போராட்டங்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதா?
-
போராட்டங்களை திசை திருப்பாமலும், உள்நோக்கம் கற்பிக்காமலும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, மாநிலப் பொதுச் செயலாளர் டி.ஆர்.மேகநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சத்துணவு ஊழியர்கள் அனைவரை யும் முழு நேர அரசு ஊழியராக்கி, ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கிட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை உடன் நிறை வேற்றிட அரசை வலியுறுத்தி கடந்த ஜூலை9 ம்தேதி காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றுள்ளது.இந்நிலையில், தமிழக முதல்வர் 11.7.2010ல் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில், திமுக ஆட்சியில் தான் அரசு ஊழியர்களை போல் சத்து ணவு ஊழியர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதற்காக சத்துணவு மற்றும் குழந்தைகள் மைய ஊழியர் சங்கங்கள் இணைந்து 21.11. 2009ல் நன்றி விழா நடத்தினர் என்றும், அந்த மாநாட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்து, அவர்கள் மகிழ்ச்சியாக சென் றார்கள். ஆனால் ஒரு கட்சியின் சார்பு டைய சிலர் மட்டும் அரசை எதிர்த்து இது போன்ற கிளர்ச்சிகளை நடத்திக் கொண் டிருக்கிறார்கள் என்றும், இந்தப் போராட் டம் உள்நோக்கத்தோடும், கட்சி கண் ணோட்டத்துடனும் நடத்தப்படும் ஒன்று தான் என்று கூறியுள்ளார்.சத்துணவுத் திட்டம் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு ஊழியரின் பணிக ளும், பொறுப்புகளும் அதிகரித்து, இன் றைய நிலையில் முழு நேர பணியாகவே மாறியுள்ளது. ஆனால், அரசோ பகுதி நேர ஊழியர் என்று கூறி ஊதியக் குழுவால் வரையறுக்கப்படாத ஊதியமாக சிறப்பு காலமுறை ஊதிய விகிதம் என்றும், சிறப்பு மாதாந்திர ஊதியம் என்றும் கடுமையான விலைவாசி உயர்வுகளை எதிர்கொள்ள முடியாத மிகவும் குறைந்த ஊதியம் மற் றும் ஓய்வூதியத்தினை வழங்கி வருகிறது. இதில் ஊழியர்கள் தங்களுடைய அன் றாட தேவைகளை கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், வாழ்வில் பல்வேறு சமூக ரீதியான மற்றும் உறவு முறை ரீதியான கடமைகளை எதிர் கொள்ள முடியாமல் பொருளாதார நிலை மையில் மிகவும் பின்தங்கிய நிலையில் அன்றாடம் வறுமையின் பிடியில் உழலும் ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதமும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்ட ரீதியான மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாது காத்திட கோருகிறோம்.அரசுத்துறை காலிப்பணியிடங்களில் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்கள் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று 2007 ஜனவரியில் அன்றைய சமூக நலம் மற் றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டார். அதனை தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்பு தேறிய சத்துணவு ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் இவர்களுக்கு இளநிலை உதவி யாளர்களாக பதவி வழங்கினால் ஏற்படும் கூடுதல் செலவினம் எவ்வளவு என்ற புள்ளி விபரங்களை மாவட்டங்களிலி ருந்து சமூக நலத்துறை ஆணையர் அவர் களால் பெறப்பட்டுள்ளது. ஆனால், இதன் அடிப்படையில் இதுநாள் வரை எந்த வொரு ஊழியருக்கும் பதவி உயர்வு வழங் கப்படவில்லை.மேலும் 21.11.2009ல் முதலமைச்சரின் அறிவிப்பினை தொடர்ந்து 2010 ஜனவரி 12ல் சமூக நலத்துறையில் மட்டும் பதவி உயர்வு வழங்கும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பாளர் களிடம் பணி உயர்வுக்கான விருப்பம் மற்றும் விருப்பமின்மை கடிதங்கள் சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் மாவட்டங்களிலிருந்து பெறப்பட் டுள்ளது. ஆனால், உண்மையில் பதவி உயர்வு வழங்குவதற்கான காலிப் பணி யிடங்கள் தற்போது சமூக நலத்துறையில் இல்லை என்பதுதான் தகவல்.சத்துணவு ஊழியர்களின் போராட்ட காலங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை வழங்கி ஊழியர்களை ஏமாற்றுவதை விடுத்து, இன்றைய நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், சத்துணவு ஊழியர்க ளின் கல்வித் தகுதி அடிப்படையில் அக்காலிப்பணியிடங்களில் பணி வழங்கி பதவி உயர்வு வழங்கிட கோருகிறோம்.மேலும் சத்துணவை தயாரித்து வழங்க செலவினத் தொகையாக ஒரு மாணவருக்கு உணவு ஒன்றுக்கு 44 பைசா 18.7.2009 முதல் அனுமதித்து வழங்கப்படுகிறது. உதாரணமாக 100 மாணவர்களுக்கு காய்கறிக்காக ரூபாய் 20ம், சாம்பார் தயாரிக்கும் மளிகை பொரு ளுக்காக (மசாலா) ரூ.9ம், பத்து கிலோ அரிசியை வேக வைக்கவும், அதற்குரிய சாம்பார் தயாரிக்கவும் மற்றும் 100 முட் டைகளை வேகவைக்கவும், எரிபொருள் விறகுக்காக ரூ.15 மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. இன்றுள்ள கடுமையான விலை வாசி உயர்வில் அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால் ஊழியரின் ஊதியத்தில் ஒரு பகுதியை இதற்காக செலவிட வேண்டியநிலை உள்ளது.குறிப்பாக, ஜூன் 2000-இல் மளி கைக்காக ஒரு உணவிற்கு அனுமதிக்கப் பட்ட நாலரை பைசா என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் டிசம்பர் 2002ல் ஒன்பது பைசாவாக உயர்த்தப் பட்டது. ஆனால், 2002க்கு பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக விலைவாசி பல மடங்கு கடுமையாக உயர்ந்தபிறகும் இதற்கான செலவின தொகையை அரசு உயர்த்தி தரவில்லை. மேலும் 2007க்குப் பிறகு அனைத்து பொருட்களின் விலை யும் பல மடங்கு உயர்ந்த நிலையில், வழங் கப்படும் உணவு மேலும் தரமுள்ளதாக அமைய உணவு ஒன்றுக்கு தயாரிப்பு செல வின தொகையினை ரூ.2 ஆக உயர்த்தி வழங்கிட கோருகிறோம்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் என்பது ஒட்டுமொத்த ஊழியர்களின் பணி பாதுகாப்பிற்காகவும் பொருளாதார முன் னேற்றத்திற்காகவும் பாடுபட கூடியதும், ஒற்றுமையையும், தேசிய ஒருமைப்பாட் டையும் உருவாக்கும் நோக்கங்களையும் குறிக்கோளையும் கொண்ட அமைப்பு. எந்தவொரு கட்சியின் சார்பாகவும் செயல் படுவது அல்ல. தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக அரசை வலி யுறுத்தி நடத்தப்படும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை, அரசை எதிர்த்து நடத்தப்படும் கிளர்ச்சி என்று கூறுவதும், போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பிக் கப்படுவதும், கட்சி கண்ணோட்டத்துடன் நடத்தப்படும் போராட்டம் என்று கூறி, போராடும் ஊழியர்களுக்கு அரசியல் சாயம் பூசி போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியும் பிரச்சனைக்கு தீர்வாகாது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, போராடும் ஊழியர்களின் சங்கத் தலைமையை அழைத்துப் பேசி பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment