Monday, March 28, 2011
சொன்னதும் செய்ததும்
மக்களை ஏமாற்றுவதில் திமுக அரசு முதலிடம் -க.ராஜ்குமார் நன்றி தீக்கதிர் 28-03-11 எதிர்பார்த்தது நடந்துவிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஓய்வூதியத் திட்டத்தை தனியார்மயமாக்கிட வழிவகுக்கும் சட்டமுன்மொழிவினை ஆட்சி யாளர்கள்; அறிமுகப்படுத்தியுள்ளனர். 2001ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த, ஓய்வூதியத்தை தனியார்மயமாக்கிட வழி வகுக்கும் மசோதா கடந்த 10 ஆண்டுகாலமாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களின் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பாஜகவின் ஆதரவுடன், காங்கிரஸ் இன்று மீண்டும் அந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நம் பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப் பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பிரதமர் மீது உரிமைமீறல் பிரச்சனையை நடப்புக் கூட்டத்தொடரில் கிளப்பிய பி.ஜே.பி., ஓய்வூ திய மசோதாவை காங்கிரஸ் கொண்டுவரும் போது அதை ஆதரித்தது என எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பெருமையுடன் பீற்றிக்கொண்டுள்ளார். தொழிலாளர்களின், மத்திய-மாநில அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இடதுசாரிகளின் கரங் களை பலப்படுத்துவதே இன்றைய தேர்தல் கால உடனடி தேவையாக உள்ளது. ஓய்வூதி யத் திட்டம் தனியார்மயமாக்கலை எதிர்த்து வருவதுடன் இடதுசாரிகள் ஆளுகின்ற மேற்குவங்கம் கேரளம், திரிபுரா ஆகிய மாநி லங்களில் அதை அமல்படுத்த மறுத்துவருப வர்கள் இடதுசாரிகள். இன்று இந்திய நாட் டின் இறையாண்மைக்கு ஆபத்தை விளை விக்கும், ஊழலின் ஊற்றுக் கண்ணாக திகழும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவதும், அவர்களை பலகீனப்படுத்துவதுமே இன்றைய அவசர அவசியத் தேவையாகும். இந்த அடிப்படையி லேயே இன்று தமிழகத்தில் இடதுசாரிகள் பங்கேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க அணி உருவா கியுள்ளது. இந்த அணியினை வெற்றிபெறச் செய்வதே இன்று நம்முன் உள்ள பணியாகும். திமுகஆட்சிக்கு வந்தபிறகு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இன்று தேர்தல் நடத்தும் துறையான வருவாய்த்துறையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில், காலி ஏற் பட்ட 4000 கிராம நிர்வாக அலுவலர் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதே துறையில் 3000-க்கும் மேற்பட்ட உதவியா ளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துகின்ற மற் றொரு துறையான ஊரக வளர்ச்சித்துறையில் 3000 உதவியாளர் பணியிடங்கள் காலியாக வுள்ளன. இது துணை முதல்வரின் பொறுப் பில் உள்ள துறை என்பது குறிப்பிடத்தக்கது. அரசுத்துறைகளில் கேந்திரமான, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். வாய்கூசாமல் காலிப் பணியிடங்களை நிரப்பிவிட்டோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். வருவாய்த்துறையில் வட்டாட்சியருக்கும், ஊரகவளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அவர்களின் பணியின் சிறப்புத் தன்மையை கருத்தில் கொண்டு, தனி ஊதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என ஆணையிட்டவர்கள் ஒரே மாதத்தில் அதை இரத்து செய்து ஆணையிட்டுள்ளனர். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூ திய முறையை ஒழிப்போம்” என்றார்கள். ஆனால் சிறப்பு காலமுறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து, ஊழியர் களை ஏமாற்றினார்கள். ஊதியக்குழுவால் நிர் ணயிக்கப்பட்ட ஊதியம் கேட்டுப் போராடிய சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர்களை பணியிலிருந்து நீக்கினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிப் போம் என்றவர்கள், அதை செய்திடக் கேட்ட சாலைப்பணியாளர்களை காவல் துறையின ரை வைத்து அடித்து காயப்படுத்தினர். ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்கு பணியாத அரசுஊழியர்களை அலுவலகத்திற் குள் புகுந்து தாக்கி காயப்படுத்தினர். மணல் கொள்ளையில் சமூகவிரோதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு அரசுஊழியர்களின் உயிருக்கு உலைவைத்தனர். கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் படுத்துவோம் என கடந்த தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டவர்கள், ஆட்சிக்கு வந்த வுடன் அவர்களை பணியிலிருந்து நீக்கினர். எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறை யின் மூலம் அடக்குமுறையை ஏவினர். அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீ காரம் கொடுப்போம் என்று சொன்னவர்கள், அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைக ளுக்கு ஒத்திசைக்க அரசு ஊழியர் சங்கம் தயாராக இல்லை என்பதால் அங்கீகாரம் கொடுக்க மறுத்தனர் . சங்கப் பிரதிநிதிகளுடன் பேசி பிரச்சனை களை தீர்ப்போம் என்று சொன்னவர்கள், பேச சென்றவர்களை காவல்துறையை வைத்து அடித்து உதைத்து அனுப்பினர். சொன்ன தைச் செய்வோம் என்று சொன்னவர்கள், 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அறிவித்த தேதிக்கு மாறாக ஓராண்டு கழித்து அறிவித்தார்கள். மத்திய அரசு வழங்கிய வீட்டுவாடகைப்படியோ, போக்குவரத்துப்படியோ வழங்க மறுத்துவிட் டனர். மத்திய அரசு மகப்பேறு விடுப்பு 18 மாதங்கள் என்று வழங்கியுள்ள நிலையில் அதை தருவதற்கு தயாராக இல்லாதவர்கள், இன்றும் திமுக தேர்தல் அறிக்கையில் 4 மாதம் தருவோம் என்று அறிவி;த்துள்ளார்கள். ஊதியமாற்ற ஆணைகளில் குழப்பங்களை விளைவித்து ஊழியர்களிடையே பிளவு களை ஏற்படுத்த முயற்சித்தனர். முரண்பாடு களே இல்லை என்று ஏகடியம் செய்தவர்கள் இன்று தங்கள் தேர்தல் அறிக்கையில் மீண் டும் ஆட்சிக்கு வந்தால் முரண்பாடுகளை நீக்க மீண்டும் ஒரு குழுவினை அமைப்பதாக தெரிவித்துள்ளனர்! இனியும் இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கிட அரசுஊழியர் கள், ஆசிரியர்கள் தயாராக இல்லை. சொல் வது ஒன்றும் செய்வது ஒன்றுமான இவர்க ளின் கபட நாடகத்தை புரிந்து கொண்டுவிட் டனர். ஆடு நனைகிறதே என்று கவலைப் பட்ட ஓநாய்களை அரசுஊழியர்கள் அடை யாளம் கண்டுகொண்டுவிட்டனர். -கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment