியமயமாக்குக! நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்
புதுதில்லி, ஆக. 21-

நாட்டின் வளங்கள் கொள்ளை போவ தைத் தடுத்திட, சுரங்கங்கள் அனைத் தையும் தேசியமயமாக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறி னார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளியன்று நாட்டில் பெரிய அளவில் சட்டவிரோதமான முறையில் சுரங்கங்க ளிலிருந்து கனிம வளங்கள் கொள்ளை போவது தொடர்பாக குறுகிய கால விவா தம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:-

நாம் சுதந்திரக் குடியரசாக மாறி அறுபதாண்டுகளான பின்னர், இது போன்று நாட்டின் கனிம வளங்கள் கொள்ளை போவது குறித்த விவாதத்தில் கனத்த இதயத்தோடு பங்கேற்கிறேன்.

நாம் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குகையில் என்ன சொல்லியிருக்கிறோம். இந்திய மக்களா கிய நாம், நாட்டின் கண்ணியத்தை மட்டு மல்ல, ஒவ்வொரு குடிமகனின் கண்ணி யத்தையும் காப்போம் என்று நமக்கு நாமே உறுதி எடுத்துக் கொண்டிருக்கி றோம். ஆனால், நாட்டின் பல பகுதிக ளிலும் மிகப் பெரிய அளவில் நம் கனிம வளங்கள் சட்டவிரோதமானமுறையில் கொள்ளை போவதைப் பார்க்கிறோம். இது ஒரு குறிப்பிட்ட கனிம வளம் குறித்த சங்கதி மட்டுமல்ல. இரும்புத் தாது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டி ருக்கிறபோதிலும், நாட்டின் அனைத்து விதமான கனிம வளங்களும் இவ்வாறு கொள்ளைபோய்க்கொண்டுதான் இருக் கின்றன.

நம் அவையிலேயே ஒரு கேள்விக் குப் பதிலளிக்கையில் மத்திய அமைச்சர் ஹாண்டிக், கடந்த ஆண்டில் மட்டும் பதினோரு மாநிலங்களில் 42 ஆயிரம் வழக்குகள் சட்டவிரோத சுரங்கக் கொள்ளை தொடர்பாகப் பதிவு செய்யப் பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளைபோவது தொடர்பாக வழக் குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சட்டவிரோத நடவடிக்கைகள் என்பது அப்படி ஒன்றும் மிகச்சிறிய அளவில் நடைபெறவில்லை. நாட்டின் வளங்கள் அரக்கத்தனமான முறையில் கொள் ளையடிக் கப்பட்டுக்கொண்டிருக்கின் றன. நாடு குடியரசாகி அறுபதாண்டுகள் ஆகியபின்னரும் இத்தகைய கொள் ளையை நாம் அனுமதிக்கப் போகி றோமா? நாட்டின் கனிம வளங்களைப் பாதுகாத்திட, கொள்ளை போவதைத் தடுத்திட அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது தெளிவாக் கப்பட வேண்டும்.

இது தொடர்பாக வளர்ச்சியடைந்த நாடுகள் எப்படி எல்லாம் நடவடிக்கை கள் மேற்கொண்டிருக்கின்றன என்று நாம் ஆராய வேண்டும்.

அமெரிக்கா என்ன செய்கிறது? அது தன்னிடம் உள்ள எண்ணெய் இருப்பில் கை வைக்கவில்லை. அதனை எதிர் கால அவசரத் தேவைகளுக்காக, அப்ப டியே விட்டு வைத்திருக்கிறது. தற்போ தைய தேவைக்கு வெளிநாடுகளிலி ருந்து இறக்குமதி செய்து கொண்டி ருக்கிறது. நம் அண்டை நாடான சீனத் தைப் பாருங்கள். தனக்குத் தேவையான பல்வேறு கனிமங்களை அது உலகின் பல பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. தன்னிடம் உள்ள கனிம வளங்களை எதிர்காலத் தேவைக் காக பேணிப் பாதுகாத்து வருகிறது. ஆனால் நம் நாட்டின் நிலை என்ன?

நம் கனிம வளங்கள் அனைத்தும் எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி கொள் ளையடிக்கப்பட்டு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக விற்கப்பட்டுக் கொண் டிருக்கின்றன. இதுதான் பொருளாதார நூல்களில் ‘சட்டவிரோத முதலாளித் துவம்’ என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக நம் பிரதமர் என்ன கூறு கிறார்? நம் பிரதமர் ஒரு சமயம், `இந்தியா வில் சட்டவிரோத முதலாளித்துவம் அதிகரித்து விட்டது’ என்று கூறினார். பிரதமர், தான் கூறியதில் உறுதியாக நிற் கிறார் என்றால், இவ்வாறு கொள்ளை போவதற்கு எதிராக உறுதியான நடவடிக் கைகளை அரசு எடுத்திட வேண்டும். நாட்டின் அனைத்துக் கனிமவளங்க ளையும் தேசியமயமாக்கிட வேண்டும், அனைத்து கனிம வளங்களையும் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்திட தடை விதித்திட வேண்டும். எவரேனும் நம் கனிமவளங்களைப் பயன்படுத்திட விரும்பினால், அவர்கள் நம் நாட்டிற்கு வந்து தொழிற்சாலைகளை நிறுவட்டும். நம் மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை அளிக்கட்டும். நாட்டின் உற் பத்தி வளங்களையும் பெருக்கிக் காட்டட் டும். அதன் மூலம் நாம் ஆதாயம் அடைந் திட முடியும். இப்போதுள்ளது போல் நம் செலவில் அயல்நாட்டினர் தங்கள் உற் பத்திக் கொள்ளளவை அதிகரித்துக் கொள்ள முடியாது.

நாம் பிற நாடுகளிடமிருந்து இதில் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே, நாட்டின் அனைத்துக் கனிம வளங்க ளையும் தேசியமயமாக்கிட வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டது. நம் முடைய கனிம வளங்கள் எவ்விதத்தி லும் ஏற்றுமதி செய்ய தடை விதித்திட வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்ப தால் தான் இத்தகைய கொள்ளை நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்கிற முறையில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இவ்வாறு கனிமங்கள் கொள்ளை போவ தைத் தடுத்திட இயலாமல் பழியை மத் திய அரசு, மாநில அரசுகள் மீது போடு வது சரியல்ல. இதற்கு ஒரே வழி, நாட் டின் அனைத்துக் கனிம வளங்களையும் தேசியமயமாக்குவதுதான்.

பெல்லாரி கொள்ளை

பெல்லாரியில் நடந்த கொள்ளை விவரங்கள் என்ன? கர்நாடக முதல்வர் மாநில சட்டமன்றத்தில் பல்வேறு கேள் விகளுக்கு அளித்த பதில்களிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக 30 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அளவில் இரும்புத்தாது அங்கேயிருந்து வெளிநாடு களுக்குக் கொள்ளைபோயிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மாநி லத்திலிருந்து மட்டும் இந்த அளவுக்குக் கொள்ளை போயிருக்கிறது. சர்வதேச சந் தையில் ஒரு டன் இரும்புத்தாது குறைந்தபட்சம் 50 அமெரிக்க டாலர் என்று விலை வைத்தோமானாலும்கூட, இதுவரை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 7,500 கோடி ரூபாய் அளவிற்கு கர்நாடக மாநிலத்தில் ஒபுலா புரம் சுரங்கம் இருக்கும் இடத்திலிருந்து மட்டும் கொள்ளை போயிருக்கிறது.

இவ்வாறு கொள்ளைபோவதை அனு மதிப்பது என்பது, பாஜக ஆட்சியில் மட் டுமல்ல, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், குடியரசுத் தலைவர் ஆட்சி களின்போதும் நடைபெற்றிருக்கிறது.

மீண்டும் முதலமைச்சரின் அறிக் கைக்கு வருகிறேன். 2003-04ஆம் ஆண்டில் 20 லட்சத்து 49 ஆயிரத்து 961 டன்கள் இரும்புத் தாது சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. 2004-05இல் இது 52 லட்சத்து 39 ஆயிரத்து 528 டன்களாகவும், 2005-06ஆம் ஆண் டில் இது 21 லட்சத்து 71 ஆயிரத்து 492 டன்களாகவும், 2006-07இல் இது 47 லட்சத்து 44 ஆயிரத்து 645 டன்க ளாகவும், 2007-08இல் 57 லட்சத்து 61 ஆயிரத்து 048 டன்களாகவும், 2008-09 இல் 33 லட்சத்து 96 ஆயிரம் டன் களாகவும், 2009-10இல் 71 லட்சத்து 27 ஆயிரத்து 937 டன்களாகவும் இருந்தி ருக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் கொள்ளை போயிருக்கிறது. இன்றைய தினம் சர்வதேச சந்தையில் இரும்புத் தாது ஒரு டன் 150 அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி யாயின், சுமார் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளை போயிருக் கிறது.

இக்கொள்ளை சம்பவங்கள் தொடர் பாக தற்சமயம் பல்வேறு குழுக்கள் ஆய்வுகள் மேற்கொண்டிருக்கின்றன. நீதிமன்றமும் இதில் தலையிட்டிருக் கிறது. ஆந்திரம் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுரங்கங்கள் தொடர்பாக, குறிப்பாக ஆந்திராவில் உள்ள ஒபுலாபுரம் சுரங்கம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளித்திடுமாறு கூறி அதிகாரமளிக் கப்பட்ட மத்திய அமைச்சரவைக் குழு ஒன்றை நியமித்திருக்கிறது. ஆய்வு செய்த அக்குழு ஆந்திரப் பிரதேச தலை மைச் செயலருக்கு சுரங்கப் பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்று அறிவு றுத்தி இருக்கிறது. ஆனால் அரசுத் தரப்பில் எதுவும் நடக்கவில்லை. இவ் வாறு அக்குழு 2009 நவம்பரிலேயே அறி வுறுத்தியது. அதன்பின்னர் சுமார் 71 லட்சம் டன்கள் சட்டவிரோதமாக ஏற்று மதி செய்யப்பட்டிருக்கின்றன.

இதேபோன்று கர்நாடகா லோக் அயுக்தா அறிக்கையை பார்க்கும் போது அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியாக இருக் கிறது. லோக் அயுக்தா தலைவர் தன் அதிகாரிகள் மூலம் ரெய்டுகள் நடத்தி சட்டவிரோதமாக கனிம வளங்களைக் கொள்ளையடித்த 99 டிரக்குகளைக் கைப்பற்றியிருக்கின்றனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி 8.5 டன்கள் இரும்புத்தாது ஏற்கனவே 11 கம்பெனிகளால் ஏற்றுமதிக்காக வாங்கப் பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் பரி சீலனை செய்துகொண்டிருக்கக் கூடிய சமயத்திலேயே, ஆறு லட்சம் டன்கள் இரும்புத்தாது ஏற்றுமதிக்காக கப்பல் களில் ஏற்றப்பட்டுவிட்டன. உயர்நீதி மன்றம் ஏற்றுமதியை நிறுத்து என்று கட்டளையிடுகிறது. ஆயினும் சுமார் 6 லட்சம் டன் இரும்புத்தாது காணாமல் போய்விட்டது. அரசின் கண் முன்னா லேயே, உயர்நீதிமன்றத்தின் கண்முன் னாலேயே, அதிகாரிகளின் கண்முன் னாலேயே இவ்வாறு 6 லட்சம் டன்கள் இரும்புத் தாது காணாமல் போகிறது. இதன்பின் முதல்வர் இதனை நான் நம்ப முடியாது என்று அறிக்கை விடுகிறார். பின்னர் அவர் அவை அனைத்தும் மழை நீரில் கரைந்துவிட்டதாகக் கூறியிருக் கிறார். (குறுக்கீடு) நான் பத்திரிகைகளில் வந்ததைத்தான் சொல்கிறேன்.

இவ்வாறு நம் நாட்டின் வளங்கள் கொள்ளைபோய்க்கொண்டிருக்கின்றன. இதனை நாம் தொடர்ந்து அனுமதிக்கப் போகிறோமா? நாட்டின் கனிம வளங்கள் முதல்வர் கூறுவதுபோல் ‘‘மழைநீரில் அடித்துச் செல்லப்படுகிறது’’. இது நம் செல்வம். இதனை எப்படி ‘மழைநீரில் கரைய’ அனுமதிக்க முடியும்?ஏன் அவ்வாறு கரைகிறது? நாம் அனைவரும் இதனை ஆழமாகப் பரிசீலித்திட வேண்டும்.

இவ்வாறு கொள்ளை போவதற்கு யார் காரணம்? இதற்கு உடந்தையாயி ருப்பவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இந்த அவை என்ன பரிந்துரைக்கிறதோ அதனை நிறை வேற்ற அரசு முன்வர வேண்டும். மத்திய - மாநில அரசுகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்திடக் கூடாது, அனை வருக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு உண்டு.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். (ந.நி.)

Thursday, August 19, 2010

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து

அமெரிக்க வசதிக்கான (அணு விபத்து) இழப்பீடு சட்டம் அணு" href="http://search.webdunia.com/search.aspx?w=true&lid=TM&q=
புதன், 18 ஆகஸ்ட் 2010( 20:15 IST )
-->
அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்று நமது நாட்டில் அமைக்கப்படவுள்ள அணு மின் நிலையங்களில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்குவதை முறைபடுத்தும் அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்னும் சில நாட்களில் நிறைவேறிவிடும் என்று நிச்சயமாக நம்பலாம்.
PTIஏனென்றால், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜனதா கட்சியின் (நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள முக்கிய எதிர்க்கட்சி) தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை அழைத்துப் பேசியுள்ளார். அவர்களும் தங்கள் பங்கிற்கு ஒரு குறைந்தபட்ச யோசனையை கூறிவிட்டு, சட்ட வரைவை நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று காலைச் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில்தான், இந்த அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு (மசோதா) குறித்துஆராய்ந்தநாடாளுமன்ற நிலைக் குழு அளித்த அறிக்கை (Parliament standing committee) , இன்று காலை இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்ற நிலைக்குழு சில ஆலோசனைகளையும் தந்துள்ளது. அணு உலை விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலையை இயக்கும் நிர்வாக அமைப்பு ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றுள்ளதை, ரூ.1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பாரதிய ஜனதா தலைவர்கள், அணு உலை விபத்து இழப்பீடு சட்ட வரைவில், அணு உலைகளை விற்கும் அந்நிய நிறுவனங்களையும் பொறுப்பாக்க வேண்டும் என்று யோசனை கூறியதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் எந்த அளவிற்கு அவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்று பா... தலைவர்கள் கூறியுள்ளனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை. ஆக இந்த நாட்டின் ஆளும் கூட்டணியும் முக்கிய எதிர்க்கட்சியும் அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டன. நமது கேள்வியெல்லாம் (ஏற்கனவே இதே பகுதியில் எழுதிய கட்டுரையிலும் கேட்டுள்ளோம்) அணு உலை விபத்து ஏற்படும் நிலையில் ரூ.1,500 கோடி இழப்பீடு போதுமானதா? இதனை நிறைவேற்ற மன்மோகன் அரசு இத்தனை அவசரம் காட்டும் அவசியமென்ன? என்பதே.அமெரிக்காவின் இழப்பீடு சட்டம் - ஒரு ஒப்பீடுபோபால் விஷ வாயு விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட சட்டச் சிக்கல் குறித்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அரசு ஒரு அமைச்சரவைக் குழுவை நியமித்து ஆராய்ந்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 இலட்சம் இழப்பீடு அளிப்பது என்றும், பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு மறுவாழ்வு பெற உதவுவது என்றும் பரிந்துரை செய்துள்ளது. போபால் நகரத்தை நரகமாக்கிய யூனியன் கார்பைட் கம்பெனியில் இருந்து வெளியேறிய மிக் என்று அழைக்கப்படும் மீதைல் ஐசோசயனைட் வாயு ஒரு இரவில் 15,000 பேரைக் கொன்றது (மத்தியப் பிரதேச அரசுக் கணக்கு 3,787), பல பத்தாயிரக்கணக்கானவர்கள் பார்வையிழந்தனர்.
FILEஇப்படி ஒரு விஷ வாயு விபத்திற்கே நெருக்கமாக மக்கள் வாழும் நமது நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றால், அணு உலை விபத்து ஏற்பட்டால் எந்த அளவிற்கு உயிரிழப்பும், இதர பாதிப்புகளும் ஏற்படும் என்று இந்தச் சட்டத்தை நிறைவேற்றத் துடிப்பவர்கள் எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை (ஒருவேளை அணு விபத்து என்று நிகழ்ந்தால் அந்த இடத்தில் யார் மிஞ்சப்போகிறார்கள் இழப்பீடு வழங்குவதற்கு என்று யோசித்திருப்பார்களோ?). முதன் முதலில் அமெரிக்காவில் அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் நிறைவேற்றப்பட்டபோது கூட, 60 மில்லியன் டாலர்கள் தான் அணு சகதி மையத்தை இயக்கும் நிறுவனத்திற்கான இழப்பீடு பொறுப்பாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது (1957ஆம் நிறைவேற்றப்பட்ட பிரைஸ் - ஆண்டர்சன் சட்டம்). ஆனால் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த (இரஷ்யாவின்) செர்னோபில் அணு மின் உலை விபத்திற்குப் பிறகுதான், இழப்பீடு தொடர்பான தீவிர விவாதம் சர்வதேச அளவில் உருவாகி, அதன் அடிப்படையில் அணு விபத்து இழப்பீடு தொடர்பான இரண்டு சட்டங்களை பன்னாட்டு அணு சக்தி முகமை (IAEA) உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில்தான், அணு உலை விபத்து ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கஅணு விபத்து கூடுதல் இழப்பீடு உடன்படிக்கை’ (Convention on Supplementary Compensation for Nuclear Damage 1997) நடைமுறைக்கு வந்தது. இந்த உடன்படிக்கையே, அணு உலை விபத்து ஏற்பட்டால் அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம் அதிகபட்சமாக 465 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு அளித்தால் போதுமானது என்று வரையறை நிர்ணயித்தது. இதை அடிப்படையாகக் கொண்டுதான், மன்மோகன் சிங் அரசும், அணு உலையை இயக்கும் நிறுவனம் (இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய அணு சக்திக் கழகம் - NPCIL) ரூ.500 கோடி கொடுத்தால் போதுமானது என்றும், கூடுதல் இழப்பீட்டை அரசு அளிக்கும் என்றும் கூறி இந்த சட்ட வரைவைத் தயாரித்தது. இதன் மூலம் அணு உலையை விற்கும் நிறுவனங்கள் இழப்பீடு பொறுப்பில் இருந்து முழுமையாக தவிர்க்கப்பட்டன!
1
2»

Thursday, August 12, 2010

செப் வேலைநிறுத்தம்

செப். 7 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் 8 லட்சம் அரசு ஊழியர் பங்கேற்கிறார்கள் மதுரையில் இரா.சீனிவாசன் பேட்டி
மதுரை, ஆக. 8-விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். அனை வருக்கும் பொதுவினி யோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்க வேண் டும். காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி செப் டம்பர் 7 ந்தேதி நடை பெறக் கூடிய அகில இந்திய வேலைநிறுத்தப் போராட் டத்தில் தமிழகத்தில் 8 லட் சம் ஊழியர்கள் பங்கேற் கிறார்கள் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநி லப் பொதுச்செயலாளர் இரா.சீனிவாசன் கூறினார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற் குழுக் கூட்டம் மதுரையில் மாநிலத்தலைவர் ஆர். தமிழ்ச்செல்வி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட் டத்தையொட்டி நடை பெற்ற செய்தியாளர் சந்திப் பில் அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் இரா. சீனிவாசன் கூறியதாவது: விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் மட்டு மின்றி அரசு ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். வறுமைக் கோட்டை காரணம் காட் டாமல் அனைவருக்கும் பொதுவினியோகத் திட்டத் தின் கீழ் மத்திய அரசு பொருட் கள் வழங்க வேண்டும்.கடந்த 2001-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சுவாமி நாதன் குழு பரிந்துரையை இதுவரை அரசு வெளியிட வில்லை. ஆனால், அந்தக் குழுவின் பரிந்துரைப்படி 30 சதவீத பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற் போது சுமார் 9 லட்சம் ஊழியர்கள்தான் பணி புரிந்து வருகிறார்கள். 3 லட் சம் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. அந்த இடங்களில் தினக்கூலி., மதிப்பூதியம் என்ற பெயரில் நிரப்பப்படுகிறது. பல பணி கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதற்கு எதிராக அகில இந்திய அள வில் செப்டம்பர் 7 ந்தேதி நடை பெறும் வேலைநிறுத் தப் போராட்டத்தில் தமி ழகத்தில் 8 லட்சம் அரசு ஊழி யர்கள் பங்கேற்பார்கள்.தமிழ்நாட்டில் அமைய உள்ள மேலவையில் பட்ட தாரி மற்றும் ஆசிரியர் களுக்கு வழங்கப்படுவது போல் அரசு ஊழியர் களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.சத்துணவு, அங்கன் வாடி, மக்கள்நலப் பணியா ளர்களுக்கு வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு நியமித்த ஒரு நபர்குழு அறிக்கை சமர்ப்பித்து 4 மாதங்களாகியும் முடிவு அறிவிக்கப்படாமல் உள் ளது. அதனை உடனடியாக அறிவிக்க வேண்டும். அக் டோபர் மாதம் நெல்லை யில் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில பிர திநிதித்துவப் பேரவை நடை பெற உள்ளது.எட்டுமணி நேரவேலை, பணிப்பாதுகாப்பு உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் தனது முழு மையான ஆதரவைத் தெரி வித்துக் கொள்கிறது. டாஸ் மாக் ஊழியர்களிடம் 12 மணி நேரம் உழைப்பு சுரண் டப்படுகிறது. தமிழக அர சின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாயை ஈட் டித் தரும் அந்த ஊழி யர்களின் கோரிக்கைகளை அழைத்துப் பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களது போராட் டத்தை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மிரட் டுவது சரியான போக்கல்ல என அவர் கூறினார். இப் பேட்டியின் போது மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச் செல்வி, மாநிலச்செயலா ளர் ஆ.செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் மீது அடக்குமுறை - தினமணி

போராட்டமா; யாரங்கே?
-
தமிழகத்தில் இன்றைக்கு ஏறத்தாழ ரூ. 1லட்சம் கோடி புரளும் தொழிலாக- மாநிலத்தின் மொத்த வருவாயில் 25 சத வருவாயை- ரூ.13,500 கோடியை- அளிக்கும் தொழிலாக- ஏறத்தாழ 32 ஆயிரம் பேர் பணியாற்றும் ஒரு தொழிலாக மிகக் குறுகிய காலத்தில் மது விற்பனைத் தொழிலை ‘வளர்த்தெடுத்திருக்கிறது’ தமிழக அரசு.இந்நிலையில், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு ஒரு முதலாளியாக உரிய ஊதியத்தையும் அவர்களுக்குரிய பணி உரிமைகளையும் அரசு அளிக்க வேண்டியது தொழில் தர்மமாகும்.தமிழக அரசு தான் நடத்தும் மதுக்கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இப்போது ஊதியமாக- மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,000; விற்பனையாளர்களுக்கு ரூ.2,800; உதவியாளர்களுக்கு ரூ.2,100 வழங்குகிறது. இந்த ஊதியத்திற்கு 12 மணி நேரம் அவர்கள் பணியாற்ற வேண்டும்.நியாயமற்ற இந்த ஊதிய விகிதத்தையும் பணி நேரத்தையும் பணியாளர்கள் எதிர்க்கின்றனர். இந்தக் குறைவான ஊதியமும் உயர் அதிகாரிகளுக்கு ‘கப்பம் கட்டுதல்’ உள்ளிட்ட எழுதப்படாத நடைமுறைகளும் ஊழலுக்கு வழிவகுப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் தொழிலை முறைகேடாக நடத்தும் நிர்ப்பந்தத்தை அரசே மறைமுகமாக உருவாக்குவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அரசு இந்தப் போராட்டத்தை விரும்பாத பட்சத்தில் பணியாளர்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். பணி நிரந்தரம் போன்ற அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கமுடியாத பட்சத்தில், பணிப்பாதுகாப்பு அளிக்கக்கூடிய மாற்று ஏற்பாடுகளை முன்வைத்திருக்கலாம். இதுதான் அரச நீதிக்கு இலக்கணம்.இந்தப்போராட்ட அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களிலேயே, ‘மதுக்கடைப் பணியாளர்கள் பிரச்சனைக்கும் மதுவிலக்கு பிரச்சனைக்கும் விரைவில் தீர்வு காணப்படும்’ என்று பணியாளர்களுக்கு மறைமுக மிரட்டல் விடுத்தார்முதல்வர் கருணாநிதி. இதையடுத்து, பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மிரட்டப்பட்டனர். தொடர்ந்து “போராட்டத்தில் ஈடுபடுவோர் பணி நீக்கம் செய்யப்பட்டு, புதிதாக ஆளெடுக்கப்படுவர்” என்று ‘டாஸ்மாக்’ நிர்வாகம் மூலமாகவும் மாவட்ட நிர்வாகங்கள் மூலமாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. பிறகு, “போராட்ட நாளில் ஒவ்வொரு மதுக்கடையும் காவல்துறையால் முழுமையாகக் கண்காணிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இறுதியாக, “போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்’ என்று எழுதி வாங்கிக்கொண்டு, கடைச்சாவியையும் பணியாளர்களிட மிருந்து பறித்திருக்கிறது அரசு.அநீதியானது. அறம் சாராத ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பதாலேயே அறநெறிகளை புறக்கணித்துவிட்டு அரசு செயல்படலாமா என்கிற கேள்வி எழுகிறது.இந்தப் பிரச்சனையில் மட்டுமல்ல; எந்தப் பிரச்சனையை முன்னிறுத்திப் போராடுபவர்களையும் ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் எதிர்கொள்வதையே இந்த அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதுதான் அதைவிட உண்மை.நன்றி: தினமணி (11.8.2010)

Thursday, July 22, 2010

அகில இந்திய வேலை நிறுத்தம்

செப்.7 அகில இந்திய வேலைநிறுத்தம் மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய - மாநில அரசு ஊழியர் அமைப்புகள் பிரகடனம்

புதுதில்லி, ஜூலை 15-

மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், அனை வருக்குமான பொது விநியோக முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளையும் வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெறும் என , புதுதில்லியில் நடைபெற்ற தேசிய சிறப்பு மாநாடு பிரகடனம் செய்தது.

சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எல்பிஎப், ஏஐயுடியுசி, டியுசிசி, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய மத்தியத் தொழிற் சங்கங்களும் மத்திய - மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் ஆகிய வற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இரண்டாவது தேசிய சிறப்பு மாநாடு, வியாழன் அன்று புதுதில்லியில் மாவ்லங்கார் அரங் கில் நடைபெற்றது. சிஐடியு தலை வர் ஏ. கே. பத்மநாபன் உட்பட பல் வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமையேற்று மாநாட்டை வழி நடத்தினர். மாநாட்டில் சிஐடியு துணைத் தலைவர் டாக்டர் எம்.கே. பாந்தே, ஏஐடியுசி பொதுச் செய லாளர் குருதாஸ் தாஸ் குப்தா மற்றும் பல்வேறு மத்தியத் தொழிற் சங்கங் களின் தலைவர்கள் உரையாற் றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு:

அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் ஒரு நடவடிக்கையாக அனைவருக்கு மான பொது விநியோக முறை மூலம் அத்தியாவசியப் பொருள்களை மான்ய விலையில் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.

உலகப் பொருளதார நெருக்கடி யின் விளைவாக, தொழில் முனை வோருக்கு ஊக்க நிவாரணம் அளிப்பது போன்று, வேலையிழப் புக்கு ஆளாகியுள்ள தொழிலாளர் களைக் காப்பாற்றிட, உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எவ்வித விதிவிலக்குமின்றி தொழிலாளர் நலச் சட்டங்களைக் உறுதியாக அமல்படுத்த வேண் டும், அதனை மீறுவோர் மீது தண் டனை நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.

முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாக்கக்கூடிய விதத்தில் 2008 -முறைசாராத் தொழி லாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட் டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்,

லாபத்தை அள்ளித்தரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. மேற்கண்ட ஐந்து முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து மத்திய தொழிற்சங்கங் களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களும் இணைந்து கடந்த 2009 செப்டம்பர் 14 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண் டமான முதல் சிறப்பு மாநாடு நடை பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2009 அக்டோபர் 28 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம், 2009 டிசம்பர் 16 அன்று தர்ணா, 2010 மார்ச் 5 அன்று சிறைநிரப்பும் போராட்டம் என சக்தி மிக்க போராட்டங்கள் நடந்தன.

விலைவாசியைக் குறைக்கக் கோரி, குறிப்பாக உணவுப் பொருள் களின் விலைகளைக் குறைக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. ஆயினும் உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வந்துள்ளன. இது தொழிலாளர்க ளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

முதலாளிகளால் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவதற்கு எதிராக தொழிற் சங்கங்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தபோதிலும், அதைப்பற்றி அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. தொழிலாளர் களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது, வேலைகளை வெளியே கொடுத்து (அவுட்சோர்சிங் முறையில்) வாங் கிக் கொள்வது அதிகரித்து வரு கிறது.

லாபமீட்டும் பொதுத்துறை நிறுவ னங்களைத் தாரை வார்க்கும் முயற் சிகளும் தொடர்கின்றன. உதா ரணமாக அரசு, இந்திய நிலக்கரி கழகம், பிஎஸ்என்எல், செயில், என் எல்சி, இந்துஸ்தான் காப்பர், என் எம்டிசி முதலானவற்றைக் குறிப் பிடலாம்.

தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வந்தபோதி லும், அரசு, பெட்ரோலியப் பொருட் களின் விலையை உயர்த்தியிருப் பதுடன் அதன் மீதிருந்த கட்டுப் பாட்டையும் நீக்கிவிட்டது.

எனவே, அனைத்துத் தொழிற் சங்கங்களின் 2வது தேசிய மாநாடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் வரும் 2010 செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக் கிறது.

நாட்டில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும், மத்திய - மாநில அரசு ஊழியர்களும் இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தை மாபெ ரும் வெற்றியாக்கிட வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கி றது. அரசு அதன்பின்னும் கோரிக் கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் நோக்கி சக்திமிக்க பேரணி நடத்திடுவது என்றும் மாநாடு தீர்மானிக்கிறது.

இவ்வாறு மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் ஆர்.முத்துசுந்தரம், (பொதுச் செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்), சுகுமால் சென் (முன்னாள் பொதுச் செயலாளர், அ.இ.மா.அ.ஊ.சம்மே ளனம்) மற்றும் ஆர்.சிங்காரவேலு. பி.எம்.குமார் உள்ளிட்ட சிஐடியு-வின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப் பினர்களும் கலந்து கொண்டனர்.