பாய்ந்தது இரும்புக் கரம்: அரசு ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்
சென்னை, பிப்.25-
நன்றி தீக்கதிர் 2602-11
“இரும்புக்கரம் கொண்டு தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்கும்” மனநிலை திமுக அரசுக்கு மாறவில்லை என்பதன் வெளிப்பாடாக, வெள்ளியன்று ஊர்வல மாகச் சென்ற தலைவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீது காவல்துறையினர் அரஜாக கொடூரத் தாக்குதல் தொடுத்தனர். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட் டத்தையொட்டி முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கைகளை எடுத்துரைக்க அவர்கள் புறப்பட்டபோது, அவர்கள் மீது காவல்துறை யினர் தடியடி நடத்தியதில் நூற்றுக்கணக் கானோர் படுகாயமடைந்தனர். அவர்களில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர்.
காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை சேப்பாக்கத்தில் எழிலக வளா கத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இரா. தமிழ்செல்வி தலை மையில் தொடங்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளியன்று 3வது நாளை எட்டியது.
இதேபோல், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினரும் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நாளா கிய வெள்ளியன்று அவர்கள் கறுப்புச் சட் டை, வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், சங்கங்களின் தலைவர்களு டன் பேச்சு நடத்த அரசுத்தரப்பில் முன்வர வில்லை. இதனால், அரசு ஊழியர்களும், சாலைப்பணியாளர்களும் தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரை சந்தித்து நேரில் தெரிவித்து பேச்சுவார்த் தை நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை உழைப்பாளர் சிலை அருகே காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து நிறுத்தினர். தடுப்பு வேலிகளைத் தாண்டி முன்னேறிச் சென்றவர்களை வாலாஜா சாலையில் காவல்துறையினர் மீண்டும் தடுத்தனர். இதனால், அரசு ஊழியர்களும், சாலைப்பணியாளர்களும் புதிய தலை மைச் செயலக வாயில் முன்பாக அமர்ந்து முற்றுகையிட்டனர்.
தலைமைச்செயலகம் உள்ள இடத் திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக் கள், உண்ணாவிரதங்கள் கூட அனுமதிக் கப்படுவதில்லை என்ற நிலையில் இந்தத் துணிச்சலான முற்றுகைப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திடீரென, எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாதபோதும், காவல்துறை இணை ஆணையர் மு.சி. சாரங்கன் தடியடி நடத்த ஆணையிட, காவலர்கள் கண்மூடித்தன மாகத் தாக்கத்தொடங்கினர். இந்த தாக்கு தலில் பல ஊழியர்களின் காது பிய்ந்தது, வாயிலும் அடிபட்ட ரத்தம் கசிந்தது. சில ருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட் டியது. காவல்துறையினரின் தாக்குதலால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சி யளித்தது. தாக்குதலைத் தொடர்ந்து காவல் துறையினர் நூற்றுக்கும்மேற்பட்ட ஊழியர் களையும் தலைவர்களையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு தரதரவென்று இழுத்துச் சென்றனர். ஊழியர்கள் இந்தத் தாக்குதலுக்கும் அரசின் அணுகுமுறைக் கும் கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப் பிய வண்ணம் இருந்தனர்.
பின்னர் தலைவர்களுடன் காவல் துறை அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த் தை நடத்தியதைத் தொடர்ந்து, கைது செய் யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட் டனர். ஊழியர்களும் சாலைப்பணியாளர் களும் தங்களது உண்ணாவிரதப் போராட் டத்தை உறுதியுடன் தொடர்ந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பதாகத் தகவல் வந்ததை அடுத்து, தலைவர்களை அதி காரிகள் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
முதல்வருடன் பேச்சுவார்த்தை
முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை யில் அரசு ஊழியர் சங்கத்தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சீனிவாசன், இளங்கோ, அன்பரசு, ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் சாலைப்பணியாளர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை கள் குறித்தும் முதல்வரிடம் எடுத்துரைக் கப்பட்டது. நிதி நிர்வாக அதிகாரிகளுடன் உரிய ஆலோசனைகள் நடத்தி கோரிக் கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும், இதற் கான உரிய ஆணைகள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்ததாகவும் பேச்சுவார்த்தைக்குப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அரசு ஊழியர் மற்றும் சாலைப்பணியாளர் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. உண்ணாவிரதத்தை அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலா ளர் இரா.முத்துசுந்தரம், பொருளாளர் க.ராஜ் குமார் ஆகியோர் முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment