கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் (10-02-2011) வேலை நிறுத்தம்
அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலபிரதிநிதித்வப் பேரவையில் முடிவு
- அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்
- ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும்
- மத்திய அரசு வழங்கியது போல் போக்குவரத்துப் படி மற்றும் வீட்டு வாடகைப்படி போனஸ் ஆகியவை வழங்க வேண்டும்
- புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டம் அமல்படுத்திட வேண்டும்
- தனியார் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் மருத்துவ காப்பிட்டு திட்டத்தை மாநில அரசே ஏற்று நடத்திட வேண்டும்
-தொழில் நுட்ப பணியாளர்களுக்கு மத்திய அரசிக்கினையான ஊதியம் வழங்கவேண்டும்
- பணி நீக்கம் செய்யப்பட சத்துணவு சங்கத்தின் தலைவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்
-சத்துணவு அங்கன்வாடி மக்கள் நலப்பணியாளர்கள். ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு ஊதியக்குழுவால் நிர்ணயம் செய்யப்பட ஊதியம் வழங்கவேண்டும்
-அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிருவாகிகளுடன் முதல்வர் முன்னிலையில் அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்
-அரசு ஊழியர் சங்கத்திற்கு முதல்வர் அறிவித்தப்படி அங்கிகாரம் வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10-2-11 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பிர் வெற்றிபெறச் செய்வீர்
இரா தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்
Monday, January 10, 2011
தமிழக அரசு காலிப்பணியிடங்களை உண்மையில் நிரப்புகிறதா ?
வேலைவாய்ப்பு: சொன்னதும் செய்ததும்
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 3-01-11
தமிழக முதல்வர், சமீபத்தில், வேலை வாய்ப்பு அன்றும் இன்றும் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட் டில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 40 நபர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட் டுள்ளார். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பகத் தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த அறிக்கையை கண்டு ஏமாற்றம் அடைந்துள் ளனர். மக்களை திசை திருப்ப இந்த அறிக் கை வெளியிடப்பட்டுள்ளது என்றாலும் இத னால் வேலைக்காக காத்திருக்கும் இளை ஞர்கள் இந்த அரசின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.
மறைமுகமான பணி நியமனத் தடை ஆணை
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறை களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்கு றுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன், காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக மறைமுகமான ஒரு தடை ஆணையை பிறப் பித்தது. (ஆணை எண். 91. ப.ம.நி.சீ.து.நாள் 6-07-2006) இந்த ஆணையை கண்டவுடன் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆணையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
கடந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் பணி நியமனத் தடை ஆணை 212 ப.ம.நி.சீ. தி.து. நாள் 29.11.2001 விலக்கிக்கொள்ளப்பட்டு, அரசு ஆணை, 14 ப.ம.நி.சீ.தி.து நாள் 21.02. 2006ல் வெளியிடப்பட்டது. இந்த ஆணை, பணி நியமனத் தடை ஆணைக்கு முன் இருந்த நிலையில் காலிப்பணியிடங்களை துறைத்தலைவர்கள் நிரப்பிட அதிகாரம் அளித்தது. ஆனால் அரசு ஆணை எண். 91ல் ஸ்டாப் கமிட்டியின் முன் அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட ஸ்டாப் கமிட்டி, துறைத் தலைவர்களின் பரிந்துரையை பரிசீலனை செய்து காலிப்பணியிடங்களில் ஒரு குறிப் பிட்ட விழுக்காட்டை கலைத்து ஆணை யிட்டு வருகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் வேளாண்மைத்துறை, தொழிலாளர் நலத் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல் வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான பணி யிடங்கள் கலைக்கப்பட்டுள்ளன. அரசு இதை மறுக்க முடியுமா? தற்போதும் அரசு ஆணை 123ல் பணியிடங்களை நிரப்பிட துறைத் தலைவர்களின் அதிகார வரம்பை சுருக்கி ஆணையிடப்பட்டுள்ளது உண்மை யல்லவா?
காலிப்பணியிடங்கள்
இன்றும் பொது சுகாதாரத்துறையில் சுகா தார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் 5000க்கும் மேற் பட்டவை காலியாகவுள்ளன. வருவாய்த்துறை யில் மக்களின் அன்றாடப் பணிகளை மேற் கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர் பணி யிடங்கள் 3000க்கும் மேலாக காலியாக உள் ளன. இதே துறையில் உதவியாளர் நிலையில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி யாக உள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் மற் றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியா ளர் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. துணை முதல்வரின் பொறுப்பில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளர் நிலையில் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஊராட்சி ஒன்றி யங்களில் அரசுப் பணிகள் தேக்கமடைந்துள் ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வரு வாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையி லேயே பணியிடங்கள் காலியாக வைக்கப்பட் டுள்ளன என்றால், ஏனைய துறைகளில் கேட்கவே வேண்டாம். அரசிற்கு பெரும்பான் மையான வருவாயை ஈட்டித்தரும் வணிக வரித்துறையில் 3000க்கும் மேற்பட்ட பணி யிடங்கள் அனைத்து நிலைகளிலும் காலி யாகவுள்ளன. தொழிலாளர் நலத்துறையில் 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. நீதித்துறையில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. வேலைவாய்ப்பகத்தில் சரிபாதி பணியிடங் கள் காலியாகவுள்ளதால் வேலைவாய்ப்பிற் காக பதிவு செய்யவரும் இளைஞர்களும் நிவா ரணம் பெறவரும் இளைஞர்களும் நாள் கணக் கில் காத்திருக்க வேண்டியதாகவுள்ளது.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளி லும் தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளன. இவ்வளவு ஏன்? கோட் டையில் உள்ளஅரசின் தலைமைச் செயல கத்தில் 30 சதவீதத்திற்கும் மேலான பணி யிடங்கள் காலியாகவுள்ளன. அரசுப்பணியா ளர்களை நியமனம் செய்யும் பணியில் ஈடு பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்திலும் 30 சதவீதத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாகவுள்ளன. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடி யாது என்பது முதல்வருக்கு தெரியாதா?
நிரப்பப்பட்ட பணியிடங்கள்
முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ள இலட்சக்கணக்கான பணியிடங் களில் முறையான ஊதியத்தின் கீழ் பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு சில ஆயிரம்தான்! மற்றவை தொகுப்பூதி யம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என விதவிதமாக ஊதியம் நிர்ணயம் செய்து உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கப்பட் டுள்ளது என்பதுதான் உண்மை.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றிவரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன் வாடி ஊழியர்களுக்கு சொற்பத் தொகையை உயர்த்தி, ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத் தையே மூன்றாக பிரித்து அதற்கு சிறப்பு கால முறை ஊதியம் என பெயரிட்டு இந்த ஆட்சி யில் அவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தைப் போல் கணக்கு காட்டி ஏமாற்ற முயற்சி நடைபெற்றுள்ளது. ஏமாறப்போவது மக்கள் அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தேர்தல் பணிகள் பாதிக்கப்படுவதால், வருவாய்த்துறையில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் 2500 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பிட ஆணையிடப்பட் டது. அதன் தொடர் நடவடிக்கையே இந்த ஆட்சியில் தேர்வு நடத்தப்பட்டு, கிராம நிர் வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்ட னர். இதற்கு பிறகு இன்று 3000க்கும் மேற் பட்ட பணியிடங்களை நிரப்பிட அரசு ஆற அமர நடவடிக்கை எடுத்து, தேர்வாணையத் தால் தேர்வு நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி தேர்வு நடைபெற்று பணி நியமனம் செய்வதற் குள் இன்னும் 3000 பணியிடங்கள் காலியாகி விடும். ஆக எப்பொழுதும் 3000 பணியிடங் கள் காலியாக வைத்திருப்பதே அரசின் நோக் கமாக உள்ளது.
கடந்த ஆட்சியில் தொகுப்பூதிய அடிப் படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள், முறையான ஊதி யத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பணிநியமனத்தின்போதே அன் றைய அரசு முதலில் 5 ஆண்டுகளில் முறை யான ஊதியத்தின் கீழ் கொண்டுவரப்படுவார் கள் என்றும், பின்னர் 3 ஆண்டுகளில் முறை யான ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படு வார்கள் என்றும் ஆணை பிறப்பித்திருந்ததை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகின்றனர் போலும்.
கடந்த 20 ஆண்டுகளாக எரிசக்தித்துறை யில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்த வர்களுக்கு பிராவிடன்ட் பண்ட் ரூ.400 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும் என்று சிஐடியு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கில் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந் தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றது மட்டுமல்லாமல், அரசிற்கு ஆதர வான சங்கங்களை வைத்து ஒப்பந்த ஊழியர் கள் படிப்படியாக மஸ்தூர்களாக ஹெல்பர்க ளாக நியமனம் செய்யப்படுவார்கள் என உடன்பாடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அரசு, அதை தனது சாதனை யாக வெளிப்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
வேலைச் சந்தைகள்
வேலைச்சந்தைகள் மூலமாக இலட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங் கப்பட்டது போலும், இன்னும் சில ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் முதல்வரின் அறிக்கை சுட்டிக்காட்டி யுள்ளது. மாவட்டங்களில் நடைபெற்ற வேலைச் சந்தைகளில் பங்கேற்று ஏமாற்றம டைந்துள்ள இலட்சக்கணக்கான இளைஞர் கள் முதல்வரின் அறிக்கையை கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். எந்தெந்த நிறுவனங் களில் எத்தனை ஆயிரம் பணியிடங்கள் நிரப் பப்பட்டன என்பதை அவர்கள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவருகின்ற வேளையில், பணியாற்றி வரும் ஊழியர்கள் பணியிழந்து வருகின்ற நிலையில், முதல்வரின்அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந் துள்ளது. தொண்டறம் பேணும் அமைப்புகளு டன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மேற் கொண்ட முயற்சிக்கு அறிக்கையில் சுட்டிக் காட்டும் அளவிற்கு வேலை வாய்ப்பு வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரும் என்றால், அரசின் வேலைவாய்ப்புத் துறையே ஏன் அந்தப் பணியினை தொண்டறம் பேணும் அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தக்கூடாது? அதற்கேற்றவாறு அரசு சட்டம் இயற்ற முன்வருமா? இடஒதுக்கீடு மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண்கள் போன்ற சிறப்பு ஒதுக் கீடு இத்தகைய வேலைச்சந்தைகளில் கிடைக்க அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கிட முன் வர வேண்டும்.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளா தாரப் பின்னடைவு இன்று வேலையின்மை யை அதிகரித்துவிட்டது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ள நிலை யில், வெறும் புள்ளி விபரங்கள் பயன் அளிக் காது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வேலை வாய்ப்பினை உரு வாக்கிட அரசு முன்வரவேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

Subscribe to:
Posts (Atom)