tngea

Pages

Tuesday, February 1, 2011

அச்சுறுத்தப்படும் அரசு ஊழியர்கள்
-இரா.தமிழ்ச்செல்வி -
நன்றி - தீக்கதிர் - 31-01-2011
செய்தித்தாள்களில் இந்த வாரம் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருப்பது மராட்டிய மாநிலத்தில் ஒரு கூடுதல் ஆட்சியர் சமூகவிரோதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள் ளார் என்பதே ஆகும். இந்த கொடு மையை கண்டித்து கவலையுடன் தமிழ கத்தில் சில செய்தித்தாள்கள் செய்தி வெளிட்டுள்ளன. நாடு முழுவதும் இத்த கைய கொடிய சம்பவங்கள் நடை பெறுவதும் அது குறித்து ஓரிரு நாட்கள் பரபரப்பாக செய்திகள் வருவதும், பின்னர் இச்சம்பவங்கள் குறித்த வழக்குகளின் கதி என்னவாயிற்று என்பதும் கூட அறியமுடியாத நிலைதான் உள்ளது..

இத்தகைய ஒரு சம்பவத்தில் தொட ரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் சமீ பத்தில் அளித்த தீர்ப்பு விந்தையானது. 1999-ம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த, ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்பவரும் அவரது இரு சின்னஞ் சிறு குழந்தைகளும் சில சமூக விரோதிகளால் எரித்து கொலை செய் யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங் என்பவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அவன் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து கொண்டதன்பேரில் அவனு டைய தண்டனை ஆயுள் தண்டனை யாக மாற்றப்பட்டது. இதையும் எதிர்த்து அவன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். இந்த வழக்கில் ஆஜரான சிபிஐ வழக்கறிஞர், அவனுக்கு விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப் பட்ட மரண தண்டனையை உறுதிசெய்ய வேண்டும் என வாதாடினார். ஆனால் உச்சநீதிமன்றமோ, பட்டப்பகலில் சின் னஞ்சிறு குழந்தைகளையும், அவர்களது தந்தையையும் எரித்துக்கொன்ற நிகழ்வு மரண தண்டனை வழங்கும் அளவிற்கு பெரிய குற்றம் ஒன்றுமில்லை என தீர்ப்பு வழங்கி, இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து இந்திய செய் தித்தாள்கள் எந்த அளவிற்கு முக் கியத்துவம் அளித்து செய்திகள் வெளி யிட்டன என்பது கேள்விக்குறியே!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகா லத்தில் தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள் தாக்கப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.

* விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் வெட்டப்பட்டதும்.

* சிவகாசியில் கள்ளத்தனமாக வெடி களை தயாரிக்கும் கிட்டங்கிகளை தணிக் கையிடச் சென்ற வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்ததும், இறந்து ஊழியர்களின் குடும் பங்களுக்கு நாளதுவரை வாரிசுகளுக்கு வேலை மற்றும் உரிய நிவாரணம் அரசால் வழங்கப்படாமல் இழுத்தடித்துக் கொண் டிருப்பதும்.

* முகவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் ஒரு பெண் அரசு ஊழியர் அதிகாரிகளால் மன உளைச்ச லுக்கு ஆளாக்கப்பட்டு, ஓடும் இரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்துகொண் டதும்.

* குமரி மாவட்டத்தில் அமைச்சர் முன்னிலையிலேயே ஒரு துணை ஆட்சி யர் தாக்கப்பட்டதும், அதே மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற நெடுஞ்சா லைத்துறையினர் மீது வாகனத்தை ஓட்டி கொலை செய்ய முயற்சித்ததும்

* பெரம்பலூர் மாவட்டத்தில் தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை என ஒரு துணை ஆட்சியரை ஆளும் கட் சியின் சட்டமன்ற உறுப்பினர் தலைமை யில் சமூகவிரோதிகள் ஒன்று கூடி சிறைவைத்ததும்.

* திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறை களுக்கு மாறாக கலர் டி.வி.வழங்க வேண் டும் என்று சட்டமன்ற உறுப்பினரின் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்த வரு வாய் ஆய்வாளர் இழிவு படுத்தப்பட்டதும்.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட் டச் செயலாளரான ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த வட்டாட்சியர் ஒருவரை இழிவுபடுத்தி பேசியதும், அதன் விளை வாக அந்த வட்டாட்சியர் மனம் உடைந்து இறந்துபோனது குறித்தும், அதே மாவட் டத்தில் ஆளுங்கட்சியின் ஒன்றிய செய லாளர்கள் மணல் கடத்தலை தடுத்த பெண் வருவாய் ஆய்வாளர் ஒருவரை மிரட்டியதும் இத்தகையச் சம்பவங்களில் அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் மீதுள்ள வழக்குகளில் காவல் துறை மெத்தனமாக நடந்துகொண்டிருப்பதும்.

* ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கிராம உதவியாளரை தாக்கியதும்.

* திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளரை அரசியல் பிரமு கர்கள் தாக்கியதும்

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கொலை செய் யப்பட்டதும்.

* நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த வட்டாட்சியர் தாக்கப்பட்டு தனது காலை இழந்ததும்,

* கோவை மாவட்டத்தில் பொள்ளாச் சியில் தனது கூட்டத்திற்கு ஆள் சேர்க்க வில்லை என்பதற்காக அமைச்சர் ஒரு வர், வருவாய் ஆய்வாளரை தரக்குறை வாக பேசி, பின்னர் வருத்தம் தெரிவித்ததும்.

* திருவாரூர் மாவட்டத்தில் திருத் துறைப் பூண்டி உள்ளாட்சி அமைப்பு தேர் தலில் ஆளுங்கட்சி குறைந்த ஓட்டில் தோற்றுப்போவதை பொறுத்துக்கொள் ளாத அக்கட்சியின் பிரமுகர்கள், தேர்தல் அதிகாரியாக இருந்த மாவட்ட வருவாய் அலுவலரை முடிவுகளை அறிவிக்க விடா மல் குளியலறையில் சிறை வைத்ததும்

* மணல் கடத்தலை தடுத்த குட வாசல் வட்டாட்சியர் அலுவலகம் தாக் கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதும், அது குறித்த வழக்கு மூன்று ஆண்டுகளாகியும் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதும்,

இவ்வாறு அடுக்கடுக்காக, அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தாக்கப் படுகின்றனர். இவைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் மாவட் டங்களில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தி யும் வேலை நிறுத்தங்கள் செய்தும் போராடி வருகிறது. காவல் துறையே இத்தகையச் சம்பவங்களில் உரிய பிரிவுகளில் வழக்கு களை பதிவு செய்யாமல் ஆட்சியாளர் களை திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இச்சம்பவங்கள் குறித்து தமிழக நாளேடுகள் எந்த அளவிற்கு செய்திகள் வெளியிட்டன என்பது கேள்விக் குறியே! இவ்வளவு ஏன்? மதுரையில் தினகரன் நாளேடு அலுவலகம் தாக்கப்பட்டு, அங்கு பணி யாற்றிக் கொண்டிருந்த மூவர் கொலை செய்யப்பட்டதும், அந்த வழக் கின் கதி என்னவாயிற்று என்பதும் அந்த ஆண் டவனுக்கே வெளிச்சம்!

இத்தகையச் சம்பவங்களில் ஈடு படும் சமூகவிரோதிகள், ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களின் ஆதரவை பெற்று செயல்படுவதுதான் வருத்தத்திற் குரிய விஷயமாகும்.

ஆட்சியாளர்கள் குறித்தும் அரசியல் வாதிகள் குறித்தும் சுதந்திரமாக கருத்துக் களை வெளியிடும் பத்திரிகை அலுவல கங்கள் தாக்கப்படுவதும், எரிய+ட்டப்படு வதும் தமிழ்நாட்டில் சர்வசாதாரண நிகழ் வாக மாறிவிட்ட நிலையில், மராட்டிய மாநிலத்தில் அரசுஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தையாவது பொறுப்புணர்வுடன் வெளியிட்ட செய்தித்தாள்களை பாராட் டாமல் இருக்கமுடியாது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கினால் அதை பல முறை வெளியிட்டு மிகைப்படுத்தும் செய்தித்தாள்கள், அரசுஊழியர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படும்போதும், அரசியல்வாதிகளால் அச்சுறுத்தப்படும் போதும் அதை மக்கள் மத்தியில் அவ் வளவாக கொண்டு செல்ல முன்வருவ தில்லை என்பதையும் வருத்தத்துடன் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. இதே நேரத்தில் அரசின் விளம்பரங்களை எதிர் பார்த்து தயங்கிக்கொண்டிருக்காமல் உழைப்பாளி மக்களின் இயக்கச் செய்தி களை உரிமைப் போராட்டங்களை வெளி யிடும் ஓரிரு பத்திரிகைகளும் இருக் கின்றன என்பதை எண்ணி மகிழ்ச்சி அடையலாம்.

வெள்ளித்திரைக்கும் சின்னத்திரைக் கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எத்தனை நாளுக்குத்தான் இந்த பொதுஜ னம் பார்த்துக் கொண்டு ஊமைத்துரை களாக சும்மா இருப்பார்கள்? அவர்களது அறிவுக் கண்ணும் திறக்கும்! பத்திரிகை சுதந்திரத்திற்கும் வழி பிறக்கும்!

- கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்

1 comment: