tngea

Pages

Monday, March 28, 2011

சொன்னதும் செய்ததும்

மக்களை ஏமாற்றுவதில் திமுக அரசு முதலிடம் -க.ராஜ்குமார் நன்றி தீக்கதிர் 28-03-11 எதிர்பார்த்தது நடந்துவிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஓய்வூதியத் திட்டத்தை தனியார்மயமாக்கிட வழிவகுக்கும் சட்டமுன்மொழிவினை ஆட்சி யாளர்கள்; அறிமுகப்படுத்தியுள்ளனர். 2001ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த, ஓய்வூதியத்தை தனியார்மயமாக்கிட வழி வகுக்கும் மசோதா கடந்த 10 ஆண்டுகாலமாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களின் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பாஜகவின் ஆதரவுடன், காங்கிரஸ் இன்று மீண்டும் அந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நம் பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப் பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பிரதமர் மீது உரிமைமீறல் பிரச்சனையை நடப்புக் கூட்டத்தொடரில் கிளப்பிய பி.ஜே.பி., ஓய்வூ திய மசோதாவை காங்கிரஸ் கொண்டுவரும் போது அதை ஆதரித்தது என எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பெருமையுடன் பீற்றிக்கொண்டுள்ளார். தொழிலாளர்களின், மத்திய-மாநில அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இடதுசாரிகளின் கரங் களை பலப்படுத்துவதே இன்றைய தேர்தல் கால உடனடி தேவையாக உள்ளது. ஓய்வூதி யத் திட்டம் தனியார்மயமாக்கலை எதிர்த்து வருவதுடன் இடதுசாரிகள் ஆளுகின்ற மேற்குவங்கம் கேரளம், திரிபுரா ஆகிய மாநி லங்களில் அதை அமல்படுத்த மறுத்துவருப வர்கள் இடதுசாரிகள். இன்று இந்திய நாட் டின் இறையாண்மைக்கு ஆபத்தை விளை விக்கும், ஊழலின் ஊற்றுக் கண்ணாக திகழும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவதும், அவர்களை பலகீனப்படுத்துவதுமே இன்றைய அவசர அவசியத் தேவையாகும். இந்த அடிப்படையி லேயே இன்று தமிழகத்தில் இடதுசாரிகள் பங்கேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க அணி உருவா கியுள்ளது. இந்த அணியினை வெற்றிபெறச் செய்வதே இன்று நம்முன் உள்ள பணியாகும். திமுகஆட்சிக்கு வந்தபிறகு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இன்று தேர்தல் நடத்தும் துறையான வருவாய்த்துறையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில், காலி ஏற் பட்ட 4000 கிராம நிர்வாக அலுவலர் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதே துறையில் 3000-க்கும் மேற்பட்ட உதவியா ளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துகின்ற மற் றொரு துறையான ஊரக வளர்ச்சித்துறையில் 3000 உதவியாளர் பணியிடங்கள் காலியாக வுள்ளன. இது துணை முதல்வரின் பொறுப் பில் உள்ள துறை என்பது குறிப்பிடத்தக்கது. அரசுத்துறைகளில் கேந்திரமான, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். வாய்கூசாமல் காலிப் பணியிடங்களை நிரப்பிவிட்டோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். வருவாய்த்துறையில் வட்டாட்சியருக்கும், ஊரகவளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அவர்களின் பணியின் சிறப்புத் தன்மையை கருத்தில் கொண்டு, தனி ஊதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என ஆணையிட்டவர்கள் ஒரே மாதத்தில் அதை இரத்து செய்து ஆணையிட்டுள்ளனர். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூ திய முறையை ஒழிப்போம்” என்றார்கள். ஆனால் சிறப்பு காலமுறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து, ஊழியர் களை ஏமாற்றினார்கள். ஊதியக்குழுவால் நிர் ணயிக்கப்பட்ட ஊதியம் கேட்டுப் போராடிய சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர்களை பணியிலிருந்து நீக்கினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிப் போம் என்றவர்கள், அதை செய்திடக் கேட்ட சாலைப்பணியாளர்களை காவல் துறையின ரை வைத்து அடித்து காயப்படுத்தினர். ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்கு பணியாத அரசுஊழியர்களை அலுவலகத்திற் குள் புகுந்து தாக்கி காயப்படுத்தினர். மணல் கொள்ளையில் சமூகவிரோதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு அரசுஊழியர்களின் உயிருக்கு உலைவைத்தனர். கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் படுத்துவோம் என கடந்த தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டவர்கள், ஆட்சிக்கு வந்த வுடன் அவர்களை பணியிலிருந்து நீக்கினர். எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறை யின் மூலம் அடக்குமுறையை ஏவினர். அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீ காரம் கொடுப்போம் என்று சொன்னவர்கள், அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைக ளுக்கு ஒத்திசைக்க அரசு ஊழியர் சங்கம் தயாராக இல்லை என்பதால் அங்கீகாரம் கொடுக்க மறுத்தனர் . சங்கப் பிரதிநிதிகளுடன் பேசி பிரச்சனை களை தீர்ப்போம் என்று சொன்னவர்கள், பேச சென்றவர்களை காவல்துறையை வைத்து அடித்து உதைத்து அனுப்பினர். சொன்ன தைச் செய்வோம் என்று சொன்னவர்கள், 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அறிவித்த தேதிக்கு மாறாக ஓராண்டு கழித்து அறிவித்தார்கள். மத்திய அரசு வழங்கிய வீட்டுவாடகைப்படியோ, போக்குவரத்துப்படியோ வழங்க மறுத்துவிட் டனர். மத்திய அரசு மகப்பேறு விடுப்பு 18 மாதங்கள் என்று வழங்கியுள்ள நிலையில் அதை தருவதற்கு தயாராக இல்லாதவர்கள், இன்றும் திமுக தேர்தல் அறிக்கையில் 4 மாதம் தருவோம் என்று அறிவி;த்துள்ளார்கள். ஊதியமாற்ற ஆணைகளில் குழப்பங்களை விளைவித்து ஊழியர்களிடையே பிளவு களை ஏற்படுத்த முயற்சித்தனர். முரண்பாடு களே இல்லை என்று ஏகடியம் செய்தவர்கள் இன்று தங்கள் தேர்தல் அறிக்கையில் மீண் டும் ஆட்சிக்கு வந்தால் முரண்பாடுகளை நீக்க மீண்டும் ஒரு குழுவினை அமைப்பதாக தெரிவித்துள்ளனர்! இனியும் இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கிட அரசுஊழியர் கள், ஆசிரியர்கள் தயாராக இல்லை. சொல் வது ஒன்றும் செய்வது ஒன்றுமான இவர்க ளின் கபட நாடகத்தை புரிந்து கொண்டுவிட் டனர். ஆடு நனைகிறதே என்று கவலைப் பட்ட ஓநாய்களை அரசுஊழியர்கள் அடை யாளம் கண்டுகொண்டுவிட்டனர். -கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்

Sunday, March 20, 2011

கவலை அளிக்கும் தேர்வாணையத்தின் நடவடிக்கைகள்

அரசுப்பணி நியமனங்களில் முறைகேடுகள்
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் 19-03-11
அரசுப்பணி நியமனங்களில் முறை கேடுகள் நடந்திருப்பதால் அவற்றை இரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தால் 2000-01ம் ஆண்டில், துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், ஊரகவளர்ச்சி உதவி இயக் குனர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் விதி முறைகளை மீறி பிரதான எழுத்து தேர்வு விடைத்தாளில் கலர் பென்சில், கலர் பேனா, கலர் ஸ்கெட்ச், முதலியவற்றை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து தனி யார் இருவர் சென்னை உயர்நீதிமன் றத்தில் தொடுத்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, விதிமுறைகள் பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக நியமனங்களை இரத்து செய்ய வேண்டியதில்லை என தீர்ப்பளித்திருந்தார். இதன் மீதான மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 83 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்து, அவர்களின் நியமனங்களை இரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6 வார காலத் திற்குள் உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதிய அனைவரின் விடைத் தாள்களும் மறுமதிப்பீடு செய்து, தகுதி யின் அடிப்படையில் புதிய தரப்பட்டியல் வெளியிட்டு, நியமனங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில், விதிமுறைகளை மீறி எழுதப்பட்ட விடைத்தாள்கள் எதற்காக திருத்தப்பட்டன என்பது குறித்து தேர் வாணையம் உரிய காரணத்தை சொல்ல வில்லை என்றும் இதன் மூலம் தேர்வா ணையம் உரிய நடைமுறைகளை பின் பற்றவில்லை என்பதும்; தெரியவருகிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தேர்வாணையம் ஒரு சிலரின் விருப்பத்திற்கு அல்லது கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது அதன் பொருளாகும். இப்படி பணிநியமனம் செய் யப்பட்டவர்கள் அரசுப் பணியில் நீண்ட காலம் பணியாற்றியிருந்தாலும், பதவி உயர்வு பெற்று இருந்தாலும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் தேர்வாணையம் இந்த தீர்ப்பினை அமல்படுத்த தயாராக உள் ளதா என்பதே இப்போது நம்முன் எழுந் துள்ள கேள்வியாகும். ஏனெனில் சமீப காலமாக தேர்வாணையத்தின் நடவடிக் கைகள் தேர்வு எழுதும் போட்டியாளர் களின் அதிருப்திக்கு ஆளாகி, நீதிமன்றத் தில் வழக்குகள் தொடரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற தேர்வாணையம் முன்வரவேண்டும்.

இந்நேர்வில் ஏற்பட்ட தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தி னை மட்டும் நீதிமன்றம் சொல்லியுள்ளது. இந்த தவறுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்பதை கண்டறிந்தும், இத் தகைய பணி நியமனம் பெற்றவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என் பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் இவ்வாறு தவறான வழியில் நியமனம் பெற்றவர்கள், பணி நியமனத் திற்காக தாங்கள் இழந்தவைகளை வட்டி யும் முதலுமாக திரும்பப் பெறும் ஒரே நோக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர் என்பதே பெரும்பாலானோர் கருத்தாகும்.. இவர்களின் பின்னால் உள்ள செல்வாக் குப் பெற்ற அந்தப் புள்ளிகள் யார் என்ப தையும் அறிய தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஒரு நேர்வில் மட்டு மல்லாமல் இதற்குப் பின்னர் நடைபெற் றுள்ள தேர்வுகள் குறித்தும் ஒரு திறந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஏனெனில் தமி ழக அரசின் பல்வேறு துறைகளில் கொல் லைப்புற வழியாக நியமனம் பெற்ற அதி காரிகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடு கிறது. வணிகவரித்துறை போன்ற துறை களில் தவறான சான்றிதழை கொடுத்து பதவி உயர்வு பெற்றவர்கள் மீது நடவடிக் கை எடுக்க அரசு தயங்கிவருகிறது. பதவி உயர்வை இரத்து செய்ததே போதுமானது என அரசு கருதுகிறது போலும். சமீபத் தில் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு வந்த பைலட் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத் தப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக 4000-க்கும் மேற்பட்ட பைலட்டுகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வரப்படு கின்றன என்ற செய்தியும் வெளியாகி யுள்ளது. இத்தகைய நெஞ்சுறுதி தமிழக அரசிற்கு மட்டும் ஏன் இல்லை?

யாரை வேண்டுமானாலும் அவர்க ளின் செல்வாக்கைப் பொறுத்து எந்தப் பணியிலும் நியமனம் செய்யலாம் என்பது தானே தேர்வாணையத்தின் தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது? குரூப்-1 குரூப்-2 ல் தேர்வு செய்யப்படக் கூடியவர்கள் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றக் கூடியவர்களாக உள்ளனர். இவர்களின் நியமனத்தில் குறுக்கீடுகள், குளறுபடிகள் என்றால் அது எங்கே போய்முடியும்? தேர்வாணை யத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வும் அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நேர்காணலும் நியாயமான முறையில் தான் நடைபெறுகிறதா என்பதை மக்க ளுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்வாணையத்தின் மீது தற்போது விழுந்துள்ளது.

ஏனெனில் சமீபகாலமாக தேர்வா ணையத்தின் நடவடிக்கைகளில் தடு மாற்றம் காணப்படுகிறது. அரசுப் பணி யாளர் தேர்வாணையம் ஒரு சுயேச் சையான அதிகாரம் பெற்ற ஒரு அமைப் பாகும். ஆனால் சமீபகாலமாக அதன் நடவடிக்கைகள் தமிழக அரசின் கீழ் உள்ள ஒரு துறை நடவடிக்கை போன்றே இருந்து வருகிறது. அதனால்தான் என்னவோ தமிழக அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தேர்வாணையமும் தப்பவில்லை. தற்போது 30 விழுக்காட் டிற்கு மேல் அங்கு பணியிடங்கள் காலி யாகவுள்ளது. அரசுப் பணிக்கு தேர்வு செய்யும் தேர்வாணையத்திலேயே பணி யிடங்கள் காலியாகவுள்ளன என்பது விந்தையிலும் விந்தையாகும்.

இதனால் தேர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இன்றைக்கு போட்டியாளர்களை நீதிமன்றத்திற்கு தள்ளியுள்ளது. சமீபகாலமாக தேர்வா ணையம் மேற்கொண்டு வரும் நடவடிக் கைகள் அது குழப்பத்தின் உச்சத்தில் இருப்பதை காட்டுகிறது. திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் மூலம் பட்டம் பெற்றவர்களை முதலில் தேர்வு எழுத அனுமதித்துவிட்டு, தேர்வு செய்தபின், தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு பணி நிய மனம் வழங்க முடியாமல் தேர்வாணை யம் திணறிக்கொண்டு உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசின் பல்வேறு துறைகளில்; பணியாற் றிய தற்காலிக ஊழியர்களை பணி நிரந் தரம் செய்ய குரூப்-4 சிறப்பு தேர்வு நடத் தப்பட்டு, 9000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு, நாளதுவரை 1000க் கும் மேற்பட்டோருக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு குரூப்-2 க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு இதுவரை முழுமையாக முடிவு வெளி யிடப்படாத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் ஒரு குரூப்-2 தேர்வினை தேர்வாணையம் நடத்திட அறிவிக்கை செய்துள்ளது. சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிக்கையில், வருவாய்த்துறை, வணிகவரித்துறைப் போன்ற துறைக ளில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங் கள் தமிழக அரசின் ஸ்டாப் கமிட்டியின் முடிவிற்கு உட்பட்டது என அறிவித்துள் ளது. ஸ்டாப் கமிட்டி என்பது தமிழக அரசு பிறப்பித்துள்ள மறைமுக பணிநியமன தடை ஆணையின் ஷரத்துகளில் ஒன் றாகும். இதற்கு தேர்வாணையமும் கட்டுப் பட்டது என்பதே அறிவிக்கையில் வெளி யிடப்பட்டுள்ள செய்தியாகும். சென்ற ஆண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடத்தை நிரப்பிட அறிவிக்கை செய்யப்பட்டு, மேலும் அரசின் அறிவுறுத் தலின்படி கால நீட்டிப்பு செய்து இது வரை தேர்வினை நடத்த முடியாமல் தேர் வாணையம் திணறி வருகிறது. முரண் பாடுகளின் மொத்த உருவமாக இப்போது தேர்வாணையம் உள்ளது. அரசுப் பணிகளுக்கு பணி நியமனம் செய்யும் தேர்வாணையம் மக்களின் நம்பிக் கையை இழந்து வருகிறது. தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 70 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் தேர்வாணையம் விளையாடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Wednesday, March 9, 2011

உலக மகளிர் தினம்

பெண்கள் உரிமை போற்றுவோம்
க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் - 8-03-11
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படும் சர்வதேச மகளிர் தினம் உருவானதே ஒரு போராட்டக் களத்தில்தான். 1900ஆம் ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில் பெண்கள் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவற் றிற்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருந் தனர். சில நாடுகளில் பெண்களுக்கான அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தினம் தோற்றம்

1907-ல் ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து 59 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்ப தற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

1908-ம் ஆண்டு முதன்முதலில் நியூ யார்க் நகரில், 15000-க்கும் மேற்பட்ட பெண் கள் பேரணியாக சென்று தங்களின் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தியும், தேர் தலில் வாக்களிப்பதற்கான உரிமை கோரி யும், தங்களுக்கு நியாயமான, சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

1909-ல் ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மகளிர் தங்களுக்கு நியாய மான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத் தம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் சோச லிஸ்ட் கட்சி தேசிய அளவிலான முதல் மகளிர் மாநாட்டை பிப்ரவரி 28-ம் தேதி நடத் தியது. அன்றைய தினத்திலிருந்து 1913 வரை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது.

ஜெர்மனியில், 1910-ல் கோபன்ஹேகன் நகரில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சி இரண்டாவது மகளிர் மாநாட்டை நடத் தியது. இதில் 17 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பல்வேறு நாடுகளின் தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகளாகவும், சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாகவும், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் இருந்த னர். பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளாக வந்திருந் தனர். இந்த மாநாட்டில் சோசலிஸ்ட் ஜனநா யக கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த கிளாரா ஜெட்கின், பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை நடத் திட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். இந்த தீர்மானம் அனைத்து பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ரொட்டியும் ரோசாப்பூவும்

தொடர்ந்து 1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப் பட்டது. இந்த நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பேரணி கள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில் வேலை செய்வது, சமூகத்தில் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதே ஆண்டில் மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு முக்கோண தீ விபத்தில், பணியில் ஈடுபட் டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர். இவர் களில் பெரும்பாலானோர் இத்தாலி நாட் டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து அன் றைய தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததை வெளிப்படுத்தியது. இதன் பின்னர், தொழி லாளர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட இந்த நிகழ்ச்சி அடிகோலாக அமைந்தது. இதே ஆண்டில் பெண்கள் நடத்திய ‘ரொட்டியும் ரோசாப்பூவும்’ என்ற இயக்கம் பெண்களின் கோரிக்கை களை வலியுறுத்துவதாக அமைந்தது. இத்த கைய தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை யும் வேலை செய்யும் உரிமையும் சம ஊதியம் பெறும் உரிமையும் பிற்காலத்தில் கிடைத்தன.

மார்ச் 8

சர்வதேச பெண்கள் தினம்

1913-14-ல் ரஷ்ய நாட்டில் முதன் முறை யாக சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப் பட்டது. 1913-ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1914-ல் போருக்கு எதிராக பெண்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பேரணி நடத்தினர். 1917-ல் ரஷ்ய பெண்கள் ‘ரொட்டிக்காகவும் போருக்கு எதிராகவும்’ பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை தடைசெய்ய ஆரம்பத் தில் அரசு முயற்சி செய்தபோதும் பின்னர் ரஷ்ய நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதல் முறையாக தந்தது குறிப் பிடத்தக்கது. அந்த வீரஞ்செறிந்த வேலை நிறுத்தம் ரஷ்ய ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23 என்றாலும் உலகம் முழுவதும் கடைப்பிடித்து வரும் காலண்டர் படி மார்ச் 8 ஆகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே நாம் இன்று கொண்டாடும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகும்.

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகில் அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண் டாடப்படுகிறது. சீனா, வியட்நாம், ஒன்றுபட்ட ரஷ்ய நாடுகளில் இன்று மகளிர் தினத்திற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. அமெரிக் காவில் மார்ச் மாதம் முழுவதும் பெண்கள் வரலாற்று மாதம் (றுடிஅநn’ள ழளைவடிசல அடிவோ) கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டில் பெண்கள் நிலை

நமது நாட்டிலும் மகளிர் தின கொண் டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வணிக நிறுவனங்கள் இந்த நாளை பயன் படுத்திக்கொண்டு ஆடை அணிகலன்கள் விற்பனைக்கு, விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இந்திய நாட்டில் பெண்கள் நிலை மிகவும் மோசமாகவுள்ளது.

இந்திய நாட்டில் பணிபுரியும் பெண் களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக ‘அசோசெம்’ அமைப்பு சேகரித்த புள்ளி விப ரங்கள் கூறுகின்றன. இரவு நேரங்களில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற் றும் பெண்களும், விமானப் போக்குவரத்துப் பணியில் பணியாற்றும் பெண்களும், மருத்து வமனையில் பணியாற்றும் பெண்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், நிறுவனங்கள் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை தரத்தவறியுள்ளன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தலைநகர் தில்லியில் அதிகபட்சமாக 65சதவீதமும் ஹைதராபாத்தில் 28சதவீதமும் மும்பையில் 28சதவீதமும் என உள்ளது.

பெங்களூரில் உள்ள 2200 தொழில் நிறுவனங்களில் 1600 நிறுவனங்கள் மட்டும் தொழில்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 75000 முதல் 95000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மருத் துவமனைகள், விமானப்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணி யாற்றும் இவர்களில் 56சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ‘அசோசெம்’ புள்ளிவிபரம் கூறுகிறது.

மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார் போன்றவர்கள் பெண் களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து பேசியிருந்தாலும், பெண்களுக்கென தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை யெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரச்சனையில் இன்று இந்திய அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழித்தெறி யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சித் தலைவர்களை தவிர ஏனையோர் இரட்டை நிலைப்பாடு கொண்டி ருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு மசோதா, மக்களவையில் நிறை வேற்ற முடியாமல் உள்ளது வெட்கக்கேடானது.

இன்று பெண்கள் தினத்தை கொண்டாடு வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதே போல் உழைப்பாளி மக்களுக் கும் ஒரு நோக்கம் உள்ளது.

பெண்களுக்கு, சமூகம், அரசியல், பொரு ளாதாரம் மற்றும் தொழிற்சங்கத்தில் சமத்து வம் கிடைத்திடவும், சொத்து உரிமை, சட்டம் இயற்றக் கூடிய அவைகளில் இடம் பெற்றிடவும்,

வேலை செய்யுமிடங்களில் ஆண்- பெண் என்ற பாகுபாடு இல்லாமலிருக்கவும், வேலை செய்யுமிடங்களில் பாதுகாப் பினை உத்தரவாதப்படுத்திடவும், குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்திடவும், பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்திடவும், வரதட்சணைக் கொடுமைகளை களைந்திட வும், பெண்களை வணிக விளம்பரத்திற்கு அருவருக்கத்தக்க முறையில் பயன்படுத் துவதை தடுத்து நிறுத்திடவும், சாதியக் கொடுமைகளிலிருந்தும், மதரீதியான, சம்பிர தாய, மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் பெண்களை மீட்டெடுத்திடவும், உலகமயத் தினால் முதலில் பாதிக்கப்படுவது பெண் என் பதால் அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்துவதும்

இன்று உழைப்பாளி மக்கள் முன் உள்ள தலையாயக் கடமைகளாகும். இந்த உணர் வோடு 101-வது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவோம்

Monday, March 7, 2011

ஒப்புதல் வாக்குமூலம்

கலைஞர் அரசின் ஒப்புதல் வாக்குமூலம்
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் 7-03-11
6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் கலை ஞரின் அரசு, ஊதிய மாற்ற ஆணைகளில் குளறுபடிகள் உள்ளன என ஒப்புக் கொண்டு, அவற்றை இரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை, 26.2.2011 தேதியிட்ட, அ.ஆ. நிலை எண்.71 ஆணையில், பத்தி 6ல் “ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ஆணைகளினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சீரமைக்கும் வகை யில் அரசு விரிவாக ஆராய்ந்து இணைப்பில் குறிப்பிடப்பட் டுள்ள பணியிடங்களுக்கு ஊதிய விகித மாற்றங்களை செய்து அரசு ஆணையிடுகிறது” என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது. இந்த ஆணையில், வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத்துறை, நெடுஞ் சாலைத்துறை, ஊரக வளர்ச் சித் துறை, தொழில் மற்றும் வணிகவரித்துறை, தொழிற் சாலை ஆய்வகத்துறை, மாநில சுகாதார போக்குவரத்துத்துறை, மோட்டார் வாகன பராமரிப்புத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, போக்கு வரத்துத்துறை, மாற்றுத் திற னாளிகள் மறுவாழ்வு ஆணை யரகம், பேரூராட்சிகள், மின் ஆய்வுத்துறை, சென்னை மாநக ராட்சி, இந்திய மருத்துவம் மற் றும் ஹோமியோபதி துறை என 18 துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் தொகுப்பு ஊதியம் மற்றும் தர ஊதியத்தை குறைத்தும், மாற்றியும் அரசு ஆணையிட்டுள்ளது. இணை இயக்குநர்களுக்கு ஊதியம் (யீயல க்ஷயனே) ரூ.37,400-67,000 தரஊதியம், (ழுசயனந ஞயல) ரூ.8,700 என வழங்கப்பட்டதை அதிரடி யாக ஊதியம் ரூ.15,600-39,100, தரஊதியம் ரூ.7,600 என குறைத்து ஆணையிட்டுள்ளது.

எஸ்.மாலதி இ.ஆ.ப., தலை மையிலான அலுவலர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று தமிழக அரசு ஊதிய மாற்ற ஆணை களை பிறப்பித்தபோது, அதில் முரண்பாடுகள் உள்ளன என் பதை சுட்டிக்காட்டிய ஒரே சங் கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். இதற்காக அச்சங்கத் தின் பொறுப்பாளர்கள், முர சொலியின் வசவையும் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதா யிற்று. முரசொலி, ஊருக்கெல் லாம் ஒரு வழி என்றால் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் களுக்கு ஒரு வழி எனவும், கட்டிய வீட்டிற்கு திருஷ்டி பூசணிக்காய் போன்றவர்கள் அரசு ஊழியர் சங்கத்தின் தலை வர்கள் எனவும் கேலி செய்து எழுதியது. தற்போது வெளியிடப் பட்டுள்ள அரசு ஆணையில், பத்தி 3ல், 5-வது வரியில், “அலு வலர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு களை களைவதற்கு அரசு ஒரு நபர் குழுவை நியமித்து ஆணை கள் வெளியிட்டது” என அரசே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள் ளது. இதற்கு முரசொலி என்ன சொல்லப் போகிறது?

ராஜிவ்ரஞ்சன் இ.ஆ.ப., தலைமையில் ஒரு நபர் குழு வினை அமைத்தபோது, அப் போதும் இது ஊழலுக்கு வழி வகுக்கும் என அரசு ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்தது. முரண்பாடுகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நேரிடையாக அரசு பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவேண்டும் என அரசை கேட்டுக் கொண்டது. அதுவும் பலனற்றுப் போன நிலையி லேயே ஒரு நபர் குழுவின் அறிக் கையின் அடிப்படையில் அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. முரண்பாடுகளை களைவதற்கு பதிலாக முரண்பாடுகள் மேலும் அதிகரிப்பதற்கு அது வழி வகுத்தது. அலுவலர் குழு மற் றும் ஒரு நபர் குழுக்களின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்திதான் அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து இயக்கம் கண்டு இரத்தம் சிந்தியது.

தற்போது மேற்கண்ட ஆணை (71) பிறப்பித்ததின் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து விடவில்லை. ஊதியம் குறைக் கப்பட்ட பிரிவினர் ஏமாற்ற மடைந்து, கோபமடைந்துள் ளனர். அதுமட்டுமல்ல அரசு ஊழியர்களில் இன்னும் சில ருக்கு மத்திய அரசிற்கு இணை யான ஊதியமே வழங்கப்படாத நிலையில், சிலருக்கு மேம்படுத் தப்பட்ட ஊதியம் வழங்கப்பட் டிருப்பது, ஊழியர்களிடையே கோபத்தைக் கிளறியுள்ளது. இவற்றிற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க சங்க நிர்வாகி களை அரசு நேரடியாக அழைத் துப் பேசி தீர்வு காண முன்வர வேண்டும்.

அலுவலர் குழுவும், ஒரு நபர் குழுவும் உருவாக்கியுள்ள பிரச் சனைகள் அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. இதைத்தான் அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த ஆணை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலை உருவான தற்கு ஒரு சில அதிகாரிகளே காரணமாவர். அரசிற்கு அவப் பெயரை உருவாக்கி, ஊழியர்க ளிடையே குழப்பத்தை உருவாக் கியவர்களின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகி றது? அரசு ஊழியர்கள் தங்க ளின் பணிக்காலத்தில், மேற் கொண்ட பணிகளினால், அர சிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அரசு கருதினால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, பணி ஓய்வு பெறுவதற்கு கூட அவர் கள் அனுமதிக்கப்படுவ தில்லை. அப்படியிருக்க, லட் சக்கணக்கான ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான ஆணை யில் இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்த காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய வர்களே என்பதை அரசு உண ருமா? அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க முன்வருமா? என அரசு ஊழியர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

Sunday, March 6, 2011

தமிழக அரசிற்கு கண்டனம்

அரசு ஊழியர்கள் கோரிக்கை மீது தவறான தகவல்களை கூறுவதா? அரசுக்கு தமிழ்செல்வி கண்டனம்
நன்றி தீக்கதிர் 6-03-11
திருவாரூர், மார்ச் 5-

அரசு ஊழியர்களின் சம் பள விகிதம், பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்ச னைகளில் தமிழக அரசு மோச டியான தகவல்களை கூறுவது சரியானதல்ல. இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஆர். தமிழ்செல்வி தெரிவித்துள்ளார். திருவாரூரில் சனிக்கிழமை யன்று நடைபெற்ற அரசு ஊழி யர் சங்க விளக்க கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1984 ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு போராட் டங்களை நடத்தி உள்ளது. அரசு ஊழியர்கள் நடத்துகிற போராட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு தவறான தகவல் களை தருவதும், இவர்கள் சம்பள உயர்வுக்காக மட்டுமே போராடக் கூடியவர்கள் என்று விமர்சிப்பதும் மிகவும் தவ றானது.

அரசு ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளிட்ட பல் வேறு வாக்குறுதிகள் முதல் வரால் வழங்கப்பட்டன. இன் றும் கருணாநிதி முதல்வராக இருக்கும் நிலையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை. கூடுதல் வேலை நேரம், பணிச்சுமை, ஆள்பற் றாக்குறை, காலிப்பணியிடம் போன்ற பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. 1989-90 களில் கருணாநிதி அரசு கலைக்கப் பட்ட போது, இது ஜனநாயகத் திற்கு விரோதமானது என்று கூறி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து தங்களின் ஒருநாள் ஊதியத்தை இழந்த னர். அத்தகைய ஜனநாயக உணர்வோடுதான் இன்றும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக முறை யில் போராடி வருகின்றனர்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது இதையெல்லாம் ஆதரித்த முதல்வர் கருணா நிதி, தற்போது போராடும் அரசு ஊழியர்கள் மீது காவல்துறை யினரை கொண்டு மிருகத்தன மான முறையில் தடியடி நடத் துகிறார். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலை யில், பணிநியமனங்கள் குறித் தும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் மோசடியான தக வல்கள் தெரிவிக்கப்பட்டுள் ளன. விலையேற்றத்தின் கார ணமாக ஊழியர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை நிலை என்பது இன்று மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. கோரிக்கைகளை முன் வைத்து அமைதியான முறை யில் உண்ணாவிரத அறப் போராட்டத்தை அரசு ஊழியர் சங்கம் நடத்தியது. பலமுறை முதல்வரை சந்தித்து எங்க ளின் கோரிக்கைகளை முன் வைத்து முயற்சி செய்தபோது, அரசியல் சாயம் பூசப்பட்டு ஐஏஎஸ் அதிகாரிகளால் மறுக் கப்பட்டது. 4 ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஊழியர்கள் சம்ப ளம் வழங்கப்பட்டதாக தவ றான புள்ளி விவரம் அளிக் கப்படுகிறது. 2900 கோடி ரூபாய் மட்டுமே அரசு ஊழியர் கள் சம்பளம் பெற்றுள்ளனர் என்றால், இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டாமா? இந்த ஆட்சியை பொறுத்தவரை ஐஏஎஸ் அதிகாரிகள் ஊழல் மலிந்தவர்களாக உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் இந்த ஆட்சிக்கு மிகுந்த அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளது. மிகுந்த போராட்டங்களுக்கு இடையே தான் தமிழக முதல மைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை கூறமுடிந்தது.

தமிழக முதல்வருடன் நடத்திய பேச்சு வார்த்தை தொடர்பான விளக்க கூட்டம் சங்க மாவட்ட தலைவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் க.சிவக் குமார், மாவட்டச் செயலாளர் ஜி.பைரவநாதன், மாவட்ட பொருளாளர் எம்.சவுந்தராஜன், மாவட்ட நிர்வாகிகள் ராஜ ராஜன், ராகுலன், வேலாயுதம், வட்டநிர்வாகிகள் தியாகராஜன், காளிதாஸ் மற்றும் மாவட்டம் முழுவதிலுமிருந்து வட்ட கிளை நிர்வாகிகள், ஏராளமான பெண் ஊழியர்கள் கூட்டத் தில் கலந்து கொண்டனர்.