பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெரிப்பதா?
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 18-6-10
மத்தியஅமைச்சரவை கூடி இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் ‘ ஹிந்துஸ் காப்பர் நிறுவனங்களின் பங்குகளில் 10விழுக்காட்டை விற்பனை செய்துவிட முடிவு எடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அமைச்சரவை எடுத்த முடி வின் மூலம் மத்திய அரசிற்கு ரூ.௧௬ ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் இந்த நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி நிதியினை பொதுத்துறைகளின் பங்கினை விற்பனை செய்வதின் மூலம் திரட்ட எடுத்த முடிவினடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தன் வசம் உள்ள இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளில் 10 விழுக்காட்டினை விற்பனை செய்யவும், ‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனத்தின் 10 விழுக்காட்டு பங்குடன் மேலும் அந்த நிறுவனம் புதிதாக 10 விழுக்காட்டு பங் கினை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யும்போது பொதுத்துறை நிறு வனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் எனவும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் விற்பனை பங்குகளில் 18 விழுக்காடு அந் நிறுவனத்திலும் அதன் எட்டு துணை நிறு வனத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக் கும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய அரசிற்கு நிலக்கரி நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்கு உள் ளது. அதன் மதிப்பு ரூ.6316.36 கோடி யாகும். அதில் 10 விழுக்காடு 63.16 கோடி ரூபாய் தற்போது விற்கப்படுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு இந்த பங்குகளின் சில்லறை விற்பனையில் 5 சதம் சலுகை தரவும் முடிவு செய்துள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் (ஐசிஎல்) உலகத்திலேயே பெரிய நிலக்கரி நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டில் 431.5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் உற்பத்தி ஆகும்; நிலக்கரி மொத்த உற்பத்தி 531.5 மில்லியன் டன், இது ௮௫ விழுக்காடு ஆகும்.‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனமும் ஒரு வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். இது தனது உற்பத்தியை ஆண்டிற்கு 3.15 மில்லியன் டன்னிலிருந்து 12 மில்லியன் டன்னாக உயர்த்திட திட்டமிட்டுள்து. இத்தகைய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ. 4 ஆயிரம் கோடி திரட்டிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரிசாவில் உள்ள நால்கோ அலுமினிய உற்பத்தி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திட, கடந்த மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன.
பொன் முட்டையிடும் வாத்துகளின் கழுத்தை நெரித்திடும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தினை நடத்திட மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
No comments:
Post a Comment