குற்றத்துக்குரிய தண்டனையில்லை
-வி.ஆர்.கிருஷ்ணய்யர்
போபால் விஷவாயு வழக்கு முடிந்து, எட்டு அதிகாரிகளுக்கு மட்டும் தலா இரண்டு வருடங் கள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.26 வருடங்களுக்கு முன் நடந்த போபால் விஷவாயுக் கசிவு கோரவிபத்தில் 25 ஆயி ரம் பேர் பலியாயினர். இன்றும் கூட, அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு நோய் களுக்கு இரையாகி வருகின் றனர். மேலும் அங்கே 350 டன் எடையுள்ள ரசாயனக் கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு விட்டது. குற்றத்தின் பரிமாணம் மிகமிகப் பயங்கரமானது ஆகும். ஆனால் தண்டனையோ மிக மிக லேசானதாகிப் போயிற்று. இன்றும் மேற்படி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மேலா ளரான வாரன் ஆண்டர்சன் தனது தாய்நாடான அமெரிக்கா வில் சர்வ சுதந்திரத்துடன் உலவி வருகிறார். அவர் போபால் சம்பவம் நடந்த ஒருசில மணித் துளிகளிலேயே இந்திய நாட் டைவிட்டு வெளியேறிவிட்டார். அவரை அவ்வாறு தப்பிச்செல்ல விட்டவர்கள் யார்? மாநில நிர் வாகிகளா, மத்திய அமைச்சர் களா என்றெல்லாம் தற்போது பட்டிமன்றம் நடந்து வருகிறது. நீதிமன்ற வளாகத்தில் எவருமே வாரன் ஆண்டர்சன் பற்றிப் பேசவேயில்லை. சர்வதேச சட்டங்களை மதிக்காத அமெரிக்கா அமெரிக்க அரசைப் பொறுத்தமட்டில் அது எந்த ஒரு சர்வதேச சட்டத்தையும் மதிப் பதே கிடையாது. அதேபோன்று உலக அரங்கில் பகாசுர பன் னாட்டு நிறுவனங்கள் புரிகின்ற குற்றச்செயல்கள் யாவும் மிக மிக அலட்சியப்படுத்தப்படுகின்றன.இந்திய மக்களைப் பொறுத்த வரை நம் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கு உரிமை உள்ளது. போபாலில் நடந்தது மிகப்பெரிய தோர் வரலாற்றுக் கொடுமை யாகும். அந்தச் சம்பவத்தைப் பற்றி அமெரிக்கர்கள் மிகவும் துச்சமாகக் கருதுகிறார்கள். அவர்கள் இந்தியாவைத் தங் களுடைய காலனி நாடாகக் கருதி இறுமாப்புடன் நடந்து வருகிறார்கள். நீண்ட நெடிய தாமதம்போபால் சம்பவமானது 1984ம் வருடம் நடைபெற்றது. இந்திய நீதித்துறையானது அது பற்றி விசாரித்துத் தீர்ப்பளிப்ப தற்கு 26 வருடங்கள் தேவைப் பட்டன. இது வெட்கப்படவேண் டியதோர் சங்கதியாகும். விஷவாயுக் கசிவினால் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மேற்படி தொழிற்சாலை அதி காரிகள் எட்டுப்பேர்களுக்கு வெறும் 2 வருடத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தொழிற் சாலையின் பிரதம நிர்வாகியைத் தப்பவிட்டுவிட்டார்களே! மேற்படி நிர்வாகிக்குத் தெரியா மல் அத்தகைய விபத்து ஏற்பட் டிருக்கவே முடியாது. தலைமை நிர்வாகி என்ற வகையில் அவர் தான் நடந்த வெங்கொடுமைக் குப் பொறுப்பேற்றிட வேண்டும்.நிர்வாகமே பொறுப்புகார்பைடு தொழிற்சாலை நிர்வாகமும், அதனுடைய தலை வராயிருந்த வாரன் ஆண்டர் சனும் நடந்தவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் அவரை எந்த ஒரு நீதிமன்றமும், விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இந்திய அரசாங்கமானது ஆண்டர் சனை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரு வதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மேற்படி பிரச் சனையில் இந்தியப் பிரஜைகளு டைய உயிர்கள் அவ்வளவு மலி வானவையாகக் கருதப்படுவது ஏன்? ஆண்டர்சன் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 304வது பிரிவின்படி தண்டிக்கப்பட வேண்டியதோர் குற்றவாளியா வார். ஆனால் அவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுநாள் வரை பதிவு செய்யப்படவில் லை. ஆண்டர்சனைப் போன்ற பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய குற்றங்களுக்கு தண் டனை கிடையாதா? அப்படியா னால் நம்முடைய குற்றவியல் சட்டங்கள் யாவும் வெறும் கேலிப்பொருட்கள்தானா? விபத்துகள் பற்றிகதிர்வீச்சுகள், எரிவாயுக் குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றால் பல் வேறு விதிமுறைகள் மீறப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக எண்ணிலடங்கா மனித உயிர் கள் பலியாகின்றன. அதைத் தடுத்திடுவதற்கு எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை! இது மிகவும் பரிதாபத்துக்குரியதோர் அம்சமாகும்.1984ம் வருடம் போபாலில் அத்தகையதோர் பேரழிவுதான் நடந்தேறியது. விஷவாயுக் கசிவி னால் 25 ஆயிரம் பேர் கொல்லப் பட்டனர். யூனியன் கார்பைடு நிர் வாகத்தையும், ஆண்டர்சனை யும் கூண்டிலேற்றியே தீரவேண் டும் என்று சகல இடதுசாரி களும் பொதுமக்களும் திரண் டெழுந்து மத்திய அரசை நிர்ப் பந்தித்திட வேண்டும். சட்டத் திற்கும், நீதித்துறைக்கும் மன சாட்சி இருந்தாக வேண்டும்.
நன்றி: இந்து - தமிழில்: கே.அறம்
இந்தப் பிரச்சனை பற்றி அன்றைக்கே பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-‘இனி வருங்காலத்தில் மனித சமூகமானது இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்லப்படும். மனித சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளைத் தந்து கொண்டுள்ள அறிவியல் சாதனங்களால் சிலசில சந்தர்ப்பங்களில் பேரழிவுகளும் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. எச்சரிக்கை’
Tuesday, June 29, 2010
Friday, June 18, 2010
Public Sector Shares for Sales
பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெரிப்பதா?
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 18-6-10
மத்தியஅமைச்சரவை கூடி இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் ‘ ஹிந்துஸ் காப்பர் நிறுவனங்களின் பங்குகளில் 10விழுக்காட்டை விற்பனை செய்துவிட முடிவு எடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அமைச்சரவை எடுத்த முடி வின் மூலம் மத்திய அரசிற்கு ரூ.௧௬ ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் இந்த நிதி ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி நிதியினை பொதுத்துறைகளின் பங்கினை விற்பனை செய்வதின் மூலம் திரட்ட எடுத்த முடிவினடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தன் வசம் உள்ள இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளில் 10 விழுக்காட்டினை விற்பனை செய்யவும், ‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனத்தின் 10 விழுக்காட்டு பங்குடன் மேலும் அந்த நிறுவனம் புதிதாக 10 விழுக்காட்டு பங் கினை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யும்போது பொதுத்துறை நிறு வனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் எனவும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் விற்பனை பங்குகளில் 18 விழுக்காடு அந் நிறுவனத்திலும் அதன் எட்டு துணை நிறு வனத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக் கும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய அரசிற்கு நிலக்கரி நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்கு உள் ளது. அதன் மதிப்பு ரூ.6316.36 கோடி யாகும். அதில் 10 விழுக்காடு 63.16 கோடி ரூபாய் தற்போது விற்கப்படுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு இந்த பங்குகளின் சில்லறை விற்பனையில் 5 சதம் சலுகை தரவும் முடிவு செய்துள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் (ஐசிஎல்) உலகத்திலேயே பெரிய நிலக்கரி நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டில் 431.5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் உற்பத்தி ஆகும்; நிலக்கரி மொத்த உற்பத்தி 531.5 மில்லியன் டன், இது ௮௫ விழுக்காடு ஆகும்.‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனமும் ஒரு வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். இது தனது உற்பத்தியை ஆண்டிற்கு 3.15 மில்லியன் டன்னிலிருந்து 12 மில்லியன் டன்னாக உயர்த்திட திட்டமிட்டுள்து. இத்தகைய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ. 4 ஆயிரம் கோடி திரட்டிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரிசாவில் உள்ள நால்கோ அலுமினிய உற்பத்தி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திட, கடந்த மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன.
பொன் முட்டையிடும் வாத்துகளின் கழுத்தை நெரித்திடும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தினை நடத்திட மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

Monday, June 14, 2010
ஜூலை - 15 உண்ணாவிரதப் போராட்டம்
ஜூலை 15 அன்று மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள்
மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்
- வரலாறு காணாத விலை வாசி உயர்வால் ஏழை மறறும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் போராட்டங்கள் மூலம் உழைக்கும் மக்கள் பெற்றுள்ள சிறு சிறு ஊதிய உயர்வுகள் கூட இதனால் பயனற்று போய்விட்டன. எனவே மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்
- வேலை நிறுத்த உரிமையை சட்டபூர்வமான உரிமையாக அறிவித்திட வேண்டும்
- அரசுஊழியர்களின் ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகளை முடக்குவதற்கு பயன்படுத்தப்படும் நடத்தை விதிகளை ரத்து செய்ய வேண்டும்
-வைப்பு நிதி வட்டி விகிதத்தை 12 விழுக்காடாக அறிவிக்க வேண்டும்
- ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகள் குறித்தும் முரண்பாடுகள் குறித்தும் அரசுஊழியர் சங்கம் மாறும் துறைவாரி சங்கங்களின் தலைவர்களை அழைத்துப்பேசி ஒருநபர் குழு அறிக்கையை விரைவாக அமல்படுத்திட வேண்டும்.
-அவுட் சோர்சிங் ஒப்பந்த நியமனங்களை கைவிட்டு காலி பணியிடங்களை நிரப்பிட அரசு விதித்துள்ள நிபந்தனைகளை இரத்து செய்து வேலைவாய்ப்பகம் மற்றும் தேர்வாணையம் மூலம் முறையான நியமன நடைமுறைகளை மேற்கொண்டு விரைந்து நிரப்பிட வேண்டும்.
-ஓய்வு பெற்ற அரசுஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்திட வழிவகுக்கும் அரசு ஆணை 170-ஐ இரத்து செய்திட வேண்டும்
-புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஊழியர்களின் பொது நல நிதியாக மாற்றி உரிய வட்டி வழங்கப்பட வேண்டும்
-மத்திய அரசு போனஸ் சட்டத்தை திருத்தி போனசாக ரூ 3500 - 2006,2007,2008ஆண்டுகளுக்கு நிலுவையுடன் வழங்கி இருப்பது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
-சத்துணவு ஊழியர்கள் , அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஊதியக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பிட்டு திட்டத்தை தனியார் நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் மூலமாக நடத்துவதை அரசே ஏற்று வேண்டும் வேண்டும் அல்லது இந்திய பொது துறை காப்பிட்டு நிறுவனங்கள் மூலமாக நடத்திட வேண்டும்
- தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் தொழில் நுட்ப்ப ஊழியர்களுக்கு மத்திய அரசிற்கினையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்
- சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்காலமாக கருதி வரன்முறை செய்திட வேண்டும்
- காதர் வாரியத்தில் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு பட்டியல்கள் வெளியிட்ட வேண்டும் பொது நல நிதியில் இருந்து முன் பணம் பெற அனுமதிக்க வேண்டும்
- நகராட்சி ஊழியர்கள் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் ஊழியர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்பட்டு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்
-பல்வேறு துறைகளில் பல்லாண்டுகாலமாக பணிவரன்முறை செய்யப்படாமல் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் பணியினை ஒரு பொதுவான விதி தளர்வின் கீழ் விரைந்து வரன்முறை செய்யப்படவேண்டும் . தொகுப்பூதியத்தில் இருந்து முறையான ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படும் ஊழியர்களின் கடந்தகால பணி காலம் முழுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பணப்பயன் பணிப்பயன் வழங்க வேண்டும்
-பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக முடிவிற்கு கொண்டுவரப்படாமல் உள்ள ஒழுங்கு நடவடிக்கை இனங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
-ஊழியர்களின் நலன் பாதிக்கப்படாமல் மாறுதல்கள் மேற்கொள்ள பொதுவான மாறுதலுக்கு உள்ள தடைக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும்.
-அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்த்திட உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் குழுக்கள் அமைத்திட வேண்டும்
-அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்தப்படி அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் உடனடியாக வழங்கவேண்டும்.
- காலம் சென்ற அரசு ஊழியர்களின் வாரிசுகள் அனைவருக்கும் காலி பணியிடங்களில் பணி நியமனம் உடனடியாக வழங்க வேண்டும் பல்வேறு துறைகளில் ஏற்கெனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு பணி வரன் முறை செய்யப்படாமல் உள்ளவர்களுக்கு உடன் பணி வரன் முறை செய்யப்படவேண்டும் .
-அரசியல்வாதிகளாலும் சமூக விரோதிகளாலும் அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன அதனை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் கணணி இயக்குனர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் பணி வரன் முறை செய்ய வேண்டும் அவர்களுக்கு பணிவிதிகள் ஏற்படுத்தி முது நிலை அடிப்படையில் உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெரும் சூலை 15 உண்ணாவிரதப் போராட்டத்தை
திட்டமிடுவீர்! வெற்றிபெறச் செய்வீர் !
இரா தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்
Friday, June 11, 2010
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகுமா ?
தடைகளும் விடைகளும்
-க.ராஜ்குமார் -
நன்றி - தீக்கதிர்-11-06-2010
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட முடியவில்லை. இருமுறை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத் தியும் ஒருமித்தக் கருத்தினை எட்ட முடியவில்லை. காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்குள்ளேயே இம்மசோதாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தாமதம் ஏன்?
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் சென்ற ஆண்டு பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மத்திய அரசுத் துறைகளில் பெண்களின் பங்கு வெறும் 7.5 சதவீதம் மட்டும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆட்சிப்பணிகளில் 24 சதவீதம், காவல் பணிகளில் 18 சத வீதம், அயல்நாட்டுப் பணிகளில் 18 சதவீ தம் எனவும் தெரிவித்துள்ளார். நாடு விடு தலை அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் பெண்களுக்கு வேலைவாய்ப் புகளில் சமத்துவம் என்பது இல்லை என்பதே அவர் அளித்துள்ள புள்ளி விபரங் கள் மூலம் அறிய முடிகிறது. இதில் வேடிக் கை என்னவென்றால் ஒரு நிலையான ஜனநாயக ஆட்சி தொடர்ச்சியாக இல் லாமல் உள்ள பாகிஸ்தானில் கூட, அரசு வேலைகளில் பெண்கள் 21 சதவீதம் என்பதும், நமது அண்டை நாடுகளான நேபாளத்தில் 30 சதவீதம், பங்களா தேஷில் 10 சதவீதம் என்பதும் நமக்கு கிடைத்திருக்கும் செய்திகளாகும். இந்தப் பின்னணியில்தான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக குரல் எழுப்பப்படுவதின் காரணத்தை புரிந்து கொள்ள முடியும்.
இந்திய நாட்டில் வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையானது, பதிவுகளின்படி 10 கோடிக்கும் மேல். இதில் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. இந்திய நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனையாக மாறியுள்ளது வேலை யின்மை. இதற்குக் காரணம், இன்றைய ஆட்சியாளர்களின் தாராளமயக் கொள்கைகள்தான். இந்த முதலாளித்துவ சுரண்டல் அமைப்பில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சமதர்ம சமுதாயத் தை உருவாக்கிட போராடினால்தான் பெண்களுக்கான சமத்துவத்திற்கு வழி பிறக்கும். சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையுடன் இணைந்ததே பெண் களுக்கான விடுதலையாகும்.
இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
கடந்த 14 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா 9.03.10 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இது ஒரு குறிப் பிடத்தக்க நிகழ்வாகும். பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களி லும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவ தற்கு வழிவகுக்கும் இந்த மசோதாவை மத்திய அரசு, மகளிர் தினமான 8.03.10 அன்று மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது, வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. சமாஜ்வாடி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் வன் முறையில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறினாலும், மக்களவையும், மொத்தம் உள்ள 28 சட்டமன்றங்களில், 15 சட்டமன்றங்கள் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால்தான் இது சட்டமாகும். காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் முணு முணுப்புகள் எழுந்துள்ளன. இத்தகைய எதிர்ப்பிற்கு என்ன காரணம்? அவர்களின் கோரிக்கைதான் என்ன?
ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு
பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் வழங்கப்படவுள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டிற்குள் இதர பிற் படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்க ளுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இவர்கள் கோருகின்றனர். முதலில் 33 சதவீதம் மகளிருக்கான மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால் உள் ஒதுக் கீடு போன்ற இதர விஷயங்களை சட்ட மாக்கப்படும் போது விவாதிக்கலாம் என் பதே பிறரின் நிலைபாடு. கடந்த 14 ஆண் டுகாலமாக பெண்களுக்கான இடஒதுக் கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருபவர்களுக்கு ஒரு பொதுவான நோக்கம் உள்ளது. பெண்களுக்கு அரசி யல் அதிகாரம் வழங்க அவர்கள் தயாராக இல்லை. பெண்களுக்கு 33 சதவீதம் தரு வதற்கு தயாராக இல்லாமல் இழுத்த டித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதக மாகவே உள் ஒதுக்கீடு கேட்பவர்களின் போராட்டங்கள் உள்ளன. இந்த இடஒதுக் கீட்டிற்குள் மத ஒதுக்கீட்டை கேட்பவர்க ளுக்கு ஒரு உள்நோக்கம் இல்லாமல் இல்லை. ஓட்டுச்சீட்டு அரசியலில் ஒரு பிரச்சனையை அணுகினால் தீர்வு காண முடியாது என்பதை பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையின் மூலம் அறியலாம். சட்டம் கொண்டு வந்த பிறகு உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என் பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்கீட்டிற்கு எதி ராக உள்ளது ஏன் என்பதை அவர்கள் விளக்கியே ஆக வேண்டும்.
உள் ஒதுக்கீடு தேவையற்றது என்று யாரும் சொல்லவில்லை. பசியுடன் காத் திருக்கும் ஒரு வீட்டில் சமையல் செய்ய முனையும்போது எந்த குழந்தைக்கு எவ்வளவு என்பதை முடிவு செய்து விட்டு சமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது போல் இன்று ஒட்டுமொத்த மாக இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல் படுபவர்களின் செயல்பாடுகள் அமைந் துள்ளன. பெண்கள் இன்று சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த இட ஒதுக்கீடு மட்டும் அமையாது என்பதும், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை படைப்பதின் மூலமே விடுதலை காணமுடியும் என்பதால்தான் இடதுசாரி கள் இன்று இடஒதுக்கீட்டில் முதலில் 33 சதவீதம், பின்னர் உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என்று சொல்லி வருகின்றனர்.
சொத்தை வாதங்கள்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எந்த ஒரு பிரச்சனையும் இந்த அளவிற்கு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சில முதலாளித்துவ செய்தித்தாள்கள் எதிராக எழுதி வருகின் றன. பெண்களுக்கு வழங்கப்படும் அதி காரம் ஆண்களிடம் பினாமியாக சென்று சேர்ந்துவிடும் என அவை வாதாடுகின் றன. தற்போது உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக் கீடு பயனளிக்கவில்லை என்பது அவை களின் கருத்து ஆகும். பெண் பிரதிநிதிக ளின் கணவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர் என்பது அவர்களின் வாதம். எந்த ஒரு நடைமுறையும் ஆரம்ப காலத்தில் இத்தகைய விமர்சனத் தை எதிர்கொள்வது வழக்கம். நாளடைவில் பெண்கள் இத்தகைய அமைப்பில் செயல்பட்டு வெற்றி பெறும்போது இத்த கைய வாதங்கள் காணாமல் போய்விடும். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படாமல், படிப்பதற்கு கூட உரிமை இல்லாதவளாக பெண் இருந்தாள். தேர்தல்களில் வாக்களிக்க உரிமை யில்லாதவளாகவும் அவள் இருந்தாள். இன்று இத்தகைய உரிமைகளை போராடி பெற்று அவள் தவிர்க்க முடியாத தீர்மான கரமான சக்தியாக முன்னேறி வருகின்றாள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவளது வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க் கை நடைமுறை அனுபவங்கள் படிப்பறிவு இல்லாமல் கூட சிறந்த நிர்வாகி யாக இல்லறத்தில் செயல்பட வைத்துள் ளது. இன்று அவள் பல பரிமாணங்களில் அறிவுத்திறன் பெற்றுள்ளாள். அப்படிப் பட்ட அடிப்படை குணாம்சத்தோடு அவள் அரசியல் அதிகாரத்திற்கு 33 சத வீத இடஒதுக்கீட்டு அடிப்படையில் தீர் மானகரமான சக்தியாக இடம்பெற்றால், இந்திய நாட்டின் சமூக, பொருளாதார, அர சியல் மற்றும் கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் மிகச்சிறந்த வரவேற்கத்தக்க இரசாயன மாற்றம் ஏற்படும். இது இன் றுள்ள புரையோடிப் போன சூழலில் சுக வாசியாக உள்ளவர்களுக்கு சம்மட்டி அடியாக அமையும். எனவேதான் சகல வசதிகள் ஆடம்பரத்தை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரக்கூடிய ஒரு பகுதியும் பெண்களுக்கும் குழந்தைக ளுக்கும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்திற் கும் எதிரான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதிகாரபலம், ஆள்பலம், பண பலத்தினால் தண்டனைகளிலிருந்து தப்பியும் பெரிய மனிதர்கள் என்ற போர் வையில் வாழும் சில மனிதர்கள், பெண் களுக்கான, அல்ல அல்ல, சமூக முன்னேற்றத்திற்கான இம்மசோதாவை எதிர்க்கின்றனர். மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவேண் டுமென்றால் நாடு முழுவதும் அதற்கு ஆதர வான குரல்கள் உரத்து ஒலிக்க வேண்டும்.

Monday, June 7, 2010
நீதியின் உறக்கம்
போபால் விஷ வாயு கசிவு: குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு மட்டுமே சிறை
போபால் , திங்கள், 7 ஜூன் 2010( 16:52 IST )
போபால் விஷ வாயு கசிவு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவித்த 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தில் இருந்து 1984 டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் விஷ வாயு கசிந்தது.இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் மீது குற்றம்சாற்றப்பட்டது. இவர்களில் யூனியன் கார்பைடு நிறுவன துணை மேலாளர் ராய் செளத்ரி என்பவர் இறந்து விட்டார்.அரசு சாட்சிகள் 178 பேரிடமும், எதிர்த்தரப்பு சாட்சிகள் 8 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 3008 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.இந்நிலையில், 26 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில், 8 பேரையும் குற்றவாளிகள் என போபால் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மோகன் பி. திவாரி இன்று தீர்ப்பளித்தார்.அதே சமயம் தண்டனை தீர்ப்பை பின்னர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நீதிபதி தனது முடிவை மாற்றிக்கொண்டு இன்றே தண்டனை தீர்ப்பையும் அளித்தார். அதன்படி குற்றவாளிகள் 8 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், தலா 1 லட்சம் அபராதம் விதிப்பதாக அறிவித்தார் நீதிபதி.விபத்துக்கு காரணமான கார்பைடு நிறுவனத்துக்கு 5 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே தண்டனை விதிக்கப்பட்ட 8 பேருமே தலா ரூ.25 ஆயிரம் ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.ஏற்கனவை குறைந்த அளவு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கத்துடன் கூறிக்கொண்டிருக்கும்போதே, தண்டனை பெற்றவர்கள் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டது அவர்களை மேலும் அதிர்ச்சிக்கும், ஆவேசத்திற்கும் உள்ளாக்கியது. இந்த தீர்ப்புக்காகவா இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம் என்று வேதனை தெரிவித்த அவர்கள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்குமாறு முழக்கமிட்டனர். மேலும் நீதிமன்றத்திற்குள் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்

Sunday, June 6, 2010
உயிரை கொள்ளும் குளிர்பானம் - திடுக்கிடும் தகவல்
குரோமியம் என்ற நச்சை உற்பத்தி செய்யும் குளிர்பான தயாரிப்புத் தொழிற்சாலைகள்
சனி, 5 ஜூன் 2010( 14:57 IST )
நாம் தினமும் கோலா, அல்லது பெப்ஸி வகை பானங்களை அருந்தலாம், ஆனால் அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் நீரிலும், மண்ணிலும் குரோமியம் என்ற நச்சுப் பொருள் ஊடுருவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இந்த ஆய்வை நச்சு இடர்பாட்டு மையம் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.வட இந்தியாவில் உள்ள பெப்சி, மற்றும் கோலா நிறுவனங்களின் 5 தொழிற்சாலைப் பகுதிகளுக்கு அருகில் உள்ள நீர்நிலை, மண் ஆகியவற்றில் குரோமியம் உள்ளிட்ட பிற நச்சுப் பொருட்கள் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கேரள அரசு ஏற்கனவே இதே காரணத்திற்காக கோலா நிறுவனம் ரூ.216 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பிளாச்சிமடாவில் உள்ள தொழிற்சாலை அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரையும், மண்ணையும் நச்சு மயமாக ஆக்கியுள்ளது என்று கேரள அரசு இந்த பன்னாட்டு நிறுவனம் மீது குற்றம் சாற்றியிருந்தது. தற்போது உத்திரப்பிரதேசத்தில் உள்ள மேதிகஞ்ச், காசியாபாத், ராஜஸ்தானில் உள்ள கலாதேரா, சோபன்கி, ஹரியானாவில் உள்ள பானிபட் ஆகிய இடங்களில் உள்ள குளிர்பான உற்பத்தி தொழிற்சாலைகளால் நிலத்தடி நீரில் நச்சு பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது.காசியாபாதில் உள்ள விவசாயி ஒருவர் இது பற்றி குறிப்பிடுகையில், "எங்கள் நீர்நிலைகள் நச்சு மயமாகியுள்ளது. மேலும் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது." என்றார்.மேலும் குரோமியம் நச்சுக் கலப்பால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் தொகையில் சில பகுதியினருக்கு சரும வியாதிகளும், வயிற்று வலி உள்ளிட்ட பிற அடையாளம் காண முடியாத உடல் உபாதைகளும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.எனவே கிராமத்தினர் முதற்கட்ட நடவடிக்கையாக பொது நல வழக்கு ஒன்றைத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட நீர் மாதிரிகள் 85-இல் 59 மாதிரிகளில் குரோமியம் நச்சுப்பொருள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக நச்சு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குரோமியம், சரும நோயையும், வயிற்று உபாதைகளையும், அல்சர் மற்றும் புற்று நோயை ஏற்படுத்துவதாக நச்சு ஆய்வு மையத்தின் இயக்குனர் தனு ராய் தெரிவித்தார்.காசியாபாத் பகுதியிலிருந்து திரட்டப்பட்ட மாதிரியில் காட்மியம், மற்றும் காரீயம் ஆகிய நச்சுப் பொருட்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தொழிற்சாலைக் கழிவு பாயும் இடங்களில் உள்ள நீர் மாதிரிகளில் இந்த நச்சுப் பொருட்களின் அளவு பெருமளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குளிர்பான உற்பத்திகளில் கடினமான உலோகங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த தொழிற்சாலைகளுக்கு எந்த வித வழிகாட்டுதலும் இல்லை.ஆனால் தொழிற்சாலைக் கழிவு நீரில் தற்போது ஆய்வு செய்யப்பட்ட 3 கடின உலோகங்கள் தவிர வேறு சிலவும் கலந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இந்த அறிக்கைகளை மறுத்துள்ள கோலா நிறுவனம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பெப்சி நிறுவனம் எந்த விதக் கருத்தையும் கூற மறுத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)