tngea

Pages

Thursday, July 22, 2010

அகில இந்திய வேலை நிறுத்தம்

செப்.7 அகில இந்திய வேலைநிறுத்தம் மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய - மாநில அரசு ஊழியர் அமைப்புகள் பிரகடனம்

புதுதில்லி, ஜூலை 15-

மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், அனை வருக்குமான பொது விநியோக முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளையும் வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெறும் என , புதுதில்லியில் நடைபெற்ற தேசிய சிறப்பு மாநாடு பிரகடனம் செய்தது.

சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எல்பிஎப், ஏஐயுடியுசி, டியுசிசி, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய மத்தியத் தொழிற் சங்கங்களும் மத்திய - மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் ஆகிய வற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இரண்டாவது தேசிய சிறப்பு மாநாடு, வியாழன் அன்று புதுதில்லியில் மாவ்லங்கார் அரங் கில் நடைபெற்றது. சிஐடியு தலை வர் ஏ. கே. பத்மநாபன் உட்பட பல் வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமையேற்று மாநாட்டை வழி நடத்தினர். மாநாட்டில் சிஐடியு துணைத் தலைவர் டாக்டர் எம்.கே. பாந்தே, ஏஐடியுசி பொதுச் செய லாளர் குருதாஸ் தாஸ் குப்தா மற்றும் பல்வேறு மத்தியத் தொழிற் சங்கங் களின் தலைவர்கள் உரையாற் றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு:

அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் ஒரு நடவடிக்கையாக அனைவருக்கு மான பொது விநியோக முறை மூலம் அத்தியாவசியப் பொருள்களை மான்ய விலையில் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.

உலகப் பொருளதார நெருக்கடி யின் விளைவாக, தொழில் முனை வோருக்கு ஊக்க நிவாரணம் அளிப்பது போன்று, வேலையிழப் புக்கு ஆளாகியுள்ள தொழிலாளர் களைக் காப்பாற்றிட, உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எவ்வித விதிவிலக்குமின்றி தொழிலாளர் நலச் சட்டங்களைக் உறுதியாக அமல்படுத்த வேண் டும், அதனை மீறுவோர் மீது தண் டனை நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.

முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாக்கக்கூடிய விதத்தில் 2008 -முறைசாராத் தொழி லாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட் டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்,

லாபத்தை அள்ளித்தரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. மேற்கண்ட ஐந்து முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து மத்திய தொழிற்சங்கங் களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களும் இணைந்து கடந்த 2009 செப்டம்பர் 14 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண் டமான முதல் சிறப்பு மாநாடு நடை பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2009 அக்டோபர் 28 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம், 2009 டிசம்பர் 16 அன்று தர்ணா, 2010 மார்ச் 5 அன்று சிறைநிரப்பும் போராட்டம் என சக்தி மிக்க போராட்டங்கள் நடந்தன.

விலைவாசியைக் குறைக்கக் கோரி, குறிப்பாக உணவுப் பொருள் களின் விலைகளைக் குறைக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. ஆயினும் உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வந்துள்ளன. இது தொழிலாளர்க ளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

முதலாளிகளால் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவதற்கு எதிராக தொழிற் சங்கங்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தபோதிலும், அதைப்பற்றி அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. தொழிலாளர் களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது, வேலைகளை வெளியே கொடுத்து (அவுட்சோர்சிங் முறையில்) வாங் கிக் கொள்வது அதிகரித்து வரு கிறது.

லாபமீட்டும் பொதுத்துறை நிறுவ னங்களைத் தாரை வார்க்கும் முயற் சிகளும் தொடர்கின்றன. உதா ரணமாக அரசு, இந்திய நிலக்கரி கழகம், பிஎஸ்என்எல், செயில், என் எல்சி, இந்துஸ்தான் காப்பர், என் எம்டிசி முதலானவற்றைக் குறிப் பிடலாம்.

தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வந்தபோதி லும், அரசு, பெட்ரோலியப் பொருட் களின் விலையை உயர்த்தியிருப் பதுடன் அதன் மீதிருந்த கட்டுப் பாட்டையும் நீக்கிவிட்டது.

எனவே, அனைத்துத் தொழிற் சங்கங்களின் 2வது தேசிய மாநாடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் வரும் 2010 செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக் கிறது.

நாட்டில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும், மத்திய - மாநில அரசு ஊழியர்களும் இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தை மாபெ ரும் வெற்றியாக்கிட வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கி றது. அரசு அதன்பின்னும் கோரிக் கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் நோக்கி சக்திமிக்க பேரணி நடத்திடுவது என்றும் மாநாடு தீர்மானிக்கிறது.

இவ்வாறு மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் ஆர்.முத்துசுந்தரம், (பொதுச் செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்), சுகுமால் சென் (முன்னாள் பொதுச் செயலாளர், அ.இ.மா.அ.ஊ.சம்மே ளனம்) மற்றும் ஆர்.சிங்காரவேலு. பி.எம்.குமார் உள்ளிட்ட சிஐடியு-வின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப் பினர்களும் கலந்து கொண்டனர்.

Monday, July 19, 2010

போராட்டங்களை தூண்டுவது யார்

போராட்டங்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதா?
-
போராட்டங்களை திசை திருப்பாமலும், உள்நோக்கம் கற்பிக்காமலும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, மாநிலப் பொதுச் செயலாளர் டி.ஆர்.மேகநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சத்துணவு ஊழியர்கள் அனைவரை யும் முழு நேர அரசு ஊழியராக்கி, ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கிட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை உடன் நிறை வேற்றிட அரசை வலியுறுத்தி கடந்த ஜூலை9 ம்தேதி காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றுள்ளது.இந்நிலையில், தமிழக முதல்வர் 11.7.2010ல் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில், திமுக ஆட்சியில் தான் அரசு ஊழியர்களை போல் சத்து ணவு ஊழியர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இதற்காக சத்துணவு மற்றும் குழந்தைகள் மைய ஊழியர் சங்கங்கள் இணைந்து 21.11. 2009ல் நன்றி விழா நடத்தினர் என்றும், அந்த மாநாட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்து, அவர்கள் மகிழ்ச்சியாக சென் றார்கள். ஆனால் ஒரு கட்சியின் சார்பு டைய சிலர் மட்டும் அரசை எதிர்த்து இது போன்ற கிளர்ச்சிகளை நடத்திக் கொண் டிருக்கிறார்கள் என்றும், இந்தப் போராட் டம் உள்நோக்கத்தோடும், கட்சி கண் ணோட்டத்துடனும் நடத்தப்படும் ஒன்று தான் என்று கூறியுள்ளார்.சத்துணவுத் திட்டம் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு ஊழியரின் பணிக ளும், பொறுப்புகளும் அதிகரித்து, இன் றைய நிலையில் முழு நேர பணியாகவே மாறியுள்ளது. ஆனால், அரசோ பகுதி நேர ஊழியர் என்று கூறி ஊதியக் குழுவால் வரையறுக்கப்படாத ஊதியமாக சிறப்பு காலமுறை ஊதிய விகிதம் என்றும், சிறப்பு மாதாந்திர ஊதியம் என்றும் கடுமையான விலைவாசி உயர்வுகளை எதிர்கொள்ள முடியாத மிகவும் குறைந்த ஊதியம் மற் றும் ஓய்வூதியத்தினை வழங்கி வருகிறது. இதில் ஊழியர்கள் தங்களுடைய அன் றாட தேவைகளை கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், வாழ்வில் பல்வேறு சமூக ரீதியான மற்றும் உறவு முறை ரீதியான கடமைகளை எதிர் கொள்ள முடியாமல் பொருளாதார நிலை மையில் மிகவும் பின்தங்கிய நிலையில் அன்றாடம் வறுமையின் பிடியில் உழலும் ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதமும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்ட ரீதியான மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாது காத்திட கோருகிறோம்.அரசுத்துறை காலிப்பணியிடங்களில் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்கள் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று 2007 ஜனவரியில் அன்றைய சமூக நலம் மற் றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டார். அதனை தொடர்ந்து பள்ளி இறுதி வகுப்பு தேறிய சத்துணவு ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் இவர்களுக்கு இளநிலை உதவி யாளர்களாக பதவி வழங்கினால் ஏற்படும் கூடுதல் செலவினம் எவ்வளவு என்ற புள்ளி விபரங்களை மாவட்டங்களிலி ருந்து சமூக நலத்துறை ஆணையர் அவர் களால் பெறப்பட்டுள்ளது. ஆனால், இதன் அடிப்படையில் இதுநாள் வரை எந்த வொரு ஊழியருக்கும் பதவி உயர்வு வழங் கப்படவில்லை.மேலும் 21.11.2009ல் முதலமைச்சரின் அறிவிப்பினை தொடர்ந்து 2010 ஜனவரி 12ல் சமூக நலத்துறையில் மட்டும் பதவி உயர்வு வழங்கும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பாளர் களிடம் பணி உயர்வுக்கான விருப்பம் மற்றும் விருப்பமின்மை கடிதங்கள் சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் மாவட்டங்களிலிருந்து பெறப்பட் டுள்ளது. ஆனால், உண்மையில் பதவி உயர்வு வழங்குவதற்கான காலிப் பணி யிடங்கள் தற்போது சமூக நலத்துறையில் இல்லை என்பதுதான் தகவல்.சத்துணவு ஊழியர்களின் போராட்ட காலங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை வழங்கி ஊழியர்களை ஏமாற்றுவதை விடுத்து, இன்றைய நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், சத்துணவு ஊழியர்க ளின் கல்வித் தகுதி அடிப்படையில் அக்காலிப்பணியிடங்களில் பணி வழங்கி பதவி உயர்வு வழங்கிட கோருகிறோம்.மேலும் சத்துணவை தயாரித்து வழங்க செலவினத் தொகையாக ஒரு மாணவருக்கு உணவு ஒன்றுக்கு 44 பைசா 18.7.2009 முதல் அனுமதித்து வழங்கப்படுகிறது. உதாரணமாக 100 மாணவர்களுக்கு காய்கறிக்காக ரூபாய் 20ம், சாம்பார் தயாரிக்கும் மளிகை பொரு ளுக்காக (மசாலா) ரூ.9ம், பத்து கிலோ அரிசியை வேக வைக்கவும், அதற்குரிய சாம்பார் தயாரிக்கவும் மற்றும் 100 முட் டைகளை வேகவைக்கவும், எரிபொருள் விறகுக்காக ரூ.15 மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. இன்றுள்ள கடுமையான விலை வாசி உயர்வில் அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால் ஊழியரின் ஊதியத்தில் ஒரு பகுதியை இதற்காக செலவிட வேண்டியநிலை உள்ளது.குறிப்பாக, ஜூன் 2000-இல் மளி கைக்காக ஒரு உணவிற்கு அனுமதிக்கப் பட்ட நாலரை பைசா என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் டிசம்பர் 2002ல் ஒன்பது பைசாவாக உயர்த்தப் பட்டது. ஆனால், 2002க்கு பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக விலைவாசி பல மடங்கு கடுமையாக உயர்ந்தபிறகும் இதற்கான செலவின தொகையை அரசு உயர்த்தி தரவில்லை. மேலும் 2007க்குப் பிறகு அனைத்து பொருட்களின் விலை யும் பல மடங்கு உயர்ந்த நிலையில், வழங் கப்படும் உணவு மேலும் தரமுள்ளதாக அமைய உணவு ஒன்றுக்கு தயாரிப்பு செல வின தொகையினை ரூ.2 ஆக உயர்த்தி வழங்கிட கோருகிறோம்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் என்பது ஒட்டுமொத்த ஊழியர்களின் பணி பாதுகாப்பிற்காகவும் பொருளாதார முன் னேற்றத்திற்காகவும் பாடுபட கூடியதும், ஒற்றுமையையும், தேசிய ஒருமைப்பாட் டையும் உருவாக்கும் நோக்கங்களையும் குறிக்கோளையும் கொண்ட அமைப்பு. எந்தவொரு கட்சியின் சார்பாகவும் செயல் படுவது அல்ல. தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக அரசை வலி யுறுத்தி நடத்தப்படும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை, அரசை எதிர்த்து நடத்தப்படும் கிளர்ச்சி என்று கூறுவதும், போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பிக் கப்படுவதும், கட்சி கண்ணோட்டத்துடன் நடத்தப்படும் போராட்டம் என்று கூறி, போராடும் ஊழியர்களுக்கு அரசியல் சாயம் பூசி போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியும் பிரச்சனைக்கு தீர்வாகாது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, போராடும் ஊழியர்களின் சங்கத் தலைமையை அழைத்துப் பேசி பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Friday, July 2, 2010

விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் சார்பில் சாத்தியமான இடங்களில் இரண்டாம் தேதி அல்லது ஐந்தாம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அரசுஊழியர் சங்கத்தின் மாநில மையம் அறைகூவல் !

மத்திய அரசு பெட்ரோல் விலையை ரூபாய் 3.50 டீசல் விலையை ரூபாய் 2 கியாஸ் விலை ரூபாய் 35 என உயர்த்தியுள்ளது அது மட்டும் இல்லாமல் பெட்ரோலிய பொருட்களின் விலையை இனி பெட்ரோலிய நிறுவனங்களே உயர்த்திக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் . எனவே இந்த விலை உயர்வை கண்டித்து வரும் சூலை 2 அல்லது 5 தேதிகளில் சாத்தியமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திட அரசுஊழியர் சங்கத்தின் மாநில மையம் அறைகூவல் விடுத்துள்ளது.

இரா தமிழ்செல்வி

மாநிலத்தலைவர்

பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம் ஏன் ?

விலை உயர்வும்! விளம்பரம் சொல்லும் உண்மையும்!
-க.ராஜ்குமார்-


நன்றி - தீக்கதிர் - 30-06-10


நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், கடந்த 25.06.2010 அன்று கூடிய அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2ம், மண்ணெண் ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 எனவும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 எனவும் விலை உயர்த்தி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, இனி பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ளவும்; தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை தனியார் கையில் போய் சிக்கியுள்ளது. அவர்கள் நினைத்தபோது நினைத்தவாறு விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்துவிட்டது.


பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வினை தொடர்ந்து, மத்திய அரசின் பெட்ரோலியத் துறை நாடு முழுவதும் செய்தித்தாள்களில் ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில் அண்டை நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலையுடன் இந்திய நாட்டில் (தில்லி) உள்ள விலையையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய விளம்பரம் வெளியிடுவது மத்திய அரசில் இதுவே முதல் முறை என்றாலும், தமிழ்நாட்டில் இது ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலையாகும். போக்குவரத்துக் கட்டணம் உயர்த்துகின்ற நேரங்களில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்வது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாகும். மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ள விளம்பரத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள எரிபொருள்களின் விலை விபரம் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவு என்று சொல்லவருகிறது மத்திய அரசு. இ;ந்த விளம்பரத்தில் கியாஸ் சிலின்டர் ஒன்றிற்கு அரசு ரூ.225 மானியமும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12-ம் மானியமும் வழங்குவதாகவும் இதனால் ஆண்டொன்றிற்கு மத்திய அரசிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என கணக்கு காட்டியுள்ளது. இந்திய நாட்டில் 11 கோடியே 50 லட்சம் குடும்பங் கள் சமையல் எரிவாயுவினை பயன் படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் 94 கோடி லிட்டர் மண்ணெண்ணெய் ஏழை-எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விபரங்களும் அதே விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன .

இந்திய நாட்டின் ஜனத்தொகையில் 50 விழுக்காடு மக்களுக்கு ஆண்டொன்றிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்குவதை சுமையாக விளம்பரப்படுத்தியுள்ள மத்திய அரசு, சென்ற ஆண்டு ஒரே ஒரு நபருக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இதே அளவு தொகையை மீட்புத் தொகையாக வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. அம்பானி குடும்பத்தினரை காப்பாற்ற துடிக்கும் மத்திய அரசு, இந்நாட்டு ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களை சுமையாக கருதுவது ஏன்?மத்திய அரசு, சுட்டிக்காட்டியுள்ள நாடுகளின் எண்ணெய் சந்தையுடன் இந்திய நாட்டு எண்ணெய் சந்தையை ஒப்பிட்டு நோக்கினால், அந்நாடுகளின் ஒட்டுமொத்த சந்தையை காட்டிலும் இந்திய எண்ணெய் சந்தை மிகப்பெரியது. மேலும் இந்த நான்கு நாடுகளிலும் உள்நாட்டு பிரச்சனைகளால் ஒரு நிலையற்றத்தன்மை நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. இந்த நாடுகளுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்க மத்திய அரசு முனைவது விந்தையானது.

கூட்டணிக் கட்சிகளின் கடமை

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள மாநிலக்கட்சிகள், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விலை உயர்வு முடிவாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான முடிவாக இருந்தாலும் அவைகளை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதரிப்பதும், இந்த முடிவுகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன், மத்திய அரசிற்கு முடிவினை மறுபரிசீலனை செய்ய கடிதம் எழுதுவதும் விந்தையானது. இக்கட்சிகள் மேற்கொண்டு வரும் இரட்டை நிலைபாட்டினை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது உடனடி வேலையாகும். தற்போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கு அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் ஒருமித்த குரலில் ஒப்புதல் தந்துள்ளனர். தமிழக முதல்வரோ பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை பற்றி குறிப்பிடுகையில், தமிழக அரசு தெரிவித்த கருத்துக்களை முழுமையாக புறக்கணிக்காமல், உத்தேசித்திருந்த விலை உயர்வைவிட ஓரளவு குறைத்தே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என ஆறுதல் கூறியுள்ளார். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விலை ஏற்றத்தில் ஒரு ஆதாயமும் உண்டு. எரிபொருள்களின் மீது மாநில அரசுகள் விதித்துவரும் வரி வருமானம் உயரவும் செய்வதால், இந்த கட்சிகள் எரிபொருள்களின் விலை ஏறும்போது கண்டும் காணாமல் இருக்கின்றன. கடந்த முறை இதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 ஆட்சிக்கு இடது சாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் தடுத்துவந்தனர் என்பதை மக்கள் அறிவர். ஆனால் இன்றோ பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த இனி அமைச்சரவைக் குழுக் கூட கூட வேண்டியதில்லை. எண்ணெய் நிறுவனங்களின் உரிமையாளர்களே விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கிவிட்டது.